Category: ஸுனன் அபூதாவூத்

Sunan Abu Dawud

Abu-Dawood-3251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3251. ஸஃத் பின் உபைதா (ரஹ்) கூறுகிறார்:

ஒரு மனிதர் கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறுவதை கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள், யார் அல்லாஹ் அல்லாதவரின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணைகற்பித்து விட்டார் என்று கூறியதாக (அவருக்கு) விளக்கம் கூறினார்…


قَالَ: سَمِعَ ابْنُ عُمَرَ، رَجُلًا يَحْلِفُ: لَا وَالْكَعْبَةِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ»


Abu-Dawood-1499

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1499. ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பல விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு விரலால், ஒரு விரலால் (இஷாரா-சைக்கினை செய்வீரா) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.


مَرَّ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ، فَقَالَ: «أَحِّدْ أَحِّدْ»، وَأَشَارَ بِالسَّبَّابَةِ


Abu-Dawood-3530

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3530. ஒரு மனிதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளன. எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகின்றது என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீயும், உனது செல்வமும் உன்னுடைய தந்தைக்கு உரியனவாகும். நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள் என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)


أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي مَالًا وَوَلَدًا، وَإِنَّ وَالِدِي يَحْتَاجُ مَالِي؟ قَالَ: «أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ، إِنَّ أَوْلَادَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ، فَكُلُوا مِنْ كَسْبِ أَوْلَادِكُمْ»


Abu-Dawood-753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

753. நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தனது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا»


Abu-Dawood-88

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43

ஒருவர் மலஜலத்தை அடக்கிக் கொண்டு தொழலாமா ?

88. அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்கள் ஹஜ் செய்வதற்கோ அல்லது உம்ராவுக் காகவோ ‎புறப்பட்டார்கள். அவர்களுடன் சென்றிருந்த மக்களுக்கு அவரே தொழுகை நடத்துவார். ‎ஒரு நாள் அவர் சுபுஹ் தொழுகை நடத்த தயாரானார். அப்போது அவர்களை நோக்கி, ‎உங்களில் ஒருவர் தொழுகை நடத்த முன் வாருங்கள். ஏனெனில் உங்களில் ‎ஒருவருக்கு அவர் தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டியது ‎ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்கு செல்வாராக! என்று அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்று இருக்கிறேன் என்று கூறிவிட்டு, ‎கழிப்பிடத்திற்கு சென்று விட்டார் என உர்வா பின் ஜூபைர் (ரலி) அவர்கள் தமது ‎தந்தை ஜுபைர் (ரலி) வழியாக அறிவிக்கிறார்.‎

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்களிடமிருந்து தன் தந்தைக்கு ஒருவர் ‎அறிவித்ததாகவும் பின் தன் தந்தையார் வழியாக ஹிஷாம் பின் உர்வா அறிவித்ததாக ‎உஹைப் பின் காலித், ஷுஐப் பின் இஸ்ஷாக் அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் ‎அதிகமான அறிவிப்பாளர்கள் ஜுஹைர் அறிவிப்பது போன்றே அறிவிக்கின்றனர்.‎

أَنَّهُ خَرَجَ حَاجًّا، أَوْ مُعْتَمِرًا وَمَعَهُ النَّاسُ، وَهُوَ يَؤُمُّهُمْ، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَقَامَ الصَّلَاةَ، صَلَاةَ الصُّبْحِ، ثُمَّ قَالَ: لِيَتَقَدَّمْ أَحَدُكُمْ وَذَهَبَ إِلَى الْخَلَاءِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَذْهَبَ الْخَلَاءَ وَقَامَتِ الصَّلَاةُ، فَلْيَبْدَأْ بِالْخَلَاءِ»،