7895. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தனது தோழர்களுடன் (சபையில்) இருந்தார்கள். அவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு குவளை பானம் (அன்பளிப்பாக) வந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். அதற்கு அபூஉபைதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இதை அருந்துவதற்கு நீங்களே மிகவும் தகுதிமிக்கவர் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (குவளையை பிடியுங்கள்) என்று கூறினார்கள். எனவே அபூஉபைதா (ரலி) அவர்கள் அதை வாங்கிகொண்டார். என்றாலும் அதை குடிப்பதற்கு முன் மீண்டும் அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களே இதைக் குடியுங்கள். பரக்கத் என்பது நம்மில் பெரியவர்களிடம் உள்ளது. நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை” என்று கூறினார்கள்.
بَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ رَضِيَ اللهُ عَنْهُمْ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ إِذْ أُتِيَ بِقَدَحٍ فِيهِ شَرَابٌ، فَنَاوَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا عُبَيْدَةَ، فَقَالَ أَبُو عُبَيْدَةَ: أَنْتَ أَوْلَى بِهِ يَا نَبِيَّ اللهِ. قَالَ: خُذْ فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ الْقَدَحَ، ثُمَّ قَالَ لَهُ قَبْلَ أَنْ: يَشْرَبَ خُذْ يَا نَبِيَّ اللهِ، قَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْرَبْ، فَإِنَّ الْبَرَكَةَ فِي أَكَابِرِنَا، فَمَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُجِلَّ كَبِيرَنَا فَلَيْسَ مِنَّا»
சமீப விமர்சனங்கள்