Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-627

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

627.


دَخَلْنَا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِي نِسَاءِ الْمُهَاجِرَاتِ نَعُودُهُ وَهُوَ مَحْمُومٌ فَأَمَرَ بِسِقَاءٍ فِيهِ مَاءٌ فَعُلِّقَ عَلَى شَجَرَةٍ فَجَعَلَ الْمَاءَ يَقْطُرُ عَلَى فُؤَادِهِ مِنْ شِدَّة مَا يَجِدُ فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ لَوْ دَعَوْتَ اللهَ كَشَفَ مَا بِكَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَشَدُّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءُ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ»


Almujam-Alkabir-626

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

626.


دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ حُمَّ فَاشْتَدَّتْ بِهِ الْحُمَّى فَقُلْتُ: أَنْتَ يَا رَسُولَ اللهِ قَدِ اشْتَدَّتْ بِكَ الْحُمَّى فَلَوْ دَعَوْتَ اللهَ فَكَشَفَها عَنْكَ، فَقَالَ: «أَشَدُّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءُ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» قَالَتْ: وَقَدْ عُلِّقَ لَهُ سِقَاءٌ عَلَى شَجَرَةٍ وَاضْطَجَعَ تَحْتَهُ، وَالْمَاءُ تَقْطُرُ عَلَى فُؤَادِهِ


Almujam-Alkabir-3344

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3344.  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். மேலும் சில வேளைகளில் வானவர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அது எனக்கு எளிதாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார்.

அறிவிப்பவர்: ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி)


سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ قَالَ: يَأْتِينِي صَلْصَلَةً كَصَلْصَلَةِ الْجَرَسِ، وَيَأْتِينِي أَحْيَانًا فِي صُورَةِ رَجُلٍ يُكَلِّمُنِي كَلَامًا، وَهُوَ أَهْوَنُ عَلَيَّ، فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ


Almujam-Alkabir-10363

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10363. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இஸ்ரா, மிஃராஜ்—ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அப்போது அவர்கள், முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள். மேலும் “சொர்க்கத்தின் மண் தூய்மையானது; அதன் தண்ணீர் மதுரமானது; மேலும் சொர்க்கம் விசாலமான காலியிடமாகும்; அதில் மரம் நடவேண்டுமென்றால் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்), அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்),  வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது) என்ற வார்த்தைகளைக் கூறவேண்டும் என்பதையும் உமது சமுதாயத்திற்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


رَأَيْتُ إِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِي، فَقَالَ: يَا مُحَمَّدُ، أَقْرِأْ أُمَّتَكَ مِنِّي السَّلَامَ، وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ، عَذْبَةُ الْمَاءِ، وَأَنَّهَا قِيعَانٌ، وَغِرَاسُهَا: سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ


Almujam-Alkabir-13354

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13354. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் அதிகமான மரங்களை நட்டுக் கொள்ளுங்கள். ஏனேனில் அதன் தண்ணீர் சுவையானது; அதன் மண் தூய்மையானது. எனவே சொர்க்கத்தில் அதிக மரத்தை நடுவதற்கு “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” என்பதை அதிகமாகக் கூறிக்கொள்ளுங்கள்.

(பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது என்று கூறுவது)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«أَكْثِرُوا مِنْ غَرْسِ الْجَنَّةِ فَإِنَّهُ عَذْبٌ مَاؤُهَا طَيِّبٌ تُرَابُهَا، فَأَكْثِرُوا مِنْ غِرَاسِهَا، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»


Almujam-Alkabir-9299

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9299.


«كَانَ عَبْدُ اللهِ، لَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنَ الصَّلَاةِ إِلَّا فِي التَّكْبِيرَةِ الْأُولَى»


Almujam-Alkabir-8540

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

8540. ஒருவர் எதைக் குறிக்கோளாகக் கொண்டு ஹிஜ்ரத் (நாடு துறத்தலை) செய்கிறாரோ அதையே அவர் அடைவார். ஒருவர் “உம்மு கைஸ்” என்ற பெண்ணை திருமணம் செய்வதற்காக ஹிஜ்ரத் செய்தார். எனவே அவருக்கு முஹாஜிர் உம்மு கைஸ் (உம்மு கைஸுக்காக ஹிஜ்ரத் செய்தவர்) என்று கூறப்பட்டது என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)


«مَنْ هَاجَرَ يَبْتَغِي شَيْئًا فَهُوَ لَهُ» ، قَالَ: ” هَاجَرَ رَجُلٌ لِيَتَزَوَّجَ امْرَأَةً يُقَالُ لَهَا: أُمُّ قَيْسٍ، وَكَانَ يُسَمَّى مُهَاجِرَ أُمِّ قَيْسٍ


Almujam-Alkabir-3900

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3900. ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஅய்யூப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்ட ஒரு செயலை உனக்கும் கட்டளையிடவா? என்று கூறிவிட்டு, அது “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்ற வார்த்தைகளை அதிகமாக கூறுவதாகும். ஏனெனில். அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலம்“ என்று கூறினார்கள்.


لَقِيتُ أَبَا أَيُّوبَ، فَقَالَ لِي: أَلَا آمُرُكَ بِمَا أَمَرَنِي بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ «أَنْ أَكْثِرْ مِنْ قَوْلِ لَا حَوْلَ، وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ فَإِنَّهَا مِنْ كُنُوزِ الْجَنَّةِ»


Next Page » « Previous Page