Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-823

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

823.


كُنَّا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْفَجْرِ فَقَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا فَرَغَ قَالَ: «لَعَلَّكُمْ تَقْرَءُونَ خَلْفَ إِمَامِكُمْ» قُلْنَا: نَعَمْ هَذًّا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا تَفْعَلُوا إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا»


Abu-Dawood-822

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

822.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ فَصَاعِدًا»


Abu-Dawood-1408

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1408. அபூராஃபிஉ நுஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதேன். அவர்கள் “இதஸ்ஸமாஉன் ஷக்கத்…” (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (சஜ்தா வசனம் வந்த) உடன் அதில் சஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம், “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காகச் சஜ்தாச் செய்திருக்கிறேன். அவர்களை நான் சந்திக்கும்வரை (அதாவது நான் இறக்கும்வரை) அ(தை ஓதிய)தற்காக நான் சஜ்தாச் செய்துகொண்டுதான் இருப்பேன்” என்று சொன்னார்கள்.


صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ الْعَتَمَةَ: فَقَرَأَ إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ، فَقُلْتُ: مَا هَذِهِ السَّجْدَةُ؟ قَالَ: «سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،، فَلَا أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ»


Abu-Dawood-1407

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இதஸ்மாஉன் ஷக்கத், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க போன்ற அத்தியாயங்களில் இடம்பெரும் வசனங்களை ஓதும் போது ஸஜ்தா செய்தல்.

1407. நாங்கள் “இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அபூதாவூத் கூறுகிறார்:

அபூஹுரைரா (ரலி) இஸ்லாத்தை ஏற்றது, கைபர் போர் நடைப்பெற்ற ஹிஜ்ரீ ஆறு (அல்லது சிலரின் கருத்துப்படி ஏழாம்) வருடத்திலாகும். எனவே இந்த வசனங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தது அவர்களின் கடைசிகட்ட நடைமுறையாக இருந்துள்ளது.


«سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ»،


Abu-Dawood-682

ஹதீஸின் தரம்: Pending

பாடம்:

தொழுகை வரிசைக்குப் பின்னால் ஒருவர் (மட்டும் நின்று) தனியாகத் தொழுவது.

682. வாபிஸா பின் மஅபத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டு (அத்தொழுகையை மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.

-ஸுலைமான் பின் ஹர்பின் அறிவிப்பில் ஸலாத-தொழுகையை என்று இடம்பெற்றுள்ளது.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” رَأَى رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ أَنْ يُعِيدَ – قَالَ سُلَيْمَانُ بْنُ حَرْبٍ: الصَّلَاةَ –


Abu-Dawood-690

ஹதீஸின் தரம்: Pending

690.


فَذَكَرَ حَدِيثَ الْخَطِّ، قَالَ سُفْيَانُ: لَمْ نَجِدْ شَيْئًا نَشُدُّ بِهِ هَذَا الْحَدِيثَ، وَلَمْ يَجِئْ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ، قَالَ: قُلْتُ لِسُفْيَانَ: إِنَّهُمْ يَخْتَلِفُونَ فِيهِ فَتَفَكَّرَ سَاعَةً، ثُمَّ قَالَ: مَا أَحْفَظُ إِلَّا أَبَا مُحَمَّدِ بْنَ عَمْرٍو، قَالَ سُفْيَانُ: قَدِمَ هَاهُنَا رَجُلٌ بَعْدَ مَا مَاتَ إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ فَطَلَبَ هَذَا الشَّيْخُ أَبَا مُحَمَّدٍ حَتَّى وَجَدَهُ فَسَأَلَهُ عَنْهُ فَخَلَطَ عَلَيْهِ، قَالَ أَبُو دَاوُدَ: ” وسَمِعْت أَحْمَدَ بْنَ حَنْبَلٍ سُئِلَ عَنْ وَصْفِ الْخَطِّ غَيْرَ مَرَّةٍ، فَقَالَ: هَكَذَا عَرْضًا مِثْلَ الْهِلَالِ “، قَالَ أَبُو دَاوُدَ: ” وسَمِعْت مُسَدَّدًا، قَالَ: قَالَ ابْنُ دَاوُدَ: الْخَطُّبِ الطُّولِ “، قَالَ أَبُو دَاوُدَ: ” وسَمِعْت أَحْمَدَ بْنَ حَنْبَل وَصَفَ الْخَطَّ غَيْرَ مَرَّةٍ فَقَالَ: هَكَذَا يَعْنِي بِالْعَرْضِ حَوْرًا دَوْرًا مِثْلَ الْهِلَالِ يَعْنِي مُنْعَطِفًا


Abu-Dawood-689

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

(தடுப்பாக) கைத்தடி இல்லாவிட்டால் முன்னால் கோடு போட்டு தொழுதல்.

689. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை (தடுப்பாக) வைத்துக்கொள்ளட்டும். அது இல்லாவிட்டால் ஒரு கைத்தடியை நாட்டிவைக்கட்டும். கைத்தடியும் இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதற்கு பின்பு அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَنْصِبْ عَصًا، فَإِنْ لَمْ يَكُنْ مَعَهُ عَصًا فَلْيَخْطُطْ خَطًّا، ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ أَمَامَهُ»،


Abu-Dawood-1269

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்கள் தொழுதல்.

1269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை வழமையாக தொழுதுவருவாரோ அவர் நரகத்திற்கு தடைசெய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(நுஃமான் பின் முன்திர் அவர்களைப் போன்றே) அலாஉ பின் ஹாரிஸ், ஸுலைமான் பின் மூஸா ஆகியோரும் மக்ஹூல் வழியாக இதே அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.


«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعٍ بَعْدَهَا، حَرُمَ عَلَى النَّارِ»


Abu-Dawood-3110

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3110. திடீர் மரணம் இறைகோபத்தின் வெளிப்பாடாகும் என்று உபைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தமீம் பின் ஸலமா (ரஹ்) அல்லது ஸஃது பின் உபைதா (ரஹ்)

இந்த செய்தியை உபைத் பின் காலித் (ரலி) அவர்கள், ஒரு தடவை தன்னுடைய சொல்லாகவும், ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்கள்


قَالَ مَرَّةً: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ مَرَّةً: عَنْ عُبَيْدٍ، قَالَ: «مَوْتُ الْفَجْأَةِ أَخْذَةُ أَسَفٍ»


Next Page » « Previous Page