Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-512

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 173

ஒருவர் அதான் சொல்லி மற்றொருவர் இகாமத் சொல்லுதல்.

512. நபி (ஸல்) அவர்கள் (மக்களை தொழுகைக்கு) அழைப்பது தொடர்பாக பலவிதமாக நினைத்திருந்தார்கள். ஆனால், அவற்றில் எதையும் செயல்படுத்தாதிருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் சைத் (ரலி)க்கு அதான் கனவில் காட்டப்பட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம் அதை தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை பிலாலுக்கு கற்றுக் கொடுங்கள் என்று அவரிடம் சொன்னார்கள். பிலாலுக்கு அவர் கற்றுக் கொடுத்ததும் பிலால் அதான் சொன்னார். அப்போது அப்துல்லாஹ் பின் சைத் அந்த கனவை கண்டேன். நானும் அதான் சொல்ல விருப்புகிறேன் என்று சொன்னதும் நீ இகாமத் சொல்க! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஹம்மத் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்.


أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَذَانِ أَشْيَاءَ، لَمْ يَصْنَعْ مِنْهَا شَيْئًا، قَالَ: فَأُرِيَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الْأَذَانَ فِي الْمَنَامِ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ: «أَلْقِهِ عَلَى بِلَالٍ»، فَأَلْقَاهُ عَلَيْهِ فَأَذَّنَ بِلَالٌ، فَقَالَ عَبْدُ اللَّهِ: أَنَا رَأَيْتُهُ وَأَنَا كُنْتُ أُرِيدُهُ، قَالَ: «فَأَقِمْ أَنْتَ»،


Abu-Dawood-1069

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

1069. அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

(எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். நான் அவர்களிடம், “நீங்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராராவுக்காகப் பிரார்த்தனை செய்கின்றீர்களே? என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஹஸ்முன் நபீத்” என்ற இடத்தில் எங்களை ஜும்ஆவுக்காக திரட்டிய முதல் நபர் அவர் தான். அந்த இடம் பனூ பயாளா குலத்தாரின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் நகீவுல் கள்மாத் என்ற தண்ணீர் நிறைந்த பகுதியாகும்” என்று பதில் கூறினார்கள். “அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்” என்று கேட்டேன். அதற்கு “நாற்பது பேர்” என்று பதில் சொன்னார்கள்.


أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ يَوْمَ الْجُمُعَةِ تَرَحَّمَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ، فَقُلْتُ لَهُ: إِذَا سَمِعْتَ النِّدَاءَ تَرَحَّمْتَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ، قَالَ: ” لِأَنَّهُ أَوَّلُ مَنْ جَمَّعَ بِنَا فِي هَزْمِ النَّبِيتِ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ، يُقَالُ لَهُ: نَقِيعُ الْخَضَمَاتِ “، قُلْتُ: كَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ، قَالَ: «أَرْبَعُونَ»


Abu-Dawood-1203

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1203. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகனான அல்லாஹ் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று  அல்லாஹ் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


يَعْجَبُ رَبُّكُمْ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةٍ بِجَبَلٍ، يُؤَذِّنُ بِالصَّلَاةِ، وَيُصَلِّي، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ، وَيُقِيمُ الصَّلَاةَ، يَخَافُ مِنِّي، قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ


Abu-Dawood-564

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 195

தொழுகைக்காக புறப்பட்டு வரும் போது தொழுகை முடிந்து விடுதல்.

564. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அழகிய முறையில் உளூச் செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்து விட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு, அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை வழங்குகிறான். ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழுதவர்களுக்கும் கூலியை குறைத்து விடாமல் வழங்குகிறான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللَّهُ جَلَّ وَعَزَّ مِثْلَ أَجْرِ مَنْ صَلَّاهَا وَحَضَرَهَا لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجْرِهِمْ شَيْئًا»


Abu-Dawood-554

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(ஜமாஅத்) கூட்டுத் தொழுகையின் சிறப்பு.

554. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு சுபுஹ் தொழுகை நடத்திய பின், “இன்னார் தொழ வந்தாரா? என்று நபித்தோழர்களிடம் விசாரித்தார்கள். அவர்கள் இல்லை என பதிலளித்தனர். பிறகு, (வேறொருவரை பற்றி) இன்னார் தொழ வந்தாரா? என்று கேட்டார்கள். அவர்கள் இல்லை என பதிலளித்தனர். அதற்கு, நபி (ஸல்) அவர்கள் (சுபுஹ், இஷா ஆகிய) இந்த இரண்டு தொழுகைகளும் முனாஃபிகீன்களுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். இந்த இரண்டில் உள்ள (நன்மைகளை) அவர்கள் அறிந்தால் முட்டுக்கால்களில் தவழ்ந்தாவது அதற்கு வந்து விடுவார்கள்.

(இறை நெருக்கத்தைப் பெறுவதில்) முதல் வரிசையாகிறது மலக்குமார்களின் வரிசை போன்றதாகும். நீங்கள் அதன் சிறப்புகளை அறிந்தால் அதற்காக ஒருவருக்கொருவர் போட்டி போடுவீர்கள்.

ஒருவர் மற்றொருவரோடு சேர்ந்து தொழுவது அவர் தனியாகத் தொழுவதை விட மிக பரிசுத்தமானதாகும். ஒருவர் இருவரோடு சேர்ந்து தொழுவது ஒருவரோடு சேர்ந்து தொழுவதை விட மிகப் பரிசுத்தமானதாகும். எண்ணிக்கை அதிகரிப்பது தான் உயர்ந்தோனாகிய அல்லாஹ்விடம் மிக விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினார்கள்.


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا الصُّبْحَ، فَقَالَ: أَشَاهِدٌ فُلَانٌ، قَالُوا: لَا، قَالَ: أَشَاهِدٌ فُلَانٌ، قَالُوا: لَا، قَالَ: «إِنَّ هَاتَيْنِ الصَّلَاتَيْنِ أَثْقَلُ الصَّلَوَاتِ عَلَى الْمُنَافِقِينَ، وَلَوْ تَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَيْتُمُوهُمَا، وَلَوْ حَبْوًا عَلَى الرُّكَبِ

وَإِنَّ الصَّفَّ الْأَوَّلَ عَلَى مِثْلِ صَفِّ الْمَلَائِكَةِ وَلَوْ عَلِمْتُمْ مَا فَضِيلَتُهُ لَابْتَدَرْتُمُوهُ،

وَإِنَّ صَلَاةَ الرَّجُلِ مَعَ الرَّجُلِ أَزْكَى مِنْ صَلَاتِهِ وَحْدَهُ، وَصَلَاتُهُ مَعَ الرَّجُلَيْنِ أَزْكَى مِنْ صَلَاتِهِ مَعَ الرَّجُلِ، وَمَا كَثُرَ فَهُوَ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى»


Abu-Dawood-574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 199

பள்ளியில் இரண்டாவது தடவை ஜமாஅத் நடத்துவது.

574. (பள்ளிக்குத் தாமதமாக வந்து) தனியாக (தொழும் – அல்லது தொழ நின்ற) மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)


أَبْصَرَ رَجُلًا يُصَلِّي وَحْدَهُ، فَقَالَ: أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ


Abu-Dawood-4198

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«الْفِطْرَةُ خَمْسٌ – أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ – الْخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الْإِبِطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ»


Abu-Dawood-53

ஹதீஸின் தரம்: More Info

53. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

 

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) இன்திகாஸுல் மாயி எனும் சொற்றொடருக்கு (மலஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல் என்று பொருள் எனவும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள்.


عَشْرٌ مِنَ الْفِطْرَةِ: قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَالِاسْتِنْشَاقُ بِالْمَاءِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَغَسْلُ الْبَرَاجِمِ، وَنَتْفُ الْإِبِطِ، وَحَلْقُ الْعَانَةِ، وَانْتِقَاصُ الْمَاءِ – يَعْنِي الِاسْتِنْجَاءَ بِالْمَاءِ – “،

قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ: وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ «الْمَضْمَضَةَ»


Abu-Dawood-4199

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4199. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ، وَإِعْفَاءِ اللِّحَى»


Abu-Dawood-4323

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4323. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டு பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْفِ، عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ»


Next Page » « Previous Page