7088. நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது ஒன்றுத்திரட்டப்படும் இடம், உயிர்பிக்கப்படும் இடம். அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள். ஏனெனில் மற்ற பள்ளிகளில் தொழுவதை விட அங்கு ஒரு தொழுகை தொழுவது 1000 தொழுகைகளை தொழுததைப் போன்றதாகும் என்று கூறினார்கள்.
அதற்கு நாங்கள் அங்கு சென்று தொழமுடியாதவர் என்ன செய்வது? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அங்கு சென்று தொழமுடியாதவர் அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்பட்டும். அவ்வாறு அனுப்புபவர் அங்கு சென்றவர் போன்றவராவார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபூ ஸவ்தா
يَا رَسُولَ اللَّهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ قَالَ: «هُوَ أَرْضُ الْمَحْشَرِ وَأَرْضُ الْمَنْشَرِ ائْتُوهُ فَصَلُّوا فِيهِ، فَإِنَّ صَلَاةً فِيهِ كَأَلْفِ صَلَاةٍ»، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ فَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يَتَحَمَّلَ إِلَيْهِ؟ قَالَ: «مَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يَأْتِيَهُ فَلْيُهْدِ إِلَيْهِ زَيْتًا يُسْرَجُ فِيهِ، فَإِنَّ مَنْ أَهْدَى إِلَيْهِ زَيْتًا كَانَ كَمَنْ قَدْ أَتَاهُ»
சமீப விமர்சனங்கள்