Category: முஸ்னத் அபீ யஃலா

Musnad Abi Yala

Abi-Yala-2039

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2039.


أَنَّ امْرَأَةَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ سَعْدًا هَلَكَ وَتَرَكَ ابْنَتَيْنِ وَأَخَاهُ، فَعَمَدَ أَخُوهُ فَقَبَضَ مَا تَرَكَ سَعْدٌ، وَإِنَّمَا تُنْكَحُ النِّسَاءُ عَلَى أَمْوَالِهِنَّ. فَلَمْ يُجِبْهَا فِي مَجْلِسِهِ ذَلِكَ، ثُمَّ جَاءَتْ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ ابْنَتَا سَعْدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْعُ لِي أَخَاهُ» فَجَاءَهُ فَقَالَ: «ادْفَعْ إِلَى ابْنَتَيْهِ الثُّلُثَيْنِ، وَإِلَى امْرَأَتِهِ الثُّمُنَ، وَلَكَ مَا بَقِيَ»


Abi-Yala-6644

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

6644. இறைநம்பிக்கையாளர் தனது மண்ணறையில் சொர்க்கத்தின் பூங்காவில் இருப்பார். அவருக்காக அவரின் மண்ணறையை 70 முழம் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படும். மேலும் அதில் பவுர்ணமி இரவின் நிலவைப்போன்ற வெளிச்சம் ஏற்படுத்தப்படும்.

“எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்” (அல்குர்ஆன்: 20:124) என்ற இந்த இறைவசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்கு தெரியுமா? நெருக்கடியான வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும், அவனது தூதருமே மிக அறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.

இறைமறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை இந்த வசனம் குறிப்பிடுகிறது.

எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அவனுக்கு எதிராக தொண்னூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் அவை ஊதிக் கொண்டும், கொத்திக் கொண்டும், காயப்படுத்திக் கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْمُؤْمِنُ فِي قَبْرِهِ فِي رَوْضَةٍ، وَيُرَحَّبُ لَهُ قَبْرُهُ سَبْعِينَ ذِرَاعًا، وَيُنَوَّرُ لَهُ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، أَتَرَوْنَ فِيمَا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ»: {فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا، وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى} [طه: 124]، قَالَ: «أَتَدْرُونَ مَا الْمَعِيشَةُ الضَّنْكُ؟»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «عَذَابُ الْكَافِرِ فِي قَبْرِهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُ لَيُسَلَّطُ عَلَيْهِمْ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا، أَتَدْرُونَ مَا التِّنِّينُ؟»، قَالَ: «تِسْعَةٌ وَتِسْعُونَ حَيَّةً لِكُلِّ حَيَّةٍ سَبْعَةُ رُءُوسٍ يَنْفُخُونَ فِي جِسْمِهِ وَيَلْسَعُونَهُ، وَيَخْدِشُونَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Abi-Yala-1494

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1494. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெற்றோருக்கு நன்மை செய்பவருக்கு நல்வாழ்த்துகள்! அவருடைய வாழ்நாளை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக!

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் (ரலி)


«مَنْ بَرَّ وَالِدَيْهِ، طُوبَى لَهُ، زَادَ اللَّهُ فِي عُمُرِهِ»


Abi-Yala-2699

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2699.


«لَيْسَ الْمُؤْمِنُ الَّذِي يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ إِلَى جَنْبِهِ»


Abi-Yala-7088

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7088. நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது ஒன்றுத்திரட்டப்படும் இடம், உயிர்பிக்கப்படும் இடம். அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள். ஏனெனில் மற்ற பள்ளிகளில் தொழுவதை விட அங்கு ஒரு தொழுகை தொழுவது 1000 தொழுகைகளை தொழுததைப் போன்றதாகும் என்று கூறினார்கள்.

