Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-5028

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஹாஹ் ஹாஹ் என்று கூறவேண்டாம். ஏனெனில், அதனால் ஷைத்தான் சிரிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، وَلَا يَقُلْ هَاهْ هَاهْ، فَإِنَّمَا ذَلِكُمْ مِنَ الشَّيْطَانِ يَضْحَكُ مِنْهُ»


Abu-Dawood-4349

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4349. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“(மறுமை நாளின் அளவில்) பாதி நாளை இந்த சமுதாயம் கடந்துவிடுவதை அல்லாஹ் இயலாததாக ஆக்கிவிடமாட்டான்.

அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)


«لَنْ يُعْجِزَ اللَّهُ هَذِهِ الْأُمَّةَ مِنْ نِصْفِ يَوْمٍ»


Abu-Dawood-4296

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4296. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது (ஆகிய இவ்விரண்டி)ன் இடைப்பட்ட காலங்கள் ஆறு வருடங்களாகும். ஏழாவது வருடத்தில் மஸீஹுத் தஜ்ஜால் வெளிப்படுவான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)


«بَيْنَ الْمَلْحَمَةِ وَفَتْحِ الْمَدِينَةِ سِتُّ سِنِينَ، وَيَخْرُجُ الْمَسِيحُ الدَّجَّالُ فِي السَّابِعَةِ»


Abu-Dawood-4295

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும்)  ஏழுமாத (கால)த்திற்குள் நடைப்பெறும்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«الْمَلْحَمَةُ الْكُبْرَى، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ، وَخُرُوجُ الدَّجَّالِ فِي سَبْعَةِ أَشْهُرٍ»


Abu-Dawood-4294

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜெரூசலம் நகரம் செழித்து மலரும் போது யஸ்ரிப் (மதீனா) நகரம் இடிந்து சின்னாபின்னமாகி விடும். மதீனா நகரம் இடிந்து சிதைவடைவது மல்ஹமா எனும் மாபெரும் யுத்தத்தின் போதே நிகழும். மல்ஹமா எனும் மாபெரும் போர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படும் போதே நிகழும். கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் வெற்றி கொள்ளப்படுவது தஜ்ஜால் வெளிப்படும் போதே நிகழும்.

(பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கையால், யாரிடம் இந்த செய்தியை கூறினார்களோ அவரை (அதாவது முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய என்னுடைய) தொடையிலோ அல்லது தோளிலோ அடித்துவிட்டு  முஆதே! நீ இங்கே அமர்ந்திருப்பது எப்படி உண்மையோ அது போன்று மேற்கண்டவை நிகழ்வது உண்மையாகும் என்று கூறினார்கள்)

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«عُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ، وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ، وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ قُسْطَنْطِينِيَّةَ، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ»،

ثُمَّ ضَرَبَ بِيَدِهِ عَلَى فَخِذِ الَّذِي حَدَّثَهُ، – أَوْ مَنْكِبِهِ – ثُمَّ قَالَ: «إِنَّ هَذَا لَحَقٌّ كَمَا أَنَّكَ هَاهُنَا»، أَوْ «كَمَا أَنَّكَ قَاعِدٌ»، يَعْنِي مُعَاذَ بْنَ جَبَلٍ


Abu-Dawood-2941

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2941. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்:

(பெண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், “உன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டேன். நீ செல்லலாம்” என்று கூறுவார்கள்.


أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَخْبَرَتْهُ عَنْ بَيْعَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النِّسَاءَ، قَالَتْ: مَا مَسَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ امْرَأَةٍ قَطُّ، إِلَّا أَنْ يَأْخُذَ عَلَيْهَا فَإِذَا أَخَذَ عَلَيْهَا فَأَعْطَتْهُ، قَالَ: «اذْهَبِي فَقَدْ بَايَعْتُكِ»


Abu-Dawood-5193

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)



«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَفَلَا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Abu-Dawood-4919

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4919. நோன்பு வைத்தல், தொழுதல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது  ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلَاةِ وَالصَّدَقَةِ؟» قَالُوا: بَلَى، يَا رَسُولَ اللَّهِ قَالَ: «إِصْلَاحُ ذَاتِ الْبَيْنِ، وَفَسَادُ ذَاتِ الْبَيْنِ الْحَالِقَةُ»


Abu-Dawood-3231

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3231.


«إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ، وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ»


Abu-Dawood-4752

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4752.


«إِنَّ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ إِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، فَيَأْتِيهِ مَلَكَانِ فَيَقُولَانِ لَهُ» فَذَكَرَ قَرِيبًا مِنْ حَدِيثِ الْأَوَّلِ، قَالَ فِيهِ «وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُ فَيَقُولَانِ لَهُ» زَادَ «الْمُنَافِقَ» وَقَالَ: «يَسْمَعُهَا مَنْ وَلِيَهُ غَيْرُ الثَّقَلَيْنِ»


Next Page » « Previous Page