ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம் : 51
உளூச் செய்யும் போது உறுப்புக்களை மும்மூன்று தடவை கழுவுதல்.
135. நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! உலூச் செய்வது எவ்வாறு? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி தமது இரு முன் கைகயையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறையும், தமது கைகளை முட்டுக்கை வரை மூன்று முறையும் கழுவினார்கள். பிறகு தனது தலைக்கு மஸஹ் செய்து விட்ட தனது இரு ஆட் காட்டி விரல்களையும் இரு காதுகளுக்குள் செலுத்தி இரு காதுகளின் வெளிப்பாகத்தை தனது இரு பெருவிரல்களாலும் உட்பாகத்தை ஆட்காட்டி விரல்களாலும் மஸஹ் செய்தார்கள். பிறகு தனது இரு கால்களையும் மும்மூன்று முறை கழுவினார்கள். பின்னர் உலூச் செய்யும் விதம் இவ்வாறு தான் யார் இதை விடக் கூடுதலாகச் செய்கிறாரோ அல்லது இதை விடக் குறைத்து விட்டாரோ அவரும் தீங்கு இழைத்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அம்ருபின் ஷுஐப் (ரலி) தனது தந்தை மூலமாகப் பாட்டனார் கூறியதாக அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், இப்னு குஸைமா ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.)
أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الطُّهُورُ فَدَعَا بِمَاءٍ فِي إِنَاءٍ فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ ذِرَاعَيْهِ ثَلَاثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ فَأَدْخَلَ إِصْبَعَيْهِ السَّبَّاحَتَيْنِ فِي أُذُنَيْهِ، وَمَسَحَ بِإِبْهَامَيْهِ عَلَى ظَاهِرِ أُذُنَيْهِ، وَبِالسَّبَّاحَتَيْنِ بَاطِنَ أُذُنَيْهِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا»، ثُمَّ قَالَ: «هَكَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا أَوْ نَقَصَ فَقَدْ أَسَاءَ وَظَلَمَ – أَوْ ظَلَمَ وَأَسَاءَ -»
சமீப விமர்சனங்கள்