பாடம் : 2
நல்லோரின் கனவு
அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை நனவாக்கிவிட்டான்; அல்லாஹ் நாடினால்,நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சமற்றவர்களாகவும் தலையை மழித்துக் கொண்டவர்களாகவும் (அல்லது) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். (அப்போது எவருக்கும்) நீங்கள் பயப்படமாட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான். (அதன் பின்னர்) இதையன்றி நெருக்கமானதொரு வெற்றியையும் (உங்களுக்கு) அமைத்துக் கொடுத்தான். (48:27)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். 3
என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
Book : 91
(புகாரி: 6983)بَابُ رُؤْيَا الصَّالِحِينَ وَقَوْلِهِ تَعَالَى: {لَقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ الرُّؤْيَا بِالحَقِّ لَتَدْخُلُنَّ المَسْجِدَ الحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لاَ تَخَافُونَ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلَ مِنْ دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا}
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«الرُّؤْيَا الحَسَنَةُ، مِنَ الرَّجُلِ الصَّالِحِ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
4 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.—> இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, புகாரி-6983 , இப்னு மாஜா-3893 , …
ஸாபித் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, புகாரி-6994 ,முஸ்லிம்-, …
…
மேலும் பார்க்க: புகாரி-6990 .
சமீப விமர்சனங்கள்