தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-930

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 இமாம் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது யாரேனும் ஒருவர் (பள்ளிக்குள்) வரக் கண்டால் அவரை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு பணிக்க வேண்டும். 

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று கூறினார்கள்.
Book : 11

(புகாரி: 930)

بَابٌ: إِذَا رَأَى الإِمَامُ رَجُلًا جَاءَ وَهُوَ يَخْطُبُ، أَمَرَهُ أَنْ يُصَلِّيَ رَكْعَتَيْنِ

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ

جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ: «أَصَلَّيْتَ يَا فُلاَنُ؟» قَالَ: لاَ، قَالَ: «قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ»





இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

1 . பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-930 , முஸ்லிம்-,

2 . புகாரி-931 , 1166 , இப்னு மாஜா-1112 , 1114 , அபூதாவூத்-1115 , திர்மிதீ-510 , நஸாயீ-1395 , 1400 , 1409 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.