Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-3090

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3090.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயம் இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு (நிரந்தர) வேதனை இல்லை. உலகிலேயே அதற்கு கொல்லப்படுதல்; குழப்பத்தில்; நிலநடுக்கத்தில் மாட்டிக்கொள்ளுதல் போன்றவற்றால் வேதனை செய்யப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«إِنَّ هَذِهِ الْأُمَّةَ أُمَّةٌ مَرْحُومَةٌ، لَيْسَ عَلَيْهَا فِي الْآخِرَةِ عَذَابٌ، جُعِلَ عَذَابُهَا فِي الدُّنْيَا الْقَتْلُ وَأَشْبَاهُهُ»


Bazzar-1992

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1992. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இஸ்ரா, மிஃராஜ்—ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் ஏழாவது வானத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள். மேலும் “சொர்க்கத்தின் தண்ணீர் இனிப்பானது; பருகுவதற்கு நல்லது; அதன் மேலும் சொர்க்கம் விசாலமான காலியிடமாகும்; அதில் மரம் நடவேண்டுமென்றால் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்), அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்ற வார்த்தைகளைக் கூறவேண்டும் என்பதையும் உமது சமுதாயத்திற்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


لَمَّا كَانَ لَيْلَةَ أُسْرِيَ بِي لَقِيتُ إِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّمَاءِ السَّابِعَةِ، فَقَالَ: يَا مُحَمَّدُ، اقْرَأْ عَلَى أُمَّتِكَ السَّلَامَ، وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ عِذْبٌ مَاؤُهَا، طَيِّبٌ شَرَابُهَا، وَأَنَّ فِيهَا قِيعَانًا، وَأَنَّ غَرْسَ شَجَرِهَا سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ


Bazzar-9269

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

9269.


تفتح أبواب الجنان وأبوب السماء في كل عشية خميس فتعرض فيه الأعمال فيغفر الله فيه لكل عبد إلا مشرك أو عبد بينه وبين أخيه شحناء.


Bazzar-2617

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2617.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ الْأَيَّامَ يَسْرُدُ حَتَّى يُقَالَ: لَا يُفْطِرُ، وَيُفْطِرُ الْأَيَّامَ حَتَّى يُقَالَ: لَا يَكَادُ يَصُومُ، وَلَمْ يَكُنْ يَصُومُ مِنْ شَهْرٍ مِنَ الشُّهُورِ مَا يَصُومُ مِنْ شَعْبَانَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تَصُومُ حَتَّى نَقُولَ لَا تُفْطِرُ حَتَّى لَا تَكَادَ تَصُومُ، قُلْتُ: وَتَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ، قَالَ: «إِنَّهُمَا يَوْمَانِ تُعْرَضُ فِيهِمَا الْأَعْمَالُ عَلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي، وَأَنَا صَائِمٌ، وَأَصُومُ مِنْ شَهْرِ شَعْبَانَ أَوْ مِنْ شَعْبَانَ فَإِنَّ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ»


Bazzar-1460

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து அபூஉமாமா (ரலி) அவர்களின் அறிவிப்புகள்.

1460. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) மனிதர்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

அப்போது இரக்கம்காட்டுவோருக்கு அல்லாஹ்வும் இரக்கம் காட்டுகிறான். அப்போது பாவமன்னிப்புக் கேட்போருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகிறான். அப்போது விரோதம் கொள்வோருக்கு (எதுவும் வழங்காமல்) விட்டுவிடுகிறான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«تُعْرَضُ أَعْمَالُ بَنِي آدَمَ فِي كُلِّ يَوْمِ اثْنَيْنِ وَفِي كُلِّ يَوْمِ خَمِيسٍ، فَيَرْحَمُ الْمُتَرَحِّمِينَ، وَيَغْفِرُ لِلْمُسْتَغْفِرِينَ، وَيَتْرُكُ أَهْلَ الْحِقْدِ بِغِلِّهِمْ»


Bazzar-9368

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

9368. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை மனப்பாடம் செய்யவில்லை; அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. காரணம் அவர் (ஹதீஸ்களை) மனனமிட்டுக்கொள்வார்; கையால் எழுதியும் வைத்துக் கொள்வார். நான் நினைவில் வைத்துக்கொள்வேன். (எழுதி வைத்ததில்லை) என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஜாஹித் (ரஹ்)


قال ما من أصحاب نبي الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أحفظ لحديثه مني خلا عبد الله بن عمرو فإنه كان يعي بقلبه ويكتب بيده وكنت أنا أعي بقلبي.


Bazzar-5963

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5963. நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளில், முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كَانَ يُكَبِّرُ فِي صَلاةِ الْعِيدَيْنِ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً: سَبْعًا فِي الأُولَى وَخَمْسًا فِي الآخرة.


Bazzar-7482

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7482. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


لا يأتي عليكم زمان إلاَّ والذي بعده شر منه حتى تلقوا ربكم سمعت ذلك من نبيكم صَلَّى الله عَلَيه وَسَلَّم، أو كما قال قال: إن كان كذلك إن شاء الله.


Next Page » « Previous Page