அதற்கு நாங்கள் அங்கு சென்று தொழமுடியாதவர் என்ன செய்வது? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அங்கு சென்று தொழமுடியாதவர் அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்பட்டும். அவ்வாறு அனுப்புபவர் அங்கு சென்றவர் போன்றவராவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபூ ஸவ்தா


يَا رَسُولَ اللَّهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ قَالَ: «هُوَ أَرْضُ الْمَحْشَرِ وَأَرْضُ الْمَنْشَرِ ائْتُوهُ فَصَلُّوا فِيهِ، فَإِنَّ صَلَاةً فِيهِ كَأَلْفِ صَلَاةٍ»، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ فَمَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يَتَحَمَّلَ إِلَيْهِ؟ قَالَ: «مَنْ لَمْ يَسْتَطِعْ أَنْ يَأْتِيَهُ فَلْيُهْدِ إِلَيْهِ زَيْتًا يُسْرَجُ فِيهِ، فَإِنَّ مَنْ أَهْدَى إِلَيْهِ زَيْتًا كَانَ كَمَنْ قَدْ أَتَاهُ»


Abi-Yala-3776

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3776. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர் ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத்தானே இருக்கின்றன? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: احْمِلْنِي، قَالَ: «إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ»، فَقَالَ: وَمَا أَصْنَعُ بِوَلَدِ نَاقَةٍ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَهَلْ تَلِدُ الْإِبِلُ إِلَّا النُّوقُ»


Abi-Yala-3947

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3947. தூதுத்துவமும், நபித்துவமும் நிறைவு பெற்றுவிட்டன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனால் மக்கள் திடுக்குற்றனர் (கவலையடைந்தனர்). அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்றாலும் (முபஷ்ஷராத்) நற்செய்திகள் (எஞ்சியுள்ளது). அது நபித்துவத்தின் (நாற்பத்தாறு) பங்குகளில் ஒரு பங்காகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«إِنَّ النُّبُوَّةَ وَالرِّسَالَةَ قَدِ انْقَطَعَتْ»، فَجَزِعَ النَّاسُ، قَالَ: «قَدْ بَقِيَتْ مُبَشِّرَاتٌ، وَهِيَ جُزْءٌ مِنَ النُّبُوَّةِ»


Abi-Yala-2219

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2219.


«إِذَا كُنْتُمْ فِي الْخِصْبِ فَأَمْكِنُوا الرُّكُبَ أَسِنَّتَهَا، وَلَا تَعْدُوا الْمَنَازِلَ، وَإِذَا كُنْتُمْ فِي الْجَدْبِ فَاسْتَنْجُوا، وَعَلَيْكُمْ بِالدُّلُجَّةِ فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ، فَإِذَا تَغَوَّلَتْ لَكُمُ الْغِيلَانُ فَبَادِرُوا بِالْأَذَانِ، وَلَا تُصَلُّوا عَلَى جَوَادِّ الطَّرِيقِ، وَلَا تَنْزِلُوا عَلَيْهَا فَإِنَّهَا مَأْوَى الْحَيَّاتِ وَالسِّبَاعِ، وَلَا تَقْضُوا عَلَيْهَا الْحَوَائِجَ فَإِنَّهَا الْمَلَاعِنُ»


Abi-Yala-3618

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3618.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது).

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«إِذَا أَخْصَبَتِ الْأَرْضُ فَانْزِلُوا عَنْ ظَهْرِكُمْ فَأَعْطُوهُ حَقَّهُ مِنَ الْكَلَأِ، وَإِذَا أَجْدَبَتِ الْأَرْضُ فَامْضُوا عَلَيْهَا بِنِقْيِهَا وَعَلَيْكُمْ بِالدُّلْجَةِ فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ»


Abi-Yala-1441

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1441.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَتَى خَيْبَرَ مَرَّ بِشَجَرَةٍ يُعَلِّقُ الْمُشْرِكُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ يُقَالُ لَهَا: ذَاتَ أَنْوَاطٍ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ فَقَالَ: ” اللَّهُ أَكْبَرُ، هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى لِمُوسَى: {اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ} [الأعراف: 138] لَتَرْكَبُنَّ سَنَةَ مَنْ كَانَ قِبَلِكُمْ


Next Page » « Previous Page