Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-870

ஹதீஸின் தரம்: Pending

870. ஹதீஸ் எண்-869 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில்

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஃவு செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அளீமி வபிஹம்திஹீ என்று மூன்று தடவையும், ஸஜ்தா செய்தால் ஸுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹீ என்று மூன்று தடவையும் கூறுவார்கள் என கூடுதலாக இடம்பெற்றுள்ளது…


فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ قَالَ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ» ثَلَاثًا، وَإِذَا سَجَدَ قَالَ: «سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ» ثَلَاثًا،


Abu-Dawood-869

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ருகூஃவிலும், ஸஜ்தாவிலும் என்ன கூறவேண்டும்?

869. மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 56 : 96 ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உயர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய சுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று (நபி-ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


لَمَّا نَزَلَتْ: {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} [الواقعة: 74]، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ»، فَلَمَّا نَزَلَتْ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} [الأعلى: 1]، قَالَ: «اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ»


Abu-Dawood-4884

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4884. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போது எவர் உதவி செய்யாமல் இருந்துவிடுவாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படும் போது, அல்லாஹ் தன் உதவியைவிட்டும் அவரைத் தடுத்துவிடுகிறான்.

மேலும், ஒரு முஸ்லிமின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போது எவர் உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படும் போது, அல்லாஹ் அவருக்கு உதவிசெய்கிறான்.

அறிவிப்பவர்கள்: ஜாபிர் (ரலி), அபூதல்ஹா (ரலி)

 


«مَا مِنَ امْرِئٍ يَخْذُلُ امْرَأً مُسْلِمًا فِي مَوْضِعٍ تُنْتَهَكُ فِيهِ حُرْمَتُهُ وَيُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ، إِلَّا خَذَلَهُ اللَّهُ فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نُصْرَتَهُ، وَمَا مِنَ امْرِئٍ يَنْصُرُ مُسْلِمًا فِي مَوْضِعٍ يُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ وَيُنْتَهَكُ فِيهِ مِنْ حُرْمَتِهِ، إِلَّا نَصَرَهُ اللَّهُ فِي مَوْطِنٍ يُحِبُّ نُصْرَتَهُ»


Abu-Dawood-1157

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1157. அபூ உமைர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதியில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினர்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களது நோன்பை விடுமாறும், அவர்கள் (மறுநாள்) காலை ஆனதும் அவர்களது தொழும் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்” என எனது தந்தையின் உடன்பிறந்த (சில அன்ஸாரீ) நபித்தோழர்கள் எனக்கு அறிவித்தனர்.


«أَنَّ رَكْبًا جَاءُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْهَدُونَ أَنَّهُمْ رَأَوُا الْهِلَالَ بِالْأَمْسِ، فَأَمَرَهُمْ أَنْ يُفْطِرُوا، وَإِذَا أَصْبَحُوا أَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ»


Abu-Dawood-5033

ஹதீஸின் தரம்: Pending

5033. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் தும்மினல், ‘அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்’ (என்னேரத்திலும் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹு பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، وَلْيَقُلْ أَخُوهُ أَوْ صَاحِبُهُ يَرْحَمُكَ اللَّهُ، وَيَقُولُ هُوَ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ»


Abu-Dawood-5028

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஹாஹ் ஹாஹ் என்று கூறவேண்டாம். ஏனெனில், அதனால் ஷைத்தான் சிரிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، وَلَا يَقُلْ هَاهْ هَاهْ، فَإِنَّمَا ذَلِكُمْ مِنَ الشَّيْطَانِ يَضْحَكُ مِنْهُ»


Abu-Dawood-4349

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4349. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“(மறுமை நாளின் அளவில்) பாதி நாளை இந்த சமுதாயம் கடந்துவிடுவதை அல்லாஹ் இயலாததாக ஆக்கிவிடமாட்டான்.

அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)


«لَنْ يُعْجِزَ اللَّهُ هَذِهِ الْأُمَّةَ مِنْ نِصْفِ يَوْمٍ»


Abu-Dawood-4296

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4296. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது (ஆகிய இவ்விரண்டி)ன் இடைப்பட்ட காலங்கள் ஆறு வருடங்களாகும். ஏழாவது வருடத்தில் மஸீஹுத் தஜ்ஜால் வெளிப்படுவான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)


«بَيْنَ الْمَلْحَمَةِ وَفَتْحِ الْمَدِينَةِ سِتُّ سِنِينَ، وَيَخْرُجُ الْمَسِيحُ الدَّجَّالُ فِي السَّابِعَةِ»


Abu-Dawood-4295

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும்)  ஏழுமாத (கால)த்திற்குள் நடைப்பெறும்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«الْمَلْحَمَةُ الْكُبْرَى، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ، وَخُرُوجُ الدَّجَّالِ فِي سَبْعَةِ أَشْهُرٍ»


Abu-Dawood-4294

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜெரூசலம் நகரம் செழித்து மலரும் போது யஸ்ரிப் (மதீனா) நகரம் இடிந்து சின்னாபின்னமாகி விடும். மதீனா நகரம் இடிந்து சிதைவடைவது மல்ஹமா எனும் மாபெரும் யுத்தத்தின் போதே நிகழும். மல்ஹமா எனும் மாபெரும் போர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படும் போதே நிகழும். கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் வெற்றி கொள்ளப்படுவது தஜ்ஜால் வெளிப்படும் போதே நிகழும்.

(பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கையால், யாரிடம் இந்த செய்தியை கூறினார்களோ அவரை (அதாவது முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய என்னுடைய) தொடையிலோ அல்லது தோளிலோ அடித்துவிட்டு  முஆதே! நீ இங்கே அமர்ந்திருப்பது எப்படி உண்மையோ அது போன்று மேற்கண்டவை நிகழ்வது உண்மையாகும் என்று கூறினார்கள்)

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«عُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ، وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ، وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ قُسْطَنْطِينِيَّةَ، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ»،

ثُمَّ ضَرَبَ بِيَدِهِ عَلَى فَخِذِ الَّذِي حَدَّثَهُ، – أَوْ مَنْكِبِهِ – ثُمَّ قَالَ: «إِنَّ هَذَا لَحَقٌّ كَمَا أَنَّكَ هَاهُنَا»، أَوْ «كَمَا أَنَّكَ قَاعِدٌ»، يَعْنِي مُعَاذَ بْنَ جَبَلٍ


Next Page » « Previous Page