தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-61

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

61. ‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?’ என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது.

நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் ‘இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்’ என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘பேரீச்சை மரம்’ என்றார்கள்’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :3


بَابُ قَوْلِ الْمُحَدِّثِ حَدَّثَنَا أَوْ أَخْبَرَنَا وَأَنْبَأَنَا

وَقَالَ لَنَا الْحُمَيْدِيُّ : كَانَ عِنْدَ ابْنِ عُيَيْنَةَ حَدَّثَنَا وَأَخْبَرَنَا وَأَنْبَأَنَا وَسَمِعْتُ وَاحِدًا .

وَقَالَ ابْنُ مَسْعُودٍ : حَدَّثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ .

وَقَالَ شَقِيقٌ عَنْ عَبْدِ اللهِ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَةً .

وَقَالَ حُذَيْفَةُ : حَدَّثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَيْنِ .

وَقَالَ أَبُو الْعَالِيَةِ : عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ .

وَقَالَ أَنَسٌ : عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ .

وَقَالَ أَبُو هُرَيْرَةَ : عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِيهِ عَنْ رَبِّكُمْ عَزَّ وَجَلَّ

حَدَّثَنَا قُتَيْبَةُ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا ، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ ، فَحَدِّثُونِي مَا هِيَ؟ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي. قَالَ عَبْدُ اللهِ: وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ ، فَاسْتَحْيَيْتُ. ثُمَّ قَالُوا: حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: هِيَ النَّخْلَةُ


Bukhari-Tamil-61.
Bukhari-TamilMisc-61.
Bukhari-Shamila-61.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ

قتيبة بن سعيد

இறப்பு: ஹிஜ்ரி 240

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா அல்லது அலீ

தந்தை பெயர்: ஸயீத்

வம்சம்: தகஃபீ

புனைப்பெயர்: அபூரஜாஃ

ஊர் பெயர்: பக்லான்

பயணித்த ஊர்கள்: புல்க், பக்லான், பக்தாத்

பிறப்பு: ஹிஜ்ரி 150

இறப்பு: ஹிஜ்ரி 240

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

குதைபா பின் ஸயீத் ரஹ் அவர்கள் அபூரஜாஃ என்ற குன்யாவுடன் அறியப்பட்டவர். இவர் ஹிஜ்ரி 150ல் பிறந்து ஹிஜ்ரி 240ல் மரணமடைந்தார். இமாம் மாலிக், லைஸ் பின் ஸஅத், ஹம்மாத் பின் ஸைத், ஸுஃப்யான் பின் உயைனா போன்ற பல அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, அஹ்மத் பின் ஹன்பல் போன்ற இமாம்கள் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம், நஸாயீ போன்ற அறிஞர்கள் இவரை மிகப் பலமானவர் என்று கூறியுள்ளனர். இவர் ஹதீஸ்களைப் பாதுகாப்பதில் மிக உறுதியானவராகவும், சுன்னாவின் மீது நிலைத்தவராகவும் இருந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மாலிக் இமாம், லைஸ் பின் ஸஅத், அப்துல்லாஹ் பின் லஹீஆ, ஹம்மாத் பின் ஸைத், ஸுஃப்யான் பின் உயைனா, ஷரீக் பின் அப்துல்லாஹ் அன்நக்ஈ, கலஃப் பின் கலீஃபா, பக்ர் பின் முத்ர், ஜரீர் பின் அப்துல்ஹமீத் அர்ராஸீ, அபூஅவானா அல்வத்தாஹ் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், யஸீத் பின் ஸுரைஃ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஸ்லிம் இமாம், அபூதாவூத், இமாம் திர்மிதீ, இமாம் நஸாயீ, அஹ்மத் பின் ஹன்பல், அபூபக்ர் பின் அபூஷைபா, முஹம்மத் பின் யஹ்யா அத்தஹ்லீ, அலீ பின் அல்மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம் அர்ராஸீ, அபூ ஸுர்ஆ அர்ராஸீ

வேறு பெயர்கள்: குதைபா பின் ஸயீத், அபூரஜாஃ


ஆதாரம்: muslimscholars.info (30367) · Should verify

இஸ்மாயீல் பின் ஜஅஃபர்-அபூஇஸ்-அல்ஸாரீஹாக்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் தீனார்-அல்குரைஷீ

அப்துல்லாஹ் பின் தீனார்-அல்குரைஷீ-அல்மதனீ (ரஹ்) – 'Abdullah bin Dinar

இறப்பு: ஹிஜ்ரி 127, மதீனா

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் தீனார்

தந்தை பெயர்: தீனார்

வம்சம்: பனூ அதீ கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 127, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் தீனார் ரஹ் அவர்கள் தாபிஈ தலைமுறையைச் சேர்ந்த பலமான ஹதீஸ் அறிவிப்பாளர் ஆவார். இவர் ஹிஜ்ரி 127 இல் மதீனாவில் மரணமடைந்தார். இப்னு உமர் ரலி, அனஸ் பின் மாலிக் ரலி போன்ற நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

மாலிக் இமாம், ஸுஃப்யான் பின் உயைனா போன்றோர் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவரைப் பல அறிஞர்கள் பலமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): இப்னு உமர், அனஸ் பின் மாலிக், ஸுலைமான் பின் யஸார், நாஃபிஃ, தக்வான் அபூ ஸாலிஹ் அஸ்ஸம்மான் அஸ்ஸய்யாத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மாலிக் இமாம், ஸுஃப்யான் பின் உயைனா, யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, ஸுஹைல் பின் அபூஸாலிஹ், முஹம்மத் பின் அஜ்லான், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸஃப்வான் பின் ஸுலைம் அல்மதனீ, உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ், மூஸா பின் உக்பா, இஸ்மாயீல் பின் ஜஃபர் பின் அபூ கஸீர், அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார், ஸுலைமான் பின் பிலால் அத்தைமீ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் தீனார்


ஆதாரம்: muslimscholars.info (11183) · Should verify

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

عبد الله بن عمر بن الخطاب العدوي

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப்

தந்தை பெயர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

வம்சம்: குறைஷி, பனூ அதீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 10, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு உமர் (ரலி) இரண்டாவது கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மகனும், நபித்தோழரும் ஆவார். சிறு வயதிலேயே தம் தந்தையுடன் இஸ்லாத்தை ஏற்று, அவருடன் ஹிஜ்ரத் செய்தார். சிறுவராக இருந்ததால் உஹுத் போரில் அனுமதிக்கப்படவில்லை; கந்தக் போரிலும் அதற்குப் பின் நடந்த போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார்.

ஹதீஸிலும் மார்க்கச் சட்டத்திலும் முன்னணி அறிஞராக இருந்தார்; இறையச்சம், நேர்மை, நபிவழிச் செய்திகளில் ஆழ்ந்த அறிவு ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர். உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டு மக்காவில் மரணித்தார் என்று பலர் கூறியுள்ளனர்; ஹிஜ்ரி 73 என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உமர் பின் அல்கத்தாப் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி), அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி), பிலால் பின் ரபாஹ் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸுஹைப் பின் ஸினான் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆஇஷா பின்த் அபூபக்ர் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்), நாஃபிஉ (ரஹ்), ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), காஸிம் பின் முஹம்மத் (ரஹ்), வாகித் பின் அப்துல்லாஹ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஹம்ஸா பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஸைத் பின் அப்துல்லாஹ் (ரஹ்), பிலால் பின் அப்துல்லாஹ் (ரஹ்)

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் உமர், இப்னு உமர் (ரலி), அபூ அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (18) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.