984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தன் மனைவியை ஒரு அடிமைப் பெண்ணை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறாரே! (அவ்வாறு செய்ய வேண்டாம்).
உங்களில் சிறந்தவர் யாரெனில், அவர் தன் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே ஆவார்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியின் முதல் பகுதியான “உங்களில் சிறந்தவர் உங்கள் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே” எனும் செய்தியை ஹிஷாம் பின் உர்வா —> உர்வா என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக’ பலரும் அறிவித்துள்ளனர்.
ஹிஷாம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் சில மாணவர்கள் ‘முத்தஸிலாக’ அறிவித்துள்ளனர். (பார்க்க: திர்மிதீ-3895)
“பெண்களை அடிப்பது தொடர்பான” இரண்டாவது பகுதியை ஹிஷாம் பின் உர்வா —> அவரின் தந்தை உர்வா —> அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அதிகமானோர் அறிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியை ளஹ்ஹாக் பின் உஸ்மான் அவர்கள் ஹிஷாம் பின் உர்வா —> அவரின் தந்தை உர்வா —> ஆயிஷா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
மேற்கண்ட ஹிஷாம் «أَلَا عَسَى أَحَدُكُمْ أَنْ يَضْرِبَ امْرَأَتَهُ ضَرْبَ الْأَمَةِ أَلَا خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ»
சமீப விமர்சனங்கள்