Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-6706

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6706. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அவரின் கையைப் பிடித்தார்கள். அதற்கு அந்தப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! எதற்கு என் கையை பிடித்தீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் ஆணா? அல்லது பெண்ணா? என்று கேட்டார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை மருதாணி (போன்றதைக்) கொண்டு மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.


أَنَّ امْرَأَةً مُدَّتْ يَدَهَا بِكِتَابٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ يَدَهُ عَنْهَا، فَقَالَتْ: لِمَ قَبَضْتَ يَدَكَ عَنِّي؟ فَقَالَ: «رَجُلٌ أَوِ امْرَأَةٌ؟» قَالَتْ: امْرَأَةٌ قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً غَيَّرْتِ أَظْفَارَكِ بِالْحِنَّاءِ»


Almujam-Alawsat-3765

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3765. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அவரின் கையைப் பிடித்தார்கள். அதற்கு அந்தப்பெண், அல்லாஹ்வின் தூதரே! நான் என் கையில் வைத்திருந்த கடிதத்தை நீட்டினேன். அதை நீங்கள் வாங்கிக்கொள்ளவில்லையே! (ஏன்?) என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை மருதாணி (போன்றதைக்) கொண்டு மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.


أَنَّ امْرَأَةً، مَدَّتْ يَدَهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَضَ يَدَهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، مَدَدْتُ يَدِي إِلَيْكَ بِكِتَابٍ، فَلَمْ تَأْخُذْهُ؟ فَقَالَ: «إِنِّي لَا أَدْرِي يَدُ امْرَأَةٍ أَمْ يَدُ رَجُلٍ؟» قُلْتُ: بَلْ يَدُ امْرَأَةٍ قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظَفَارََكِ بِالْحِنَّاءِ»


Almujam-Alawsat-66

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

66.


قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ، فَوَعَظَنَا مَوْعِظَةً وَجَفَتْ مِنْهَا الْقُلُوبُ، وَذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ قَدْ وَعَظْتَنَا مَوْعِظَةَ مُوَدِّعٍ، فَاعْهَدْ إِلَيْنَا، فَقَالَ: «عَلَيْكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، وَسَيَرَى مَنْ بَقِيَ مِنْ بَعْدِي اخْتِلَافًا شَدِيدًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ، وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَالْمُحْدَثَاتِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»


Almujam-Alawsat-8156

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8156.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِامْرَأَةٍ: «اعْتَمِرِي فِي رَمَضَانَ، فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تُجْزِئُكِ مِنْ حَجَّةٍ»


Almujam-Alawsat-8991

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8991. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பரகத் எனும்) அருள்வளம் உங்களில் உள்ள பெரியோர்களுடன் உள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْبَرَكَةُ مَعَ أَكَابِرِكُمْ»


Almujam-Alawsat-5905

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

5905. (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு எப்போதாவது காய்ச்சல் வந்ததுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் எழும்புக்கும் இடையில் ஏற்படும் சூடு; அது இரத்தத்தை வற்றச் செய்துவிடும்; உடலை மெலிய வைத்துவிடும்” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்; இவரை என்னிடமிருந்து வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَتَى عَهْدُكَ بِأُمِّ مِلْدَمٍ؟» قَالَ: وَمَا أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «حَرٌّ يَكُونُ بَيْنَ الْجِلْدِ وَالْعَظْمِ، يَمَصُّ الدَّمَ، وَيَأْكُلُ اللَّحْمَ» قَالَ: مَا اشْتَكَيْتُ قَطُّ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَرَادَ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْرِجُوهُ عَنِّي»


Almujam-Alawsat-3641

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஸலாமா என்ற பெயருடையவர்களின் அறிவிப்புகள்.

3641. நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்ற மனிதர் ஒருவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் சொல்லவில்லை. சிறுநீர் கழித்தப் பின் நபி (ஸல்) அவர்கள் (தமது இருகைகளையும் தரையில் அடித்து தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவி) தயம்மும் செய்த பின்னர் அவரின் ஸலாமுக்கு பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَرَّ رَجُلٌ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ، فَلَمَّا فَرَغَ ضَرَبَ بِكَفَّيْهِ فَتَيَمَّمَ، ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ»


Almujam-Alawsat-3550

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3550.


نَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رَجُلٍ يُشِيرُ بِأُصْبُعَيْهِ، فَقَالَ: «أَحَدٌ أَحَدٌ»


Next Page » « Previous Page