தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-88

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43

ஒருவர் மலஜலத்தை அடக்கிக் கொண்டு தொழலாமா ?

அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்கள் ஹஜ் செய்வதற்கோ அல்லது உம்ராவுக் காகவோ ‎புறப்பட்டார்கள். அவர்களுடன் சென்றிருந்த மக்களுக்கு அவரே தொழுகை நடத்துவார். ‎ஒரு நாள் அவர் சுபுஹ் தொழுகை நடத்த தயாரானார். அப்போது அவர்களை நோக்கி, ‎உங்களில் ஒருவர் தொழுகை நடத்த முன் வாருங்கள். ஏனெனில் உங்களில் ‎ஒருவருக்கு அவர் தொழ ஆரம்பிக்கும் போது கழிப்பிடம் செல்ல வேண்டியது ‎ஏற்பட்டால் முதலில் அவர் கழிப்பிடத்திற்கு செல்வாராக! என்று அல்லாஹ்வின் தூதர் ‎‎(ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்று இருக்கிறேன் என்று கூறிவிட்டு, ‎கழிப்பிடத்திற்கு சென்று விட்டார் என உர்வா பின் ஜூபைர் (ரலி) அவர்கள் தமது ‎தந்தை ஜுபைர் (ரலி) வழியாக அறிவிக்கிறார்.‎

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அர்கம் அவர்களிடமிருந்து தன் தந்தைக்கு ஒருவர் ‎அறிவித்ததாகவும் பின் தன் தந்தையார் வழியாக ஹிஷாம் பின் உர்வா அறிவித்ததாக ‎உஹைப் பின் காலித், ஷுஐப் பின் இஸ்ஷாக் அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் ‎அதிகமான அறிவிப்பாளர்கள் ஜுஹைர் அறிவிப்பது போன்றே அறிவிக்கின்றனர்.‎

‎(இங்கு ஜுஹைர் அவர்களின் அறிவிப்பே இடம் பெற்றுள்ளது.)‎

‎(குறிப்பு: திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, முஅத்தா, அஹ்மது ஹாகிம் ஆகிய நூல்களிலும் ‎இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.)‎

(அபூதாவூத்: 88)

43- بَابٌ أَيُصَلِّي الرَّجُلُ وَهُوَ حَاقِنٌ؟

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ،

أَنَّهُ خَرَجَ حَاجًّا، أَوْ مُعْتَمِرًا وَمَعَهُ النَّاسُ، وَهُوَ يَؤُمُّهُمْ، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَقَامَ الصَّلَاةَ، صَلَاةَ الصُّبْحِ، ثُمَّ قَالَ: لِيَتَقَدَّمْ أَحَدُكُمْ وَذَهَبَ إِلَى الْخَلَاءِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَذْهَبَ الْخَلَاءَ وَقَامَتِ الصَّلَاةُ، فَلْيَبْدَأْ بِالْخَلَاءِ»،

قَالَ أَبُو دَاوُدَ: رَوَى وُهَيْبُ بْنُ خَالِدٍ، وَشُعَيْبُ بْنُ إِسْحَاقَ، وَأَبُو ضَمْرَةَ، هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ حَدَّثَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَرْقَمَ وَالْأَكْثَرُ الَّذِينَ رَوَوْهُ، عَنْ هِشَامٍ، قَالُوا: كَمَا قَالَ زُهَيْرٌ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-81.
Abu-Dawood-Shamila-88.
Abu-Dawood-Alamiah-81.
Abu-Dawood-JawamiulKalim-81.




[حكم الألباني] : صحيح

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.