பாடம் : 109
இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது.
‘நபி (ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.219
இஸ்மாயீல் இப்னு காலித் அல்பஜலீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான், இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், ‘தாங்கள் நபி (ஸல்) அவர்களின் புதல்வர் இப்ராஹீம் (ரலி) அவர்களைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘(ஆம், பார்த்திருக்கிறேன். எனினும்,) அவர் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இறைத்தூதர் ஒருவர் இருப்பார் என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டிருந்தால், நபி (ஸல்) அவர்களின் புதல்வர் (இப்ராஹீம் (ரலி) உயிர் வாழ்ந்திருப்பார். ஆனால், முஹம்மத் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் எந்த இறைத்தூதரும் இல்லை (என்பதே இறைவனின் முடிவாகும்.)
Book : 78
(புகாரி: 6194)بَابُ مَنْ سَمَّى بِأَسْمَاءِ الأَنْبِيَاءِ
وَقَالَ أَنَسٌ: «قَبَّلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِبْرَاهِيمَ، يَعْنِي ابْنَهُ»
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ
قُلْتُ لِابْنِ أَبِي أَوْفَى: رَأَيْتَ إِبْرَاهِيمَ ابْنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «مَاتَ صَغِيرًا، وَلَوْ قُضِيَ أَنْ يَكُونَ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيٌّ عَاشَ ابْنُهُ، وَلَكِنْ لاَ نَبِيَّ بَعْدَهُ»
சமீப விமர்சனங்கள்