ஆறு காரியங்களைச் செய்வதாக நீங்கள் எனக்கு உத்திரவாதம் தந்தால் உங்களுக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
1.பேசினால் உண்மையே பேசுங்கள்!
2.வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்!
3.அமானிதத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்!
4.கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்!
5.பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்!
6.கைகளை அநீதம் இழைப்பதை விட்டும் தடுத்துக் கொள்ளுங்கள்!
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22757)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْهَاشِمِيُّ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنِ الْمُطَّلِبِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ: اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ، وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ، وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ، وَغُضُّوا أَبْصَارَكُمْ، وَكُفُّوا أَيْدِيَكُمْ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22757.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22144.
إسناد ضعيف لأن به موضع انقطاع بين المطلب بن عبد الله المخزومي وعبادة بن الصامت الأنصاري
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-44647-முத்தலிப் பின் அப்துல்லாஹ் அவர்களுக்கும், உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- முத்தலிப் பின் அப்துல்லாஹ், நபித்தோழரிடம் செவியேற்றதாக நமக்கு தெரியவில்லை என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார். மேலும் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவர் அனஸ் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று கூறியதாக தாரிமி இமாம் கூறியுள்ளார். அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களின் வழியாக இருவகையான கருத்துக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. சில நபித்தோழர்களிடம் ஹதீஸை கேட்டுள்ளார். 2 . எந்த நபித்தோழரிடமும் ஹதீஸை கேட்கவில்லை. அபூஸுர்ஆ அவர்கள், இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் செவியேற்றிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/ 93, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1027)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்றும் முர்ஸலாக அறிவிப்பவர் என்றும் கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/949 ) - என்றாலும் இவர் நபித்தோழரை விட்டுவிட்டு அறிவிப்பவர் என்பதே உண்மை. தத்லீஸ் செய்பவர் அல்ல என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் கூறியுள்ளனர். - அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரைப் பற்றி, முத்தலிப் பின் அப்துல்லாஹ் , உபாதா (ரலி) அவர்களிடம் செவியேற்றிருந்தால் இது ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். (ஒரு முர்ஸல் செய்தியை மற்றொரு முர்ஸல் செய்தியின் மூலம் பலப்படுத்தலாம் என்ற ஹதீஸ்கலை விதியின் படி) இந்த செய்தியையும், இந்த கருத்தில் ஸுபைர் பின் அவாம் (ரலி) வழியாகவும், அனஸ் (ரலி) வழியாகவும் வந்துள்ள செய்திகளையும் இணைத்து சரியானது எனக் கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-1470)
- என்றாலும் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களிலும் குறை இருப்பதால் தற்கால அறிஞர்களில் சிலர் இந்த செய்தியை பலவீனமானது எனக் கூறுகின்றனர். ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள், இந்த செய்தியை ஹஸனுன் லிகைரிஹீ என்று குறிப்பிட்டுள்ளார்.
1 . இந்தக் கருத்தில் உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-22757 , இப்னு ஹிப்பான்-271 , ஹாகிம்-8066 , குப்ரா பைஹகீ-12691 ,
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4257 .
3 . ஸுபைர் பின் அவாம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21119 .
4 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8018 .
5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4925 .
6 . முஹம்மது பின் கஅபு (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஸ்ஸுஹ்து லிஹன்னாத் பின் ஸரீ-1376 . (இதன் அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழர் விடப்பட்டுள்ளார்)
….
(அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களின் நூல்களில் சில இடங்களில் இந்த செய்தியை ஹஸன் தரம் என்றும் சில இடங்களில் ஸஹீஹுன் லிகைரிஹீ என்றும் கூறப்பட்டுள்ளது)
இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:
பார்க்க: புகாரி-6474 ,
அஹ்மத்
புஹாரி
முஸ்லிம்
ஹதீஸ் புத்தகம் PDF அல்லது புத்தகம் நாங்கள் அடைய உதவுங்கள் …. அல்ஹம்துலில்லாஹ் ❤️