ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
5302. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பயணம் செல்லும் போது (வழியில்) பசுமையான நிலப்பரப்பைக் கண்டால் பயணம் செய்வதை நிறுத்தி உங்கள் கால்நடைகளுக்கு அதற்குரிய பங்கை கொடுங்கள். அல்லாஹ் இரக்கமுள்ளவன். இரக்கம் காட்டுவதை அவன் விரும்புகிறான். நீங்கள் (வழியில்) வறண்டுப்போன நிலப்பரப்பைக் கண்டால் அதை (விரைவாக) கடந்து செல்லுங்கள்.
இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது).
பாதையின் நடுப்பகுதியை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் அதுதான் பாம்புகளும், வனவிலங்குகளும் ஒதுங்குமிடமாகவும், வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
إِذَا كَانَتِ الأَرْضُ مُخْصِبَةً فَاقْصُرُوا فِي السَّفَرِ وَأَعْطُوا الرِّكَابَ حَظَّهَا فَإِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَإِذَا كَانَتِ الأَرْضُ مُجْدِبَةً فَانْجُوا عَلَيْهَا
وَعَلَيْكُمْ بِالدُّلْجَةِ فَإِنَّ الأَرْضَ تُطْوَى بالليل
وإساكم وَقَارِعَةَ الطَّرِيقِ فَإِنَّهُ مَأْوَى الْحَيَّاتِ وَمُرَاحُ السِّبَاعِ.
சமீப விமர்சனங்கள்