பாடம்: 248
பெருநாளன்று உரை நிகழ்த்துதல்.
1140. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவின் ஆளுநராக இருந்த) மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் பெருநாளன்று மிம்பரை எடுத்து வந்து, தொழுகைக்கு முன் (அதில் ஏறி) உரை நிகழ்த்த ஆரம்பித்தார்.
அப்போது ஒருவர் எழுந்து, “மர்வான் அவர்களே! நீங்கள் நபிவழிக்கு மாற்றம் செய்துள்ளீர்கள். பெருநாளன்று மிம்பரை உடன் கொண்டுவந்துள்ளீர்கள். இதற்கு முன்பு – பெருநாளன்று அதனைக் கொண்டுவரும் பழக்கம் இல்லை.
மேலும், தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்த ஆரம்பித்து விட்டீர்கள். (பெருநாள் தொழுகைக்குப் பிறகு உரை நிகழ்த்துவதே நபிவழியாகும்)” என்று அவர் கூறினார்.
அப்போது நான், அம்மனிதர் யார்? என விசாரித்தேன். இன்னாரின் மகனான இன்னார் என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நான், “இவர் தம் மீதுள்ள (நல்லதை ஏவி தீமையைத் தடுப்பது எனும்) பொறுப்பை நிறைவேற்றிவிட்டார்” என்றேன்.
“யார் தீமையைக் காண்பாரோ அவர் தமது கையினால் அதனை(த் தடுத்து) மாற்றிவிட முடிந்தால் தமது கையினால் அதனை (தடுத்து) மாற்றிவிடவும். அதற்கு முடியாவிட்டால் தமது நாவினால் (தடுத்து) மாற்றிவிடவும். அதற்கும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் அதனை வெறுக்கவும். இது தான் ஈமானின் கடைசி நிலையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர்
أَخْرَجَ مَرْوَانُ الْمِنْبَرَ فِي يَوْمِ عِيدٍ، فَبَدَأَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا مَرْوَانُ، خَالَفْتَ السُّنَّةَ، أَخْرَجْتَ الْمِنْبَرَ فِي يَوْمِ عِيدٍ، وَلَمْ يَكُنْ يُخْرَجُ فِيهِ، وَبَدَأْتَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ، فَقَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيِّ: مَنْ هَذَا؟ قَالُوا: فُلَانُ بْنُ فُلَانٍ، فَقَالَ: أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَأَى مُنْكَرًا فَاسْتَطَاعَ أَنْ يُغَيِّرَهُ بِيَدِهِ فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»
சமீப விமர்சனங்கள்