ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔
1399. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அலிஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகிவிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகி விட்டது’ என்று கூறினார்.
அதற்கு நபியவர்கள் ‘ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது!’ என்று கூறினார்கள். அதற்கு அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘சப்பஹ அல்லது யுசப்பிஹு என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக!’ என்று கூறிய போதும் அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார்.
பிறகு அவர், ‘அல்லாஹ்வின் தூதரே! (அனைத்து விஷயங்களையும்) உள்ளடக்கிய ஒரு சூராவை எனக்கு கற்றுத் தாருங்கள் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள், ‘இதா ஸுல்லித்தில் அர்லு ஸில்ஸாஹா’ என்ற சூராவை முழுமையாக ஓதிக் காண்பித்தார்கள். அம்மனிதர், ‘உண்மையுடன் உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதற்கு மேல் ஒரு போதும் நான் அதிகமாக்க மாட்டேன்’ என்று கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு நபியவர்கள்,
أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «اقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ الر»، فَقَالَ: كَبُرَتْ سِنِّي، وَاشْتَدَّ قَلْبِي، وَغَلُظَ لِسَانِي، قَالَ: «فَاقْرَأْ ثَلَاثًا مِنْ ذَوَاتِ حاميم»، فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ، فَقَالَ: «اقْرَأْ ثَلَاثًا مِنَ المُسَبِّحَاتِ»، فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ، فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللَّهِ، أَقْرِئْنِي سُورَةً جَامِعَةً، فَأَقْرَأَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ حَتَّى فَرَغَ مِنْهَا، فَقَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، لَا أَزِيدُ عَلَيْهَا أَبَدًا، ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ الرُّوَيْجِلُ» مَرَّتَيْنِ
சமீப விமர்சனங்கள்