Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-3480

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3480. காலணிகளுடன் தொழுது யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«خَالِفُوا الْيَهُودَ وَصَلُّوا فِي نِعَالِكُمْ، فَإِنَّهُمْ لَا يُصَلُّونَ فِي نِعَالِهِمْ وَلَا فِي خِفَافِهِمْ»


Bazzar-3481

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

3481. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில், (ரியா எனும்) முகஸ்துதியை சிறிய இணைவைத்தல் என்று கருதி வந்தோம்.

அறிவிப்பவர்: யஃலா பின் ஷத்தாத் (ரஹ்)


كُنَّا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعُدُّ الشِّرْكَ الْأَصْغَرَ الرِّيَاءَ


Bazzar-8606

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8606. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும், (ஜிஸ்யா) காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


جعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف أمري، وَمَنْ تشبه بقوم فهو منهم.


Bazzar-2966

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)


«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»


Bazzar-9312

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9312. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ لِكُلِّ شَيْءٍ قلبا وقلب القرآن {يس}


Bazzar-7282

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7282. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


لِكُلِّ شَيْءٍ قَلْبٌ وَقَلْبُ الْقُرْآنِ {يس}


Bazzar-1199

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1199. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு மார்க்கமுடையவர்களாக பிரிந்தனர். எனது சமுதாயமும் அதுபோன்று பிரியாதவரை இரவும், பகலும் அழிந்துபோகாது. (உலகம் அழியாது)

அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி)

 


«افْتَرَقَتْ بَنُو إِسْرَائِيلَ عَلَى إِحْدَى وَسَبْعِينَ مِلَّةً، وَلَنْ تَذْهَبَ اللَّيَالِي وَالْأَيَّامُ حَتَّى تَفْتَرِقَ أُمَّتِي عَلَى مِثْلَهَا»


Bazzar-2755

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2755. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தினர் எழுபதுக்கு மேற்பட்ட பிரிவினராக பிரிவார்கள். தங்கள் சுயசிந்தனையால் அனுமதிக்கப்பட்டதை தடுக்கப்பட்டது என்றும், தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். இவர்கள் தான் எனது சமுதாயத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஈஸா பின் யூனுஸ் அவர்களிடமிருந்து நுஐம் பின் ஹம்மாத் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


«سَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً أَعْظَمُهَا فِتْنَةً عَلَى أُمَّتِي قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيهِمْ يُحَرِّمُونَ الْحَلَالَ، وَيُحِلُّونَ الْحَرَامَ»


Bazzar-6214

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6214. இந்த சமுதாயம் எழுபதுக்கும் மேற்பட்ட (பிரிவுகளாக) பிரியும். அவைகளில் நேர்வழிபெற்றது எது என்பதை நான் அறிவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அது எந்த கூட்டம் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டனர். அதற்கவர்கள், அது தான் ஜமாஅத் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


تَفْتَرِقُ هَذِهِ الأُمَّةُ عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً إِنِّي لأَعْلَمُ أَهْدَاهَا قَالُوا: مَا هِيَ يَا رَسولَ اللهِ؟ قَالَ: الْجَمَاعَةُ.


Bazzar-445

ஹதீஸின் தரம்: More Info

445. அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி) ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرِ رَجُلٍ وَهُوَ يُدْفَنُ فَلَمَّا فَرَغَ مِنْهُ قَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ وَسَلُوا اللَّهَ لَهُ بالثَّبَاتِ؛ فَإِنَّهُ يُسْأَلُ الْآنَ»


Next Page » « Previous Page