Category: புஹாரி

Bukhari

Bukhari-7529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7529. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும் பகலும் தானம் செய்கிறார்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.168

Book :97


لاَ حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ القُرْآنَ فَهُوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ ” سَمِعْتُ سُفْيَانَ مِرَارًا، لَمْ أَسْمَعْهُ يَذْكُرُ الخَبَرَ، وَهُوَ مِنْ صَحِيحِ حَدِيثِهِ


Bukhari-7528

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 (இரண்டு பேர் பொறாமைகொள்ளத்தக்க வர்கள்.) அவர்களில் ஒருவர் யாரென்றால், அல்லாஹ் அவருக்குக் குர்ஆனின் ஞானத்தை அருளினான். அவர் அல்லும் பகலும் (அதை ஓதி) அதன்படி செயல்படு கிறார். இதைக் காணும் மற்றொருவர், இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்று எனக்கும் வழங்கப்படுமாயின் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே! என்று கூறுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறியது. குர்ஆனை ஒதி அதன்படி செயல்படுவ தென்பது, (மற்ற செயல்களைப் போன்றே) அந்த மனிதரின் செயல்தான் என அல்லாஹ் விவரிக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வேறுபட் டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:22) புகழுயர்ந்த இறைவன் கூறுகின்றான்: நன்மை செய்யுங்கள்; நீங்கள் வெற்றியடையலாம். (22:77)

7528. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும் பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு) வருகிறார். (இதைக்கண்ட) மற்றொருவர், ‘இவருக்கு வழங்கப்பட்டதைப்

لاَ تَحَاسُدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللَّهُ القُرْآنَ فَهُوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، فَهُوَ يَقُولُ: لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ فِي حَقِّهِ، فَيَقُولُ: لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ عَمِلْتُ فِيهِ مِثْلَ مَا يَعْمَلُ


Bukhari-7527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7527. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில், ‘இராகமிட்டு உரத்த குரலில் ஓதாதவர்கள் எனக் கூடுதலாக வந்துள்ளது.

Book :97


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالقُرْآنِ»، وَزَادَ غَيْرُهُ: «يَجْهَرُ بِهِ»


Bukhari-7526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7526. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) உங்கள் தொழுகையில் நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றது.

இதை உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.166

Book :97


نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} [الإسراء: 110] فِي الدُّعَاءِ


Bukhari-7525

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44 மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படையாகப் பேசினாலும் சரி (அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்). திண்ணமாக, அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறி கின்றான். எவன் படைத்திருக்கின்றானோ அவன் அறிய மாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கறிந்தனாகவும் இருக்கின்றான் எனும் (67:13,14 ஆகிய) இறைவசனங்கள்.

7525. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ‘(நபியே!) உங்கள் தொழுகையில். நீங்கள் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்’ எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுது கொண்டு) இருந்தார்கள். தம் தோழர்களுடன் தொழும்போது உரத்த குரலில் குர்ஆனை ஓதுவார்கள். அதை இணைவைப்பாளர்கள கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். எனவே, அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு

فِي قَوْلِهِ تَعَالَى: {وَلاَ تَجْهَرْ [ص:154] بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]، قَالَ: «نَزَلَتْ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُخْتَفٍ بِمَكَّةَ، فَكَانَ إِذَا صَلَّى بِأَصْحَابِهِ رَفَعَ صَوْتَهُ بِالقُرْآنِ، فَإِذَا سَمِعَهُ المُشْرِكُونَ، سَبُّوا القُرْآنَ وَمَنْ أَنْزَلَهُ وَمَنْ جَاءَ بِهِ»، فَقَالَ اللَّهُ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ} [الإسراء: 110]: أَيْ بِقِرَاءَتِكَ فَيَسْمَعَ المُشْرِكُونَ فَيَسُبُّوا القُرْآنَ: {وَلاَ تُخَافِتْ بِهَا} [الإسراء: 110]، عَنْ أَصْحَابِكَ فَلاَ تُسْمِعُهُمْ {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا} [الإسراء: 110]


Bukhari-7524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43

(நபியே!) இந்த வஹீயை (-வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) இறைவசனமும், வஹீ அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதமும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறியதாவது: அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னை நினைவு கூரும் போதும், (என்னைப் பற்றிப் பேசி) அவனுடைய உதடுகள் அசையும் போதும் நான் அவனுடனேயே இருக்கிறேன்.

7524. ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘(நபியே!) இந்த வஹீயை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) இறைவசனம் குறித்து விளக்கும்போது ‘நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பெறும்போது கடும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். (எங்கே வசனங்கள் மறந்துவிடுமோ என்ற அச்சத்தினால்) தம் உதடுகளை அசைத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று கூறினார்கள்.

-இப்னு

فِي قَوْلِهِ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} [القيامة: 16]، قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَالِجُ مِنَ التَّنْزِيلِ شِدَّةً، وَكَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ» – فَقَالَ لِي ابْنُ عَبَّاسٍ: فَأَنَا أُحَرِّكُهُمَا لَكَ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَرِّكُهُمَا، فَقَالَ سَعِيدٌ: أَنَا أُحَرِّكُهُمَا كَمَا كَانَ ابْنُ عَبَّاسٍ يُحَرِّكُهُمَا، فَحَرَّكَ شَفَتَيْهِ – فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: 17]، قَالَ: «جَمْعُهُ فِي صَدْرِكَ ثُمَّ تَقْرَؤُهُ»، {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 18] قَالَ: ” فَاسْتَمِعْ لَهُ وَأَنْصِتْ، ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ، قَالَ: فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلاَمُ اسْتَمَعَ، فَإِذَا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا أَقْرَأَهُ


Bukhari-7523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7523. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம் மக்களே! வேதக்காரர்களிடம் நீங்கள் எதைப் பற்றியும் ஏன் கேட்காதீர்கள்? உங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளியுள்ள வேதம் தான் இறைச்செய்திகளிலேயே புதியதும், கலப்படமில்லாத தூய்மையானதும் ஆகும். வேதக்காரர்களோ இறைவேதங்களை மாற்றி, திரித்து, தம் கரங்களால் எழுதிக்கொண்ட ஏடுகளை அல்லாஹ்விடமிருந்து வந்தவை என, அதன் மூலம் அற்ப விலையைப் பெறுவதற்காகக் கூறுகிறார்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள ஞானம், வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிவதிலிருந்து உங்களைத் தடுக்கவில்லையா?

(அதே நேரத்தில்) அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த வேதக்காரர்களில் ஒருவர் கூட உங்களுக்கு அருளப்பெற்றுள்ள (வேதத்)தைப் பற்றிக் கேட்பதை நாம் கண்டதில்லை.

Book :97


يَا مَعْشَرَ المُسْلِمِينَ، كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الكِتَابِ عَنْ شَيْءٍ، وَكِتَابُكُمُ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْدَثُ الأَخْبَارِ بِاللَّهِ، مَحْضًا لَمْ يُشَبْ، وَقَدْ حَدَّثَكُمُ اللَّهُ: أَنَّ أَهْلَ الكِتَابِ قَدْ بَدَّلُوا مِنْ كُتُبِ اللَّهِ وَغَيَّرُوا، فَكَتَبُوا بِأَيْدِيهِمُ الكُتُبَ، قَالُوا: هُوَ مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِذَلِكَ ثَمَنًا قَلِيلًا، أَوَلاَ يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنَ العِلْمِ عَنْ مَسْأَلَتِهِمْ؟ فَلاَ وَاللَّهِ، مَا رَأَيْنَا رَجُلًا مِنْهُمْ يَسْأَلُكُمْ عَنِ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ


Bukhari-7522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒவ்வொரு நாளும் அவன் (-இறைவன்) ஏதேனும் ஒரு பணியில் இருக்கின்றான் எனும் (55:29 ஆவது) இறைவசனம்.

அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்குப் புதிய நினைவூட்டல் வரும்போதெல்லாம் அதை அவர்கள் விளையாட்டாகவேதான் செவியேற்கின்றார்கள். (21:2)

அதன் பின்னர் அல்லாஹ் ஏதேனும் ஒரு வழியை உருவாக்கக்கூடும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (65:1) அதாவது அல்லாஹ் ஒன்றைப் புதிதாக உருவாக்குவதும் படைப்பினங்கள் ஒன்றைப் புதிதாக உண்டாக்குவதும் ஒன்றாகாது. (இரண்டும் வெவ்வேறானவை ஆகும்.) ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் செவியேற்பவனாகவும் பார்க்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். (42:11)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத்  (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ், தான் நாடுகின்றவற்றைத் தனது கட்டளையால் உருவாக்குகின்றான். அவன் புதிதாகக் கட்டளையிட்டது தான் நீங்கள் தொழுகையில் பேசக் கூடாது

«كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الكِتَابِ عَنْ كُتُبِهِمْ، وَعِنْدَكُمْ كِتَابُ اللَّهِ، أَقْرَبُ الكُتُبِ عَهْدًا بِاللَّهِ، تَقْرَءُونَهُ مَحْضًا لَمْ يُشَبْ»


Bukhari-7521

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41

(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்த போது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங் களிலிருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்றே நீங்கள் எண்ணியிருந்தீர்கள் எனும் (41:22ஆவது) இறைவசனம்.

7521. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

(புனித கஅபா) ஆலயத்தின் அருகே ‘ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்’ அல்லது ‘குறைஷியர்’ இருவரும் ஸகஃபீ ஒருவரும்’ ஒன்று கூடினார்கள். அவர்களுக்கு வயிற்றில் சதை (தொந்தி) அதிகமாகப் போட்டிருந்தது. (ஆனால்,) அவர்களின் உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், ‘அல்லாஹ் நாம் சொல்வதைக் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?’ என்று கேட்க, மற்றொருவர், ‘நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; நாம் மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்’ என்றார்.

اجْتَمَعَ عِنْدَ البَيْتِ ثَقَفِيَّانِ وَقُرَشِيٌّ – أَوْ قُرَشِيَّانِ وَثَقَفِيٌّ – كَثِيرَةٌ شَحْمُ بُطُونِهِمْ، قَلِيلَةٌ فِقْهُ قُلُوبِهِمