Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-195

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

195. நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, “இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?” என்று கேட்டு விட்டு, “இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்” என கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)


دَخَلَ عَلِيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَيْنَ يَدَيَّ أَرْبَعَةُ آلَافِ نَوَاةٍ أُسَبِّحُ بِهِنَّ، فَقَالَ: «يَا ابْنَةَ حُيَيٍّ مَا هَذَا؟» فَقُلْتُ: أُسَبِّحُ بِهِنَّ، فَقَالَ: «قَدْ سَبَّحْتُ مُنْذُ قُمْتُ عَلَى رَأْسِكَ بِأَكْثَرِ مِنْ هَذَا» ، قُلْتُ: فَعَلِّمْنِي يَا رَسُولَ اللهِ، قَالَ: «قُولِي سُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ مِنْ شَيْءٍ»


Almujam-Alkabir-12155

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12155. இருவரும் குகைக்குள் நுழைந்த பிறகு குகைக்கு வெளியே சிலந்தி ஒன்று வலை பின்னியதால் குகைக்குள் நபி (ஸல்) அவர்கள் சென்றிருக்க முடியாது என்று கருதி எதிரிகள் குகைக்குள் நுழையாமல் சென்று விட்டார்கள்…


فِي قَوْلِهِ {وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ} [الأنفال: 30] قَالَ: ” تَشَاوَرَتْ قُرَيْشٌ لَيْلَةً بِمَكَّةَ فَقَالَ بَعْضُهُمْ: أَثْبِتُوهُ بِالْوَثَائِقِ يُرِيدُونَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ بَعْضُهُمْ: اقْتُلُوهُ وَقَالَ بَعْضُهُمْ: أَخْرِجُوهُ، فَأَطْلَعَ اللهُ نَبِيَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ذَلِكَ فَبَاتَ عَلِيٌّ عَلَى فِرَاشِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِلْكَ اللَّيْلَةَ، وَخَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى لَحِقَ بِالْغَارِ، وَبَاتَ الْمُشْرِكُونَ يَحْرُسُونَ عَلِيًّا رَضِي اللهُ عَنْهُ يَحْسِبُونَ أَنَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَصْبَحُوا ثَارُوا إِلَيْهِ فَلَمَّا رَأَوْا عَلِيًّا رَدَّ اللهُ مَكْرَهُمْ، فَقَالُوا: أَيْنَ صَاحِبُكَ؟ قَالَ: لَا أَدْرِي فَاقْتَصُّوا أَثَرَهُ فَلَمَّا بَلَغُوا الْجَبَلَ اخْتَلَطَ عَلَيْهِمْ فَصَعِدُوا الْجَبَلَ فَمَرُّوا بِالْغَارِ فَإِذَا عَلَى بَابِهِ نسيجُ الْعَنْكَبُوتِ فَمَكَثَ فِيهِ ثَلَاثًا


Almujam-Alkabir-6548

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6548. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அதற்காக அவர்களை அடியுங்கள்.

அறிவிப்பவர் : ஸப்ரா பின் மஃபத் (ரலி)


«إِذَا بَلَغَ الْغُلَامُ سَبْعَ سِنِينَ، فَمُرُوهُ بِالصَّلَاةِ، فَإِذَا بَلَغَ عَشْرًا فَاضْرِبُوهُ عَلَيْهَا»


Almujam-Alkabir-6547

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6547. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களை தொழுகையை நிறைவேற்ற கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அதற்காக அவர்களை அடியுங்கள்.

அறிவிப்பவர் : ஸப்ரா பின் மஃபத் (ரலி)


«يُؤْمَرُ الصَّبِيُّ بِالصَّلَاةِ إِذَا بَلَغَ سَبْعَ سِنِينَ، فَإِذَا بَلَغَ عَشْرًا، فَاضْرِبُوهُ عَلَيْهَا»


Almujam-Alkabir-6546

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6546. உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்கு தொழ கற்றுக்கொடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அதற்காக அவர்களை அடியுங்கள்…

அறிவிப்பவர் : ஸப்ரா பின் மஃபத் (ரலி)


«عَلِّمُوا الصَّبِيَّ الصَّلَاةَ ابْنَ سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُ عَلَيْهَا ابْنَ عَشَرٍ»


Almujam-Alkabir-181

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

181. உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: யுஸைரா (ரலி­)


يَأْمُرُ النِّسَاءَ أَنْ يُرَاعِينَ التَّسْبِيحَ وَالتَّهْلِيلَ وَالتَّقْدِيسَ وَيَعْقِدْنَ بِالْأَنَامِلِ وَيَقُولُ: إِنَّهُنَّ مَسْئُولَاتٌ وَمُسْتَنْطَقَاتٌ


Almujam-Alkabir-180

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

180. உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: யுஸைரா (ரலி­)


قَالَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا نِسَاءَ الْمُسْلِمِينَ عَلَيْكُنَّ بِالتَّسْبِيحِ وَالتَّهْلِيلِ وَالتَّقْدِيسِ وَأَعْقِدْنَ بِالْأَنَامِلِ، فَإِنَّهُنَّ مُسْتَنْطَقَاتٌ وَمَسْئُولَاتٌ، وَلَا يَعْقِلْنَ فَيَنْسِينَ الرَّحْمَةَ»


Almujam-Alkabir-847

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

847. ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­லி)


قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ؟ قَالَ: «نَعَمْ، فَإِنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا»


Almujam-Alkabir-846

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

846. ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­லி)


قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَفُضِّلَتِ الْحَجُّ بِسَجْدَتَيْنِ؟ قَالَ: «نَعَمْ، فَمَنْ لَمْ يَسْجُدْ فِيهِمَا فَلَا يَقْرَأْهُمَا»


Almujam-Alkabir-7719

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7719. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது

2. மழை பொழியும் போது.

3. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது.

4. கஅபாவைக் காணும் போது (போன்ற நான்கு இடங்களில்) வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)


«تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، وَيُسْتَجَابُ دُعَاءُ الْمُسْلِمِ عِنْدَ إِقَامَةِ الصَّلَاةِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ زَحْفِ الصُّفُوفِ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ»


Next Page » « Previous Page