Category: புஹாரி

Bukhari

Bukhari-7539

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7539. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: ‘(இறுதித் தூதரான) நான் (இறைத்தூதர்) யூனுஸ் இப்னு மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர்’ என்று சொல்வது எந்த அடியானுக்கும் தகாது. இவ்வாறு (யூனுஸ்) இப்னு மத்தா – மத்தாவின் புதல்வர் யூனுஸ் என) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 179

Book :97


لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: إِنَّهُ خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ” وَنَسَبَهُ إِلَى أَبِيهِ


Bukhari-7538

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7538. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உங்களுடைய இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்: இறைவன் கூறுகிறான்: ஒவ்வொரு (தீய) செயலுக்கும் ஒரு பரிகாரம் உண்டு. நோன்பு எனக்காகவே நிறைவேற்றப்படுவதாகும். நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையை விட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும். 178

Book :97


«لِكُلِّ عَمَلٍ كَفَّارَةٌ، وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ»


Bukhari-7537

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7537. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக ஒரு முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.177

இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ‘நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :97


رُبَّمَا ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَقَرَّبَ العَبْدُ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، – أَوْ بُوعًا -»، وَقَالَ مُعْتَمِرٌ: سَمِعْتُ أَبِي، سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ


Bukhari-7536

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ).

7536. நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்.

(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவிற்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவிற்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச் செல்கிறேன்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 97


«إِذَا تَقَرَّبَ العَبْدُ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وَإِذَا أَتَانِي مَشْيًا أَتَيْتُهُ هَرْوَلَةً»


Bukhari-7535

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 நிச்சயமாக, மனிதன் பதற்றமிக்கவனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனுக்குத் துன்பம் நேரும் போது பொறுமை இழந்து விடுகின்றான்; நன்மை ஏற்படும் போது (அது பிறருக்குக் கிடைக்காதவாறு) தடுத்து விடுகின்றான் எனும் (70:19-21) வசனங்கள்.

7535. அம்ர் இப்னு தஃக்லிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு செல்வம் வந்தது. அதை அவர்கள் சிலருக்குக் கொடுத்தார்கள். வேறு சிலருக்குக் கொடுக்கவில்லை. (பங்கு கிடைக்காத) அந்த மற்றவர்கள் தம்மைக் குறைகூறுவதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அவர்கள், ‘நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன். மற்றொருவரைவிட்டுவிடுகிறேன். நான் எவருக்குக் கொடுக்கிறேனோ அவரை விட நான் எவரைவிட்டுவிடுகிறானோ அவர் தாம் எனக்கு மிகவும் பிரியமானவராவார். பதற்றமுள்ள மனம் படைத்தோருக்கு கொடுக்கிறேன். இன்னும் சிலருக்கு, அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல்விட்டுவிடுகிறேன். அத்தகையை (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தாம் அம்ர் இப்னு தஃக்லிப்’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்)

أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَالٌ فَأَعْطَى قَوْمًا وَمَنَعَ آخَرِينَ، فَبَلَغَهُ أَنَّهُمْ عَتَبُوا، فَقَالَ: «إِنِّي أُعْطِي الرَّجُلَ وَأَدَعُ الرَّجُلَ، وَالَّذِي أَدَعُ أَحَبُّ إِلَيَّ مِنَ الَّذِي أُعْطِي، أُعْطِي أَقْوَامًا لِمَا فِي قُلُوبِهِمْ مِنَ الجَزَعِ وَالهَلَعِ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الغِنَى وَالخَيْرِ» مِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ، فَقَالَ عَمْرٌو: مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُمْرَ النَّعَمِ


Bukhari-7534

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48 நபி (ஸல்) அவர்கள் தொழுகையை செயல்’ (அமல்) எனக் குறிப்பிட்டதும், அல் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவ ருக்குத் தொழுகையே கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறியதும்.

7534. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதும், தாய் தந்தையருக்கு நன்மை புரிவதும், பின்னர் இறைவழியில் அறப்போரிடுவதும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.175

இதை அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்) அறிவித்தார்.

Book : 97


أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلاَةُ لِوَقْتِهَا، وَبِرُّ الوَالِدَيْنِ، ثُمَّ الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ»


Bukhari-7533

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 (நபியே!) கூறுக: (யூதர்களே!) தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக் காட்டுங்கள் எனும் (3:59ஆவது) இறைவசனம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அதன்படி அவர்கள் செயல்பட்டார்கள். இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அதன்படி செயல்பட்டார்கள். உங்களுக்குக் குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் அதன்படி செயல்பட்டீர்கள்.172 அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதுகி றார்கள் எனும் (2:121ஆவது) வசனத்திற்கு அபூரஸீன் (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கை யில் அதைப் பின்பற்றி முறையாக அதன்படி செயல்படுவார்கள் என்று கூறியுள்ளார்கள். யுத்லா’ எனும் சொல்லுக்கு ஓதப்படுதல்’ என்று பொருள். ஹஸனுத் திலாவத்’ என்றால்,குர்ஆனை அழகிய முறையில் ஓதுதல் என்று பொருள். குர்ஆன் மீது (உண்மையான) நம்பிக்கை கொண்டவர்தாம் அதன் சுவையையும் பயனையும் அடைவார். அதை உறுதியோடு நம்பியவர்தாம் உரிய முறையில் அதை சுமப்பார். அல்லாஹ் கூறுகின்றான்: தவ்ராத் வேதத்தைச் செயல்படுத்தும் (பொறுப்புச்) சுமை வழங்கப்பட்டு அதை சுமக்கத் தவறியவர்கள் ஏடுகளைச் சுமக்கும் கழுதை போன்றவர்கள். அல்லாஹ்வின் வசனங்களை நம்ப மறுத்துவிட்டவர்களின் நிலை மிகவும் கெட்டது. அக்கிரமக் காரர்களை அல்லாஹ்

إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَنْ سَلَفَ مِنَ الأُمَمِ، كَمَا بَيْنَ صَلاَةِ العَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ، فَعَمِلُوا بِهَا حَتَّى انْتَصَفَ النَّهَارُ ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ، فَعَمِلُوا بِهِ حَتَّى صُلِّيَتِ العَصْرُ ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيتُمُ القُرْآنَ، فَعَمِلْتُمْ بِهِ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، فَأُعْطِيتُمْ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الكِتَابِ: هَؤُلاَءِ أَقَلُّ مِنَّا عَمَلًا وَأَكْثَرُ أَجْرًا، قَالَ اللَّهُ: هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا؟ قَالُوا: لاَ، قَالَ: فَهُوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ


Bukhari-7532

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7532. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! உயர்ந்தோன் அல்லாஹ்விடம் மிகப் பெரிய பாவம் எது?’ என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பித்து வணங்குவதாகும்’ என்று பதிலளித்தார்கள். அவர், ‘பிறகு எது?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு உன் குழந்தை உன்னுடன் உணவு உண்பதை அஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்’ என்று பதிலளித்தார்கள். அவர், ‘பிறகு எது?’ என்று கேட்க, நபியவர்கள் ‘உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ், ‘அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரம் செய்ய மாட்டார்கள். யாரேனும் இச்செயலைச் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவார். மறுமைநாளில் அவருக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும்’ எனும் வசனத்தை (திருக்குர்ஆன் 25:68) அருளினான்.171

قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ؟ قَالَ: «أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ»، قَالَ: ثُمَّ أَيْ؟ قَالَ: «ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ»، قَالَ: ثُمَّ أَيْ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»، فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَهَا: {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ، وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالحَقِّ، وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا يُضَاعَفْ لَهُ العَذَابُ} [الفرقان: 69] الآيَةَ


Bukhari-7531

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7531. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) வேத அறிவிப்பிலிருந்து எதையும் மறைத்தார்கள் என உங்களிடம் யாரேனும் சொன்னால் அவரை நீங்கள் நம்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் ‘(எம்) தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீங்கள் எடுத்துரைக்கவில்லை என்றாம்விடும்’ என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 05:67)170

இதை மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :97


مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَمَ شَيْئًا؟ وَقَالَ مُحَمَّدٌ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَنْ حَدَّثَكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَمَ شَيْئًا مِنَ الوَحْيِ فَلاَ تُصَدِّقْهُ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ»: {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ} [المائدة: 67]


Bukhari-7530

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46 இறைத்தூதரே! உங்கள் இறைவனிட மிருந்து உங்களுக்கு அருளப்பட்டுள்ள (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரையுங்கள். (இந்தப் பணியை) நீங்கள் செய்யாவிட்டால் அவனது தூதை நீங்கள் எடுத்துரைக்க வில்லை என்றாகிவிடும் எனும் (5:67ஆவது) இறைவசனம். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடமிருந்து தூது வந்தது; அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். நாம் அதை ஏற்றுச் செயல்பட வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: அந்தத் தூதர்கள் தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை சேர்த்துவிட்டார்களா என்று அறிந்துகொள்வதற்காக (அவர்களுக்கு முன்பும் பின்பும் பாதுகாவலரை நியமிக்கின் றான்). (72:28) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (நூஹ் கூறினார்:) நான் என் இறைவனின் தூதையே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். (7:62) கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் (தபூக் போரில்) நபி (ஸல்) அவர்களுடன் கலந்து கொள்ளாமல் பின்தங்கிவிட்ட போது அல்லாஹ் கூறினான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல்பாடுகளைப் பார்ப்பார்கள். (9:105) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதாவது ஒருவருடைய நற்செயல் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், செயல் படுங்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள் என்று சொல்லுங்கள். (பிறரை

أَخْبَرَنَا نَبِيُّنَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رِسَالَةِ رَبِّنَا: «أَنَّهُ مَنْ قُتِلَ مِنَّا صَارَ إِلَى الجَنَّةِ»


Next Page » « Previous Page