Category: புஹாரி

Bukhari

Bukhari-7549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7549. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், நான் மாதவிடாயுடன் இருந்தபோது என் மடியில் தம் தலையை வைத்தபடி குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.199

Book :97


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ القُرْآنَ وَرَأْسُهُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ»


Bukhari-7548

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் என்னிடம் ‘நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்த்திட) பாலைவனத்தையும் நேசிப்பதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடுகளுடன்’ அல்லது ‘உங்கள் பாலைவனத்தில் இருக்கும்போது தொழுகைக்காக பாங்கு இருக்கும்போது தொழுகைக்காக பாங்கு சொன்னால் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், பாங்கு சொல்பவரின் குரலை வழிநெடும்லும் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவர்கள் அவருக்காக மறுமைநாளில் நிச்சயம் சாட்சியம் அளிப்பார்கள்’ என்று சொல்லிவிட்டு, ‘இதை நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.188

Book :97


أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ لَهُ: إِنِّي أَرَاكَ تُحِبُّ الغَنَمَ وَالبَادِيَةَ، فَإِذَا كُنْتَ فِي غَنَمِكَ أَوْ بَادِيَتِكَ فَأَذَّنْتَ لِلصَّلاَةِ، فَارْفَعْ صَوْتَكَ بِالنِّدَاءِ، فَإِنَّهُ: «لاَ يَسْمَعُ مَدَى صَوْتِ المُؤَذِّنِ جِنٌّ وَلاَ إِنْسٌ، وَلاَ شَيْءٌ، إِلَّا شَهِدَ لَهُ يَوْمَ القِيَامَةِ»، قَالَ أَبُو سَعِيدٍ: سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7547

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7547. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுது கொண்டு) இருந்தார்கள். (தொழுகையில்) தம் குரலை உயர்த்தி (குர்ஆனை ஓதி) வந்தார்கள். இணைவைப்பாளர்கள் கேட்கும்போது குர்ஆனையும், அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். இதனால், அல்லாஹ் தன் தூதருக்கு ‘நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தவும் வேண்டாம்; (ஒரேயடியாய்) தாழ்த்தவும் வேண்டாம்’ (திருக்குர்ஆன் 17:110) எனக் கட்டளையிட்டான்.187

Book :97


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَارِيًا بِمَكَّةَ، وَكَانَ يَرْفَعُ صَوْتَهُ، فَإِذَا سَمِعَ المُشْرِكُونَ سَبُّوا القُرْآنَ وَمَنْ جَاءَ بِهِ، فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: { وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]


Bukhari-7546

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7546. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையில் ‘வத்தீனி வஸ்ஸைத் தூனி..’ எனும் (95 வது) அத்தியாயத்தை ஓதுவரை கேட்டேன். நபி(ஸல்) அவர்களை விடவும் ‘அழகிய குரலுடையவரை’ அல்லது ‘அழகாக ஓதுபவரை’ நான் கண்டதில்லை.186

Book :97


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي العِشَاءِ: وَالتِّينِ وَالزَّيْتُونِ فَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا أَوْ قِرَاءَةً مِنْهُ


Bukhari-7545

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7545. இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்)அவர்கள் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்களின் மீது அவதூறு பேசிய நிகழ்ச்சி தொடர்பாக உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்), உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தார்கள்.

ஆயிஷா(ரலி) கூறினார்: நான் (உடல் நலம் குன்றி) படுக்கையில் கிடந்தேன். நான் குற்றமற்றவள் என்பதையும் அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என்று அறிவிப்பான் என்பதையும் அப்போதே அறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என் விஷயத்தில் (என்னைக் கலங்கமற்றவள் என்று எடுத்துரைக்க காலங் காலமாக) ஓதப்படுகிற வேத அறிவிப்பு ஒன்றை அருள்வான் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை. ஓதப்படுகிற வசனம் ஒன்றில் என் தொடர்பாக அல்லாஹ் பேசுகிற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. ஆனால், வலிவும், மகத்துவமும் மிக்க அல்லாஹ், ‘அவதூறு கற்பித்தவர்கள்

عَنْ حَدِيثِ عَائِشَةَ، حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ، قَالَتْ: ” فَاضْطَجَعْتُ عَلَى فِرَاشِي وَأَنَا حِينَئِذٍ أَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ، وَأَنَّ اللَّهَ يُبَرِّئُنِي، وَلَكِنِّي وَاللَّهِ مَا كُنْتُ أَظُنُّ أَنَّ اللَّهَ يُنْزِلُ فِي شَأْنِي وَحْيًا يُتْلَى، وَلَشَأْنِي فِي نَفْسِي كَانَ أَحْقَرَ مِنْ أَنْ يَتَكَلَّمَ اللَّهُ فِيَّ بِأَمْرٍ يُتْلَى، وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ} العَشْرَ الآيَاتِ كُلَّهَا


Bukhari-7544

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரி யோரும் நல்லோ(ருமான வானவ)ர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியது.

7544. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ், தன் தூதர் ஒருவர் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதும்போது அதை செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று, வேறு எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 97


«مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ بِالقُرْآنِ يَجْهَرُ بِهِ»


Bukhari-7543

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7543. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

விபசாரம் செய்துவிட்ட ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம், ‘நீங்கள் விபசாரிகளை என்ன செய்வீர்கள்?’ என்று கேட்க, அவர்கள் ‘இருவரின் முகங்களிலும் கரும்புள்ளியிட்டு இருவரையும் கேவலப்படுத்திவிடுவோம்’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து ஓதிக் காட்டுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவர்கள் அதை கொண்டுவந்து தாங்கள் விரும்பிய ஓர் (ஓற்றைக் கண்) மனிதரிடம் ‘ஒற்றைக் கண்ணரே! ஓதும்!’ என்று கூறினார்கள். அவர் ஓதிக் கொண்டே சென்றார். அதில் ஓரிடத்தை அடைந்ததும் அந்த இடத்தில் தன்னுடைய கையை வைத்து (மறைத்து)க் கொண்டார். நபி(ஸல்) அவர்கள், ‘கையை எடுங்கள்’ என்று கூற அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை (ரஜ்கி) தொடர்பான வசனம் ‘பளிச்’ சென்று தெரிந்தது. அந்த மனிதர் ‘முஹம்மதே! இந்த இருவரையும் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். ஆயினும், நாங்கள் அதை எங்களுக்கிடையே பரஸ்பரம் மறைத்துக்கொண்டிருந்தோம்’ என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள்

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ وَامْرَأَةٍ مِنَ اليَهُودِ قَدْ زَنَيَا، فَقَالَ لِلْيَهُودِ: «مَا تَصْنَعُونَ بِهِمَا؟»، قَالُوا: نُسَخِّمُ وُجُوهَهُمَا وَنُخْزِيهِمَا، قَالَ: {فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ} [آل عمران: 93]، فَجَاءُوا، فَقَالُوا لِرَجُلٍ مِمَّنْ يَرْضَوْنَ: يَا أَعْوَرُ، اقْرَأْ فَقَرَأَ حَتَّى انْتَهَى إِلَى مَوْضِعٍ مِنْهَا فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ، قَالَ: «ارْفَعْ يَدَكَ»، فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهِ آيَةُ الرَّجْمِ تَلُوحُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ عَلَيْهِمَا الرَّجْمَ، وَلَكِنَّا نُكَاتِمُهُ بَيْنَنَا، فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا، فَرَأَيْتُهُ يُجَانِئُ عَلَيْهَا الحِجَارَةَ


Bukhari-7542

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7542. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும் யஅகூபின் சந்ததியினருக்கும் அருளப்பட்டதையும் மற்றும் மூஸாவுக்கும், ஈசாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கம், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். (திருக்குர்ஆன் 02:136)182

Book :97


كَانَ أَهْلُ الكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالعَرَبِيَّةِ لِأَهْلِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تُصَدِّقُوا أَهْلَ الكِتَابِ وَلا تُكَذِّبُوهُمْ وَقُولُوا: {آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ} [البقرة: 136] ” الآيَةَ


Bukhari-7541

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 தவ்ராத் உள்ளிட்ட இறைவேதங்களுக்கு அரபு மொழியிலும் பிற மொழிகளிலும் (மொழிபெயர்த்து) விளக்கமளிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாய் இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக் காட்டுங்கள். (3:93)

7541. அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) அறிவித்தார்.

(ரோமப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரை அழைத்து வரச் சொன்னார். பின்னர் நபி(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரச் சொல்லி அதைப் படி(க்குமாறு ஆணைபிறப்பி)த்தார். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… இது அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதருமான முஹம்மதிடமிருந்து மன்னர் ஹெராக்ளியஸுக்கு எங்களுக்கும் உங்களுக்கம் இடையே உள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். 181

Book : 97


أَنَّ هِرَقْلَ دَعَا تَرْجُمَانَهُ، ثُمَّ دَعَا بِكِتَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَهُ: ” بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ، عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ، إِلَى هِرَقْلَ، وَ: {يَا أَهْلَ الكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ} [آل عمران: 64] الآيَةَ


Next Page » « Previous Page