தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6474

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23

நாவைப் பேணிக் காத்தல் ளநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ன அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும். அல்லாஹ் கூறுகின்றான்: மனிதன் எந்தச் சொல்லை மொழிந் தாலும் அதைக் கண்காணித்துப் பதிவு செய்யக்கூடிய(வான)வர் அவனுடன் இல்லாமலிருப்பதில்லை. (50:18)

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத(ன நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத(ன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

என ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

Book : 81

(புகாரி: 6474)

بَابُ حِفْظِ اللِّسَانِ

وَقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ» وَقَوْلِهِ تَعَالَى: {مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ} [ق: 18]

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، سَمِعَ أَبَا حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ»


Bukhari-Tamil-6474.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6474.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உமர் பின் அலீ —> அபூஹாஸிம் —> ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-22823 , புகாரி-64746807 , திர்மிதீ-2408 , …

இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22757 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.