பாடம்: 330
‘அந்நஜ்ம்’ எனும் (53 வது) அத்தியாயத்தில் ஸஜ்தா வசனம் உள்ளது என்போரின் ஆதாரம்.
1406. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (குர்ஆனின்) ‘அந்நஜ்ம்’ எனும் (53 வது) அத்தியாயத்தை (அல்குர்ஆன் 53:62) ஓதி சிரவணக்கம் (ஸஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள்) அனைவரும் சிரவணக்கம் செய்தனர்; அங்கிருந்த ஒரு வயோதிகர் மட்டும் ஒரு கையளவு சிறு கற்களையோ மண்ணையோ அள்ளித் தமது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ سُورَةَ النَّجْمِ فَسَجَدَ فِيهَا، وَمَا بَقِيَ أَحَدٌ مِنَ الْقَوْمِ إِلَّا سَجَدَ، فَأَخَذَ رَجُلٌ مِنَ الْقَوْمِ كَفًّا مِنْ حَصًى – أَوْ تُرَابٍ -، فَرَفَعَهُ إِلَى وَجْهِهِ، وَقَالَ: يَكْفِينِي هَذَا “، قَالَ عَبْدُ اللَّهِ: «فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا»
சமீப விமர்சனங்கள்