Category: முஸ்னத் அபீ யஃலா

Musnad Abi Yala

Abi-Yala-4599

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4599. உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன் என்று (அல்லாஹ் கூறியதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ الرَّحِمَ شُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، مَنْ وَصَلَهَا وَصَلَهُ، وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ»


Abi-Yala-4446

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறைவன் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது) உறவானது, இறை அரியணையைப் பிடித்துக்கொண்டு, “என்னோடு ஒட்டி வாழ்பவனுடன் இறைவனும் உறவாடுவான். என்னை முறித்துக் கொள்பவனை இறைவனும் முறித்துக் கொள்வான்” என்று கூறியது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


الرَّحِمُ مُعَلَّقَةٌ بِالْعَرْشِ تَقُولُ: مَنْ وَصَلَنِي وَصَلَهُ اللَّهُ، وَمَنْ قَطَعَنِي قَطَعَهُ اللَّهُ


Abi-Yala-7392

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7392. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Abi-Yala-7394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7394. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Abi-Yala-7391

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7391. உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ»


Abi-Yala-2871

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2871. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.

மேலும் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) உள்ளவராக இருந்தார்.


قُلْتُ لِأَنَسٍ: أَكَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ قَتَادَةُ: وَكَانَ الْحَسَنُ يُصَافِحُ


Abi-Yala-4139

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4139. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بَيَدِ صَاحِبِهِ إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُجِيبَ دُعَاءَهُمَا وَلَا يَرُدَّ أَيْدِيَهُمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا»


Abi-Yala-4289

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4289. …


قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ إِذَا الْتَقَيْنَا؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَيَلْتَزِمُ بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «لَا»، قَالَ: فُيُصَافِحُ بَعْضُنَا بَعْضًا؟، قَالَ: «نَعَمْ»


Abi-Yala-4287

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4287. …


: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ إِذَا الْتَقَيْنَا؟ قَالَ: «لَا»، قَالَ: فَيَلْتَزِمُ بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «لَا»، قَالَ: فُيُصَافِحُ بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «تَصَافَحُوا»


Abi-Yala-1019

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1019. உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)


مَا مِنْ مُسْلِمٍ دَعَا اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى بِدَعْوَةٍ إِلَّا اسْتَجَابَ، مَا لَمْ يَكُنْ فِيهَا إِثْمٌ أَوْ قَطِيعَةُ رَحِمٍ، إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى خِصَالٍ ثَلَاثٍ: إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ، وَإِمَّا أَنْ يَدَّخِرَ لَهُ فِي الْآخِرَةِ، وَإِمَّا أَنْ يَدْفَعَ عَنْهُ مِنَ الشَّرِّ مَثَلَهَا “، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِذًا نُكْثِرُ؟ قَالَ: «اللَّهُ أَكْثَرُ»


Next Page » « Previous Page