Category: ஸுனன் அபூதாவூத்

Sunan Abu Dawud

Abu-Dawood-1609

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1609. நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ، مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلَاةِ، فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ، وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلَاةِ، فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ»


Abu-Dawood-1635

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

செல்வந்தர்களில் யார் ஸகாத் பொருளை பெற்றுக் கொள்ளலாம்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்)

1 . அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்.
2 . ஸகாத்தை வசூலிக்கும் பணியாளர்.
3 . கடன்பட்டவர்.
4 . தனது செல்வத்தைக் கொடுத்து ஸகாத் பொருளை விலைக்கு வாங்கிக்கொண்டவர்.
5 . ஏழையான அண்டைவீட்டார் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)

 


لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ: لِغَازٍ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ لِعَامِلٍ عَلَيْهَا، أَوْ لِغَارِمٍ، أَوْ لِرَجُلٍ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ لِرَجُلٍ كَانَ لَهُ جَارٌ مِسْكِينٌ فَتُصُدِّقَ عَلَى الْمِسْكِينِ، فَأَهْدَاهَا الْمِسْكِينُ لِلْغَنِيِّ


Abu-Dawood-4034

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4034. தூ-யஸன் என்ற மன்னர் 33 ஒட்டகங்கள் கொடுத்து வாங்கிய ஆடையை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ مَلِكَ ذِي يَزَنَ «أَهْدَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً أَخَذَهَا بِثَلَاثَةٍ وَثَلَاثِينَ بَعِيرًا، أَوْ ثَلَاثٍ وَثَلَاثِينَ نَاقَةً فَقَبِلَهَا»


Abu-Dawood-4012

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4012. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் வெட்ட வெளியில் கீழாடை இல்லாமல் குளிப்பதைப் பார்த்தார்கள். உடனடியாக மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள். பிறகு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படக் கூடியவனும் (தனக்கு) திரையேற்படுத்திக் கொள்பவனும் ஆவான். அவன் வெட்கத்தையும் திரையிட்டுக் கொள்வதையும் விரும்புகின்றான். உங்களில் ஒருவர் குளித்தால் அவர் திரையிட்டுக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَغْتَسِلُ بِالْبَرَازِ بِلَا إِزَارٍ، فَصَعَدَ الْمِنْبَرَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ»


Abu-Dawood-2382

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2382. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். எனினும் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَلَكِنَّهُ كَانَ أَمْلَكَ لِإِرْبِهِ»


Abu-Dawood-3687

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3687. போதை தரும் அனைத்தும் ஹராமாகும். எது ஃபரக் அளவு (சுமார் 7.5 கிலோ) சாப்பிட்டால் போதை தருமோ அதில் கையளவும் ஹராமாகும் என்று நபி (ஸல்) கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كُلُّ مُسْكِرٍ حَرَامٌ، وَمَا أَسْكَرَ مِنْهُ الْفَرْقُ فَمِلْءُ الْكَفِّ مِنْهُ حَرَامٌ»


Abu-Dawood-2339

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2339. ரமலானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.


اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ، فَقَدِمَ أَعْرَابِيَّانِ، فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا»، زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ،: «وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ»


Abu-Dawood-1438

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1438. இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا»


Abu-Dawood-1379

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1379. அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் சிறுவனாக இருந்த சமயம், பனூ ஸலமா கூட்டத்தாரின் சபையில் இருக்கும் போது லைலதுல் கத்ர் இரவு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21 ஆம் நாள் காலையில் நடந்தது.

(அன்றைய தினம்) நான் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். பிறகு நான் அவர்களின் வீட்டுவாசலில் நின்றுக் கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். (அவர்கள் என்னைக் கண்டு) வீட்டுக்குள் வா! என்று என்னை அழைத்தார்கள். நான் வீட்டுக்குள் நுழைந்தேன்.

அவர்களுக்கு இரவு உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டது. (நானும் சிறிது சாப்பிட்டேன்). அது குறைவாக இருந்ததால் நான் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் இதைக் கவனித்தார்கள்.

அவர்கள் சாப்பிட்டப்பின், “எனது செறுப்பை எடுத்துவா!” என்று கூறி எழுந்தார்கள். நானும் அவர்களுடன் எழுந்தேன். அப்போது நபி (ஸல்)  அவர்கள், “உமக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ஆம் (அல்லாஹ்வின் தூதரே!). லைலதுல் கத்ர் பற்றி கேட்டு வர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பினார்கள் என்று கூறினேன்.

அதற்கு, இது எத்தனையாவது

كُنْتُ فِي مَجْلِسِ بَنِي سَلَمَةَ وَأَنَا أَصْغَرُهُمْ، فَقَالُوا:: مَنْ يَسْأَلُ لَنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، وَذَلِكَ صَبِيحَةَ إِحْدَى وَعِشْرِينَ مِنْ رَمَضَانَ؟ فَخَرَجْتُ فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ، ثُمَّ قُمْتُ بِبَابِ بَيْتِهِ، فَمَرَّ بِي فَقَالَ: «ادْخُلْ»، فَدَخَلْتُ فَأُتِيَ بِعَشَائِهِ، فَرَآنِي أَكُفُّ عَنْهُ مِنْ قِلَّتِهِ، فَلَمَّا فَرَغَ، قَالَ: «نَاوِلْنِي نَعْلِي» فَقَامَ وَقُمْتُ مَعَهُ، فَقَالَ: «كَأَنَّ لَكَ حَاجَةً»، قُلْتُ: أَجَلْ، أَرْسَلَنِي إِلَيْكَ رَهْطٌ مِنْ بَنِي سَلَمَةَ، يَسْأَلُونَكَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، فَقَالَ: «كَمِ اللَّيْلَةُ؟» فَقُلْتُ: اثْنَتَانِ وَعِشْرُونَ، قَالَ: «هِيَ اللَّيْلَةُ»، ثُمَّ رَجَعَ، فَقَالَ: «أَوِ الْقَابِلَةُ»، يُرِيدُ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ


Abu-Dawood-50

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அருகில் இரண்டு பேர் இருந்தனர். அவ்விருவரில் ஒருவர் இன்னொருவரை விட மூத்தவராக இருந்தார். மூத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்விருவரில் பெரியவருக்கு பற்குச்சியைக் கொடுப்பீராக என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَنُّ وَعِنْدَهُ رَجُلَانِ ؛ أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فِي فَضْلِ السِّوَاكِ أَنْ كَبِّرْ ؛ أَعْطِ السِّوَاكَ أَكْبَرَهُمَا


Next Page » « Previous Page