Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-3450

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3450.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا أَنْ نَقُولَ إِذَا أَصْبَحْنَا وَإِذَا أَمْسَيْنَا وَإِذَا اضْطَجَعْنا عَلَى فُرُشِنَا: «اللهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ رَبُّ كُلِّ شَيْءٍ، وَالْمَلَائِكَةُ يَشْهَدُونَ أَنَّكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، فَإِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ أَنْفُسِنَا، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ الرَّجِيمِ وَشِرْكِهِ، وَأَنْ نَقْتَرِفَ عَلَى أَنْفُسِنَا سُوءًا أَوْ نَجُرَّهُ إِلَى مُسْلِمٍ»


Almujam-Alkabir-5261

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5261. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எந்த தொழுகைக்கும் செல்வதாக இருந்தால் பல்துலக்காமல் அதற்கு செல்லமாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)


  • «مَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ شَيْءٍ لِشَيْءٍ مِنَ الصَّلَوَاتِ حَتَّى يَسْتَاكَ»

Almujam-Alkabir-469

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

469.

தனது அடியார்கள், நிராசையடைவதையும் அவர்களின் நிலையை சீக்கிரம் மாற்ற இருப்பதையும் (நினைத்து) இறைவன் சிரிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இறைவன் சிரிப்பானா! என்று (ஆச்சரியத்துடன்) கேட்டேன். அதற்வகவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், சிரிக்கும் இறைவனிடமிருந்து நாம் நன்மையை இழந்துவிடமாட்டோம் என்று கூறினேன்.

அறிவிப்பவர்: அபூரஸீன் (லகீத் பின் ஆமிர்-ரலி)


«ضَحِكَ اللهُ تَعَالَى مِنْ قُنُوطِ عِبَادِهِ وَقُرْبِ غِيَرِهِ» ، قَالَ أَبُو رَزِينٍ فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ وَيَضْحَكُ الرَّبُّ؟، قَالَ: «نَعَمْ» ، قَالَ: لَنْ نُعْدَمَ مِنْ رَبٍّ يَضْحَكُ خَيْرًا


Almujam-Alkabir-733

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உம்மு ஸலமா (ரலி) அவர்களிடமிருந்து குல்ஸூம் பின்த் அல்கமா அல்குஸாயீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பு.

733. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் பின்த் அப்துல்லாஹ் (ரலி) வந்து என்னிடம் பேச்சு கொடுத்தார். நானும் அவரைப் பார்த்து பேச ஆரம்பித்தேன். அப்போது நபி (ஸல்) பேன் பார்த்துக்கொண்டே பேசு! நீ அவரிடம் கண்ணால் பேசவில்லையே! என்று கூறினார்கள்.

அப்போது ஸைனப் பின்த் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தன்னுடைய வீடு இடநெருக்கடியாக இருப்பதை முறையிட்டார்கள். …அப்போது நபி (ஸல்) அவர்கள், உஸ்மான் பின் மள்வூன் அவர்களின் மனைவி அவரின் வீட்டுக்கு வரும் போது நெருக்கடியாக இருந்ததால் அவரின் தலையில் இடித்துவிட்டது என்று கூறினார்கள்…

பிறகு நபி (ஸல்) அவர்கள், மதீனாவில் கணவனின் வீட்டிலிருக்கும் முஹாஜிர் பெண்களுக்கு கணவர் இறந்தபின் அவரின் மனைவி அந்த வீட்டுக்கு வாரிசாவார் என்று கூறினார்கள். (எனவே இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இறந்தப்பின்) அவரின் சொத்தில் தனக்குரிய பங்கையும், மதீனாவில் இருந்த அவரின் வீட்டுக்கும் ஸைனப் (ரலி) வாரிசாக ஆனார்கள்.


أَنَّهَا كَانَتْ تُفَلِّي رَأْسَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ زَيْنَبُ امْرَأَةُ عَبْدِ اللهِ بْنُ مَسْعُودٍ فَجَعَلَتْ تُكَلِّمُنِي وَأُكَلِّمُهَا وَرَفَعْتُ بَصَرِي إِلَيْهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقْبِلِي عَلَى فِلَايَتِكِ، فَإِنَّكِ لَسْتِ تُكَلِّمِينَهَا بِعَيْنَيْكِ» ، قَالَتْ زَيْنَبُ: فَجَعَلْتُ أَشْكُو ضِيقَ الْمَسْكَنِ، فَقَالَ: هَذَا كَمَا صَنَعَتِ امْرَأَةُ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ، لَمْ يَسَعُهَا مَا نَزَلَتْ حَتَّى نَزَلَ عَلَى رَأْسِهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَاكَ مَنِ اخْتَطَّ خُطَّةً بِالْمَدِينَةِ مِنَ الْمُهَاجِرَاتِ، فَلَهَا خِطَّتُهَا، فَوَرِثَتْ نَصِيبَهَا مِنْ دَارِ عَبْدِ اللهِ، وَأَحْرَزَتْ دَارَهَا بِالْمَدِينَةِ»


Almujam-Alkabir-146

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

146. நபி (ஸல்) அவர்கள், (முஹாஜிர்) பெண்களுக்கு (அவர்களின் கணவன் இறந்துவிட்டால்) அவர்கள் வசித்த வீட்டையே வாரிசாக்கினார்கள்.

அறிவிப்பவர்: ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَّثَ النِّسَاءَ خِطَطَهُنَّ»


Almujam-Alkabir-7628

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7628. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்விடம்) கூலியையும், (மக்களிடம்) புகழையும் எதிர்ப்பார்த்து அறப்போர் செய்பவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?; அவருக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஒன்றும் கிடைக்காது” என்று மூன்று தடவை கூறிவிட்டு, “அல்லாஹ்விற்காக கலப்பற்ற முறையில் மனத்தூய்மையுடனும், அவனது திருப்தி மட்டும் எதிர்ப்பார்த்து செய்யப்படும் நல்லறத்தைத் தவிர வேறு எதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான்” என்று கூறினார்கள்.


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ رَجُلًا يَلْتَمِسُ الْخَيْرَ وَالذِّكْرَ مَا لَهُ؟ قَالَ: «لَا شَيْءَ لَهُ» – يَقُولُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ – «إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا خَلَصَ لَهُ، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ»


Almujam-Alkabir-838

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

838. ஒருவர் காலையில், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” என்று கூறினால் அவரின் கையைப் பிடித்து அவரை சொர்க்கத்தில் சேர்ப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

அறிவிப்பவர்: முனைதிர் (ரலி)

 


مَنْ قَالَ إِذَا أَصْبَحَ: رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، فَأَنَا الزَّعِيمُ لِآخُذَ بِيَدِهِ حَتَّى أُدْخِلَهُ الْجَنَّةَ


Almujam-Alkabir-921

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

921. ஒரு அடியார் அல்லது ஒரு மனிதர் அல்லது ஒரு முஸ்லிம் காலையிலும், மாலையிலும், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” எனக் கூறினால் மறுமை நாளில் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான அபூஸல்லாம்.


مَا مِنْ عَبْدٍ أَوْ إِنْسَانٍ أَوْ مُسْلِمٍ يَقُولُ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ: رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دَيْنًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا إِلَّا كَانَ حَقًّا عَلَى اللهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ


Almujam-Alkabir-114

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

114. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ صَمَتَ نَجَا»


Almujam-Alkabir-113

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ صَمَتَ نَجَا»


Next Page » « Previous Page