ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔
பாடம்:
அம்பெறிதல் (எனும் கலை)
2513. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் :
திண்ணமாக அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்:
1 . செய்கின்றபோது நன்மையை நாடி அதைச் செய்பவர்.
2 . அதை எறிபவர்.
3 . அம்பெறிவதற்காக (மீண்டும் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தோ பொருளாதார ரீதியாகவோ) உதவி செய்பவர்.
(எனவே) அம்பெறி(ந்து பயிற்சி செய்)யுங்கள். (குதிரை) சவாரி செய்யுங்கள். நீங்கள் (குதிரை) சவாரி செய்வதைவிட அம்பெறி(ந்து பயிற்சி செய்)வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.)
மூன்று விஷயங்களில் வீண் என்பது கிடையாது.
1 . ஒருவர் தனது குதிரைக்குப் பயிற்சியளிப்பது.
2 . ஒருவர் தனது மனைவியுடன் விளையாடுவது.
3 . ஒருவர் தனது வில்லால் அம்பெறிந்து பயிற்சி செய்வது.
அம்பெறியும் கலையை ஒருவர் அறிந்தபின் அதைப் புறக்கணித்து விட்டுவிட்டால் அவர் (அல்லாஹ்வின் அந்த) அருட்கொடையை விட்டுவிட்டவர் அல்லது மறுத்து விட்டவர் ஆவார்.
” إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُدْخِلُ بِالسَّهْمِ الْوَاحِدِ ثَلَاثَةَ نَفَرٍ الْجَنَّةَ، صَانِعَهُ يَحْتَسِبُ فِي صَنْعَتِهِ الْخَيْرَ، وَالرَّامِيَ بِهِ، وَمُنْبِلَهُ. وَارْمُوا، وَارْكَبُوا، وَأَنْ تَرْمُوا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ تَرْكَبُوا. لَيْسَ مِنَ اللَّهْوِ إِلَّا ثَلَاثٌ: تَأْدِيبُ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ أَهْلَهُ، وَرَمْيُهُ بِقَوْسِهِ وَنَبْلِهِ، وَمَنْ تَرَكَ الرَّمْيَ بَعْدَ مَا عَلِمَهُ رَغْبَةً عَنْهُ، فَإِنَّهَا نِعْمَةٌ تَرَكَهَا «، أَوْ قَالَ» كَفَرَهَا “
சமீப விமர்சனங்கள்