Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2380

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2380. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பாளிக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வந்தால் அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«مَنْ ذَرَعَهُ قَيْءٌ، وَهُوَ صَائِمٌ، فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَإِنْ اسْتَقَاءَ فَلْيَقْضِ»


Abu-Dawood-2358

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2358. முஆத் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புத் துறக்கும் போது, “அல்லாஹும்ம லக ஸும்து வ அலா ரிஸ்க்கிக அஃப்த்தர்து” (பொருள்: அல்லாஹ்வே! உனக்காக நோன்பு வைத்தேன். உனது உணவினால் நோன்புத் துறக்கின்றேன்) எனக் கூறுவார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ: «اللَّهُمَّ لَكَ صُمْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ»


Abu-Dawood-3854

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3854. நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். அவர் (நோன்பு திறப்பதற்காக) ரொட்டியையும், ஸைத்தூன் எண்ணெயையும் கொண்டுவந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள்.

பின்னர், நபி (ஸல்) அவர்கள் “உங்களிடத்தில் நோன்பாளிகள் நோன்பு திறந்துள்ளனர். உங்களின் உணவை நல்லோர்கள் சாப்பிட்டனர். உங்களுக்கு வானவர்கள் இறையருளை வேண்டுகின்றனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ، فَجَاءَ بِخُبْزٍ وَزَيْتٍ، فَأَكَلَ، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ»


Abu-Dawood-2845

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2845. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)


«لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَأَمَرْتُ بِقَتْلِهَا، فَاقْتُلُوا مِنْهَا الْأَسْوَدَ الْبَهِيمَ»


Abu-Dawood-2141

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2141. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவரிடம் அவள் செல்லாமலிருக்க, அதை முன்னிட்டு அவள்மீது கோபம் கொண்ட நிலையில் அவர் இரவைக் கழிப்பாராயின், விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டேயிருக்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ، فَلَمْ تَأْتِهِ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا، لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ»


Abu-Dawood-593

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

593. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்க முன்வந்தவர். நேரம் தவறி தொழுபவர். சுதந்திரமான மனிதனை அடிமையாக்கியவர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


 «ثَلَاثَةٌ لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُمْ صَلَاةً، مَنْ تَقَدَّمَ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَرَجُلٌ أَتَى الصَّلَاةَ دِبَارًا» وَالدِّبَارُ: أَنْ يَأْتِيَهَا بَعْدَ أَنْ تَفُوتَهُ، «وَرَجُلٌ اعْتَبَدَ مُحَرَّرَهُ»


Abu-Dawood-4739

ஹதீஸின் தரம்: Pending

4739. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பரிந்துரை என்னுடைய சமுதாயத்தில் பெரும்பாவங்கள் செய்வதர்களுக்கு உரியதாகும்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி­)


«شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي»


Abu-Dawood-4922

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4922.


جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ عَلَيَّ صَبِيحَةَ بُنِيَ بِي، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، فَجَعَلَتْ جُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِدُفٍّ لَهُنَّ، وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ، إِلَى أَنْ قَالَتْ إِحْدَاهُنَّ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي الْغَدِ، فَقَالَ: «دَعِي هَذِهِ وَقُولِي الَّذِي كُنْتِ تَقُولِينَ»


Abu-Dawood-2050

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2050. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) அந்தஸ்த்தும் மதிப்பும் உள்ள ஒரு பெண் எனக்குக் கிடைத்துள்ளாள். ஆனால் அவள் குழந்தையை பெற்றெடுக்கமாட்டாள். அவளை நான் திருமணம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாமென்று கூறினார்கள். இரண்டாவது முறையும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போதும் தடுத்தார்கள். மூன்றாவது முறை அவர் வந்த போதும் நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள்.

அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஃகில் பின் யசார் (ரலி)


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَجَمَالٍ، وَإِنَّهَا لَا تَلِدُ، أَفَأَتَزَوَّجُهَا، قَالَ: «لَا» ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَقَالَ: «تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ»


Abu-Dawood-5105

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5105. ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ»


Next Page » « Previous Page