Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-9681

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9681. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டு காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னிடம் தங்கச் செய்துவிடுவாயாக!” என்று (அல்லது இது போன்ற வார்த்தையை) சொர்க்கம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَا استعاذ عبد من النار سبعا إلا قالت النار اللهم أعذه مني ولا سأل الجنة سبعا إلا قالت الجنة اللهم أسكينه إياي أو كلمة نحوها.


Bazzar-2905

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2905.


«مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ الْخَبِيثَةِ أَوِ الْبَقْلَةِ الْخَبِيثَةِ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا»


Bazzar-3514

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3514. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்கள் விசயத்திலும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியை உமர் (ரலி) வழியாகவே நாம் மனனமிட்டுள்ளோம். என்றாலும் அது நபியின் கூற்றா? என்பதில் அறிவிப்பாளர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர் என்பதால் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்தியை கூறியுள்ளோம்.

என்றாலும் உமர் (ரலி) வழியாக வரும் செய்தி ஆதாரத்திற்கேற்ற செய்திதான் என்பதால் அதை நாம் கூறியுள்ளோம். மேலும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்தி ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடர் என்பதால் அதையும் கூறியுள்ளோம்.


«حَذَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»


Bazzar-305

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

உமர் (ரலி) அவர்களிடமிருந்து அஹ்னஃப் பின் கைஸ் என்பவரின் அறிவிப்பு…

305. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்கள் விசயத்திலும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்)


حَذَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ


Bazzar-78

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

78.


«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ حِينَ نُفِسَتْ بِمُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَنْ تَغْتَسِلَ وَتُهِلَّ»


Bazzar-9658

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9658. மக்களை சொர்க்கத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “இறையச்சமும், நற்குணமும்” என்று பதிலளித்தார்கள்.

மக்களை அதிகம் நரகத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “வாயும், மர்ம உறுப்பும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أتدرون ما يدخل الناس الجنة قالوا: الله ورسوله أعلم , قال تقوى الله وحسن الخلق أتدرون ما يدخل الناس النار قالوا: الله ورسوله أعلم , قال الأجوفان الفم والفرج.


Bazzar-9647

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9647. “உங்கள் விசயத்தில் நான் அதிகம் பயப்படுவது மர்ம உறுப்பு, வாய் ஆகியவற்றைப் பற்றித் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


أخوف ماأخاف عليكم الأجوفان الفرج والفم.


Next Page » « Previous Page