Category: முஸ்னத் அபீ யஃலா

Musnad Abi Yala

Abi-Yala-6555

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6555. ( அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி) )

 

முன் சென்ற ஹதீஸ் ( எண் 6554) , வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

 


بِمِثْلِ ذَلِكَ


Abi-Yala-6554

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Abi-Yala-1165

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1165. அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், பயணம் செல்லும் ஒரு மனிதரை வழியனுப்பினார்கள். அப்போது எங்கே செல்ல நாடுகிறீர்? என்று கேட்க, அந்த மனிதர் பைத்துல் மக்திஸ் என்று பதிலளித்தார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர” என்று கூறினார்கள்.


وَدَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا فَقَالَ لَهُ: «أَيْنَ تُرِيدُ؟» قَالَ: أُرِيدُ بَيْتَ الْمَقْدِسِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ مِائَةٍ فِي غَيْرِهِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامِ»


Abi-Yala-2378

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2378. யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ மலத் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«لَا يَنْظُرُ اللَّهُ إِلَى رَجُلٍ أَتَى رَجُلًا أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا»


Abi-Yala-6462

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6462. யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَلْعُونٌ مَنْ أَتَى النِّسَاءَ فِي أَدْبَارِهِنَّ»


Abi-Yala-6237

ஹதீஸின் தரம்: More Info

6237. கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.


«الْمُخْتَلِعَاتُ وَالْمُنْتَزِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ»


Abi-Yala-1437

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1437. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா (ரஹ்) அறிவித்தார்.

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி), கைஸ் இப்னு ஸஅத் (ரலி) ஆகியோர் காதிஸியாவில் ஓரிடத்தில் (அமர்ந்து) இருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுசெல்லப்பட்டது. உடனே அவர்கள் இருவரும் எழுந்தார்கள்.

அப்போது அவர்களிடம் ‘இது இந்நாட்டில் அபயம் பெற்ற (காஃபிரின்) ஜனாஸாவல்லவா?’ என்று கூறப்பட்டது. அதற்கு அவ்விருவரும், ‘நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா கொண்டுசெல்லப்பட்டபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது காஃபிரின் ஜனாஸா எனக் கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இவர் மனிதரில்லையா?’ எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.


كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ، وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمَرَّتْ بِهِمَا جِنَازَةٌ، فَقَامَا فَقِيلَ لَهُمَا: إِنَّمَا هُوَ مِنْ أَهْلِ الْأَرْضِ، فَقَالَا: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ، فَقِيلَ: إِنَّهَا جَنَازَةُ كَافِرٍ، فَقَالَ: «أَلَيْسَتْ نَفْسًا؟». قَالَ أَبُو يَعْلَى: وَجَدْتُ فِي كِتَابِي عَنْ عَلِيِّ بْنِ الْجَعْدِ، عَنْ شُعْبَةَ وَلَيْسَ عَلَيْهِ عَلَامَةُ السَّمَاعِ فَشَكَكْتُ فِيهِ


Abi-Yala-3624

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3624. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

…நபி (ஸல்) அவர்கள் எனக்கு கூறினார்கள் ” என்னுடைய அருமை மகனே நீ உன்னுடைய வீட்டாரிடத்தில் நுழையும் போது ஸலாம் சொல்லிக்கொள். அது உனக்கும் உன்னுடைய குடும்பத்தாருக்கும் பரகத்தாக அமையும்…

…அருமை சிறுவனே! தொழுகையில் திரும்பிப் பார்ப்பதை விட்டு உன்னை எச்சரிக்கின்றேன்.ஏனெனில் தொழுகையில் திரும்பிப் பார்ப்பது அழிவை ஏற்படுத்தும். அப்படி திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியமென்றால் உபரியான தொழுகையில் திரும்பிப் பார்த்துக்கொள். கடமையான தொழுகையில் திரும்பிப் பார்க்காதே!

 


قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَأَنَا ابْنُ ثَمَانِ سِنِينَ، فَأَخَذَتْ أُمِّي بِيَدِي فَانْطَلَقَتْ بِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ لَمْ يَبْقَ رَجُلٌ وَلَا امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ إِلَّا قَدْ أَتْحَفَتْكَ بِتُحْفَةٍ، وَإِنِّي لَا أَقْدِرُ عَلَى مَا أُتْحِفُكُ بِهِ، إِلَّا ابْنِي هَذَا فَخُذْهُ فَلْيَخْدُمْكَ مَا بَدَا لَكَ، فَخَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ، فَمَا ضَرَبَنِي ضَرْبَةً، وَلَا سَبَّنِي سَبَّةً، وَلَا انْتَهَرَنِي وَلَا عَبَسَ فِي وَجْهِي، وَكَانَ أَوَّلُ مَا أَوْصَانِي بِهِ أَنْ قَالَ: «يَا بُنَيَّ، اكْتُمْ سِرِّي تَكُ مُؤْمِنًا»، فَكَانَتْ أُمِّي وَأَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلْنَنِي عَنْ سِرِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا أُخْبِرُهُمْ بِهِ، وَمَا أَنَا بِمُخْبِرٍ سِرَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدًا أَبَدًا، وَقَالَ: «يَا بُنَيَّ، عَلَيْكَ بِإِسْبَاغِ الْوُضُوءِ يُحِبُّكَ حَافِظَاكَ وَيُزَادُ فِي عُمُرِكَ، وَيَا أَنَسُ بَالِغْ فِي الِاغْتِسَالِ مِنَ الْجَنَابَةِ، فَإِنَّكَ تَخْرُجُ مِنْ مُغْتَسَلِكَ وَلَيْسَ عَلَيْكَ ذَنْبٌ وَلَا خَطِيئَةٌ»، قَالَ: قُلْتُ: كَيْفَ الْمُبَالَغَةُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تَبُلُّ أُصُولَ الشَّعَرِ، وَتُنَقِّي الْبَشْرَةَ»، «وَيَا بُنَيَّ إِنِ اسْتَطَعْتَ أَنْ لَا تَزَالَ أَبَدًا عَلَى وُضُوءٍ فَإِنَّهُ مَنْ يَأْتِهِ الْمَوْتُ وَهُوَ عَلَى وُضُوءٍ يُعْطَ الشَّهَادَةَ»، «وَيَا بُنَيَّ إِنِ اسْتَطَعْتَ أَنْ لَا تَزَالَ تُصَلِّي، فَإِنَّ الْمَلَائِكَةَ تُصَلِّي عَلَيْكَ مَا دُمْتَ تُصَلِّي»، «وَيَا أَنَسُ إِذَا رَكَعْتَ فَأَمْكِنْ كَفَّيْكَ مِنْ رُكْبَتَيْكَ وَفَرِّجْ بَيْنَ أَصَابِعِكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ عَنْ جَنْبِيكَ»، «وَيَا بُنَيَّ إِنْ رَفَعْتَ رَأْسَكَ مِنَ الرُّكُوعِ فَأَمْكِنْ كُلَّ عُضْوٍ مِنْكَ مَوْضِعَهُ، فَإِنَّ اللَّهَ لَا يُنْظَرُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ لَا يُقِيمُ صُلْبَهُ بَيْنَ رُكُوعِهِ وَسُجُودِهِ»، ” وَيَا بُنَيَّ فَإِذَا سَجَدْتَ فَأَمْكِنْ جَبْهَتَكَ وَكَفَّيْكَ مِنَ الْأَرْضِ وَلَا تَنْقُرْ نَقْرَ الدِّيكِ وَلَا تُقْعِ إِقْعَاءَ الْكَلْبِ، – أَوْ قَالَ: الثَّعْلَبِ – «،» وَإِيَّاكَ وَالِالْتِفَاتَ فِي الصَّلَاةِ فَإِنَّ الِالْتِفَاتَ فِي الصَّلَاةِ هَلَكَةٌ فَإِنْ كَانَ لَا بُدَّ فَفِي النَّافِلَةِ لَا فِي الْفَرِيضَةِ «،» وَيَا بُنَيَّ وَإِذَا خَرَجْتَ مِنْ بَيْتِكَ فَلَا تَقَعَنَّ عَيْنُكَ عَلَى أَحَدٍ مِنْ أَهْلِ الْقِبْلَةِ إِلَّا سَلَّمْتَ عَلَيْهِ، فَإِنَّكَ تَرْجِعُ مَغْفُورًا لَكَ «،» وَيَا بُنَيَّ وَإِذَا دَخَلْتَ مَنْزِلَكَ فَسَلِّمْ عَلَى نَفْسِكَ وَعَلَى أَهْلِكَ «،» وَيَا بُنَيَّ إِنِ اسْتَطَعْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِي وَلَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لِأَحَدٍ فَإِنَّهُ أَهْوَنُ عَلَيْكَ فِي الْحِسَابِ «،» وَيَا بُنَيَّ إِنِ اتَّبَعْتَ وَصِيَّتِي فَلَا يَكُنْ شَيْءٌ أَحَبَّ إِلَيْكَ مِنَ الْمَوْتِ


Abi-Yala-4293

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4293. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு செய்த உபதேசங்கள் பின்வருமாறு:

அனஸே! நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது ஆயுள் அதிகமாக்கப்படும்.

அனஸே! நீ லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன்னுள்ள நல்லோர்களின் தொழுகையாகும்.

அனஸே! நீ உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக்கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.

அனஸே! நீ மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.

அனஸே! நீ இரவிலும், பகலிலும் அதிகமாக தொழுதுக்கொள். அதனால் உன்னை பாதுகாக்கும் வானவர்கள் உன்னை நேசிப்பர்.

அனஸே! நீ தூங்கும் போது உளூவுடன் தூங்கு. அதனால் அந்நிலையில் நீ மரணித்தால் ஷஹீத் எனும் அந்தஸ்தை அடைவாய்.

அனஸே! நீ சிறுவர்கள் மீது அன்பு செலுத்து, பெரியோர்களுக்கு மரியாதை கொடு.


أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أَنَسُ أَسْبِغِ الْوُضُوءَ يُزَدْ فِي عُمُرِكَ، يَا أَنَسُ صَلِّ صَلَاةَ الضُّحَى؛ فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ مِنْ قَبْلِكَ، يَا أَنَسُ سَلِّمْ عَلَى أَهْلِ بَيْتِكَ تَكْثُرْ حَسَنَاتُكَ، يَا أَنَسُ سَلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ، يَا أَنَسُ أَكْثِرِ الصَّلَاةَ بِاللَّيْلِ وَالنَّهَارِ يُحِبَّكَ حَافِظَاكَ، يَا أَنَسُ بِتْ وَأَنْتَ طَاهِرٌ، فَإِنْ مُتَّ مُتَّ شَهِيدًا، يَا أَنَسُ وَقِّرِ الْكَبِيرَ، وَارْحَمِ الصَّغِيرَ»


Abi-Yala-4183

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4183. அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், அனஸே! நீ அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது முழுமையாக செய். அதனால் உனது ஆயுள் அதிகமாக்கப்படும். மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது நன்மைகள் அதிகமாகும்.  நீ உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக்கொள். அதனால் உன்னுடைய வீட்டில் நன்மை அதிகமாகும். லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன்னுள்ள நல்லோர்களின் தொழுகையாகும் என்று கூறினார்கள்.

மேலும் கூறினார்கள்:

அனஸே! சிறுவர்கள் மீது அன்பு செலுத்து, பெரியோர்களுக்கு மரியாதை கொடு. அதனால் (சொர்க்கத்தில்) என்னோடு இருப்பாய்.


«يَا أَنَسُ، أَسْبِغِ الْوُضُوءَ يُزَدْ فِي عُمُرِكَ، سَلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي تَكْثُرْ حَسَنَاتُكَ، وَإِذَا دَخَلْتَ بَيْتَكَ فَسَلِّمْ عَلَى مَنْ لَقِيتَ مِنْ أَهْلِ بَيْتِكَ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ، وَصَلِّ صَلَاةَ الضُّحَى؛ فَإِنَّهَا صَلَاةُ الْأَوَّابِينَ قَبْلَكَ»، وَقَالَ: «يَا أَنَسُ، ارْحَمِ الصَّغِيرَ، وَوَقِّرِ الْكَبِيرَ، وَكُنْ مِنْ رُفَقَائِي»


Next Page » « Previous Page