Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-4061

ஹதீஸின் தரம்: More Info

4061. நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் சுர்மாக்களில் சிறந்தது “இஸ்மித்”ஆகும். அது பார்வையைக் கூர்மையாக்கும்; இமைகளின் முடியை வளரச் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، وَإِنَّ خَيْرَ أَكْحَالِكُمُ الْإِثْمِدُ: يَجْلُو الْبَصَرَ، وَيُنْبِتُ الشَّعْرَ


Abu-Dawood-3878

ஹதீஸின் தரம்: More Info

3878. நீங்கள் வெள்ளை ஆடையையே அணியுங்கள். ஏனெனில் அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் சுர்மாக்களில் சிறந்தது “இஸ்மித்”ஆகும். அது பார்வையைக் கூர்மையாக்கும்; இமைகளின் முடியை வளரச் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، وَإِنَّ خَيْرَ أَكْحَالِكُمُ الْإِثْمِدُ: يَجْلُو الْبَصَرَ، وَيُنْبِتُ الشَّعْرَ


Abu-Dawood-3150

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3150. உங்களில் ஒருவர் மரணமடைந்து அவர் வசதி பெற்றவராகவும் இருந்தால் கோடுகள் போட்ட ஆடையில் கஃபனிடலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«إِذَا تُوُفِّيَ أَحَدُكُمْ فَوَجَدَ شَيْئًا فَلْيُكَفَّنْ فِي ثَوْبٍ حِبَرَةٍ»


Abu-Dawood-1359

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1359.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً بِرَكْعَتَيْهِ قَبْلَ الصُّبْحِ، يُصَلِّي سِتًّا مَثْنَى مَثْنَى، وَيُوتِرُ بِخَمْسٍ، لَا يَقْعُدُ بَيْنَهُنَّ إِلَّا فِي آخِرِهِنَّ»


Abu-Dawood-1425

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுதல்.

1425. ஹஸன் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வித்ரில் நான் ஓதவேண்டிய குனூத் வார்த்தைகளை எனக்கு கற்று தந்தார்கள். (அவைகள்)

அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த வ ஆஃபினீ பீமன் ஆஃபைத்த. வதவல்லனீ பீமன் தவல்லைத்த. வபாரிக்லீ ஃபீமா அஃதைத வகினீ ஷர்ர மா களைத்த. இன்னக்க தக்லீ வலா யுக்லா அலைக்க. வ இன்னஹு லா யதிள்ளு மவ்வாலைத்த, வலா யஇஸ்ஸு மன் ஆதைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.

(பொருள்: இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா! நீயே பாக்கியசாலி. நீயே உயர்ந்தவன்….)

அறிவிப்பவர் : அபுல் ஹவ்ரா (ரஹ்)


قَالَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ عَنْهُمَا: عَلَّمَنِي رَسُولُ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الْوِتْرِ، – قَالَ ابْنُ جَوَّاسٍ: فِي قُنُوتِ الْوِتْرِ: – «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ»


Abu-Dawood-1422

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1422. “வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்;

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


«الْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ»


Abu-Dawood-1231

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1231. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் மக்காவில் பதினைந்து நாட்கள் தங்கி இருந்தர்கள். அப்போது அவர்கள் சுருக்கித் தொழுதார்கள்.


«أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ عَامَ الْفَتْحِ خَمْسَ عَشْرَةَ، يَقْصُرُ الصَّلَاةَ»


Abu-Dawood-1913

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1913.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபா நாளின் அதிகாலைப் பொழுதில் ஸுப்ஹு தொழுதுவிட்டு மினாவிலிருந்து புறப்பட்டார்கள். அரஃபா வந்தவுடன் நமிரா எனுமிடத்தில் தங்கினார்கள். நமிரா என்பது அரஃபாவில் தலைவர்(கள்) தங்கும் இடமாகும். லுஹர் தொழுகையின் நேரம் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து) பகற்பொழுதிலேயே புறப்ப(ட தயாராகிவி)ட்டார்கள். எனவே லுஹர், அஸர் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரையாற்றினார்கள். பிறகு பகற்பொழுதில் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்று அரஃபாவின் தங்குமிடங்களில் தங்கி ஓய்வெடுத்தார்கள்.


«غَدَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مِنًى حِينَ صَلَّى الصُّبْحَ صَبِيحَةَ يَوْمِ عَرَفَةَ حَتَّى أَتَى عَرَفَةَ فَنَزَلَ بِنَمِرَةَ، وَهِيَ مَنْزِلُ الْإِمَامِ الَّذِي يَنْزِلُ بِهِ بِعَرَفَةَ حَتَّى إِذَا كَانَ عِنْدَ صَلَاةِ الظُّهْرِ رَاحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُهَجِّرًا فَجَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، ثُمَّ خَطَبَ النَّاسَ، ثُمَّ رَاحَ فَوَقَفَ عَلَى الْمَوْقِفِ مِنْ عَرَفَةَ»


Abu-Dawood-614

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 215

சலாமுக்கு பிறகு இமாம் கிப்லாவை விட்டு திரும்புதல்.

614. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பின்னால் நின்று நான் தொழுதிருக்கின்றேன். அவர்கள் தொழுது முடித்ததும் கிப்லாவை விட்டும் திரும்பி (மக்களை நோக்கி அமர்ந்து) விடுவார்கள் என்று தன் தந்தை வழியாக ஜாபிர் பின் யசீத் பின் அல் அஸ்வத் அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.


«صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ إِذَا انْصَرَفَ انْحَرَفَ»


Abu-Dawood-575

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 200

வீட்டில் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் நடக்கும்போது ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுதல்.

575. யசீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நான் இளைஞராக இருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் பள்ளியின் ஓரத்தில் இரண்டு பேர் தொழாமல் இருந்தனர். அவ்விருவரும் பயத்தின் காரணமாக நடுங்கிய நிலையில் நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டனர். நீங்கள் இருவரும் எங்களுடன் சேர்ந்து தொழுவதற்கு என்ன தடை என்று நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் கேட்ட போது நாங்கள் இருவரும் வீடுகளில் தொழுது விட்டோம் என்று பதிலளித்தனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் தனது வீட்டில் தொழுதுவிட்டு (பள்ளிக்கு வரும்போது) தொழுகையை முடிக்காத நிலையில் இமாமை அடைந்து விடின் இமாமுடனும் அவர் சேர்ந்து தொழுவாராக! ஏனெனில் நிச்சயமாக அந்த தொழுகை அவருக்கு நபிலாக ஆகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் யஸீத் (ரஹ்)


أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ غُلَامٌ شَابٌّ، فَلَمَّا صَلَّى إِذَا رَجُلَانِ لَمْ يُصَلِّيَا فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَدَعَا بِهِمَا فَجِئَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟» قَالَا: قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، فَقَالَ: «لَا تَفْعَلُوا، إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي رَحْلِهِ ثُمَّ أَدْرَكَ الْإِمَامَ وَلَمْ يُصَلِّ، فَلْيُصَلِّ مَعَهُ فَإِنَّهَا لَهُ نَافِلَةٌ»


Next Page » « Previous Page