108. உலூச் செய்யும் முறை பற்றி இப்னு அபி முலைக்கா அவர்களிடம் வினவப்பட்டபோது, அவர் உஸ்மான் (ரலி) அவர்களிடம் உலூச் செய்யும் முறை பற்றி வினவப்பட்டது. அப்போது அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிச் சொன்னார்கள். அவர்களிடம் ஒரு தண்ணீர் பாத்திரம் கொண்டு வரப்பட்டதும் அதை தனது வலது கையில் சாய்த்து (நீர் விட்டு கழுவிய பின்) கையை தண்ணீர் பாத்திரத்திற்குள் செலுத்தி மூன்று முறை வாய் கொப்பளித்தார்கள். மும்முறை நாசிக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தார்கள். மும்முறை முகத்தை கழுவினார்கள். பின்பு மூன்று முறை வலது கையையும்,. மூன்று முறை இடது கையையும் கழுவினார்கள். பின்பு கையை தண்ணீருள் செலுத்தி தண்ணீர் எடுத்து தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள் (காதுகளுக்கு மஸஹ் செய்யும் போது) காதுகளின் உட்புறம் வெளிப்புறமும் ஒரு தடவை கழுவினார்கள். பின்பு இரு கால்களையும் கழுவினார்கள். பிறகு உலூவின் முறை பற்றி கேட்டவர் எங்கே? (என்று வினவி) இவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலூச் செய்யக் கண்டேன் என்று உஸ்மான் பின் அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் அத்தைமியி
சமீப விமர்சனங்கள்