ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
5260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வீடுகளில் வரும் பாம்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கவர்கள், உங்கள் வீடுகளில் பாம்புகளை நீங்கள் கண்டால் , ’நூஹ் (அலை) , ஸுலைமான் (அலை) போன்றோர் உங்களுடன் செய்த உடன்படிக்கையின் படி எங்களுக்கு தீங்கிழைக்கக் கூடாது என்று கேட்கிறோம்” என்று கூறுங்கள். (அவை சென்று விட்டால் சரி). மீண்டும் அவைகள் திரும்பி வந்தால் அவைகளைக் கொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அபூலைலா (ரலி)
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سُئِلَ عَنْ حَيَّاتِ الْبُيُوتِ، فَقَالَ: ” إِذَا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئًا فِي مَسَاكِنِكُمْ، فَقُولُوا: أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ نُوحٌ، أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ سُلَيْمَانُ، أَنْ لَا تُؤْذُونَا فَإِنْ عُدْنَ فَاقْتُلُوهُنَّ
சமீப விமர்சனங்கள்