ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 55
மாறாக, இது பெருமை மிக்கக் குர்ஆன் ஆகும். இது பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பதிவாகி) உள்ளது எனும் (85:21,22ஆகிய) இறைவசனங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
தூர் (சினாய்) மலை மீது சத்தியமாக! எழுதப்பெற்ற வேதத்தின் மீதும் சத்தியமாக! (52:1,2).
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எழுதப்பெற்ற’ என்பதற்கு மூல ஏடான மொத்த ஏட்டில் எழுதப்பெற்ற என்று பொருள்.
50:18 ஆவது வசனத்தின் பொருளாவது: மனிதன் பேசும் எந்தப் பேச்சும் எழுதிப் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நன்மை தீமை அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.
(5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யுஹர்ரிஃபூன’ எனும் சொல்லுக்கு அகற்றுகிறார்கள்’ என்ற பொருள் இருந்தாலும், எந்த இறை வேதத்திலிருந்தும் அதன் சொல்லை எவராலும் அகற்ற முடியாது. மாறாக, அதற்கு உண்மைக்குப் புறம்பான விளக்கமளிக்கிறார்கள் என்றே பொருளாகும்.
لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ كِتَابًا عِنْدَهُ: غَلَبَتْ، أَوْ قَالَ سَبَقَتْ رَحْمَتِي غَضَبِي، فَهُوَ عِنْدَهُ فَوْقَ العَرْشِ
சமீப விமர்சனங்கள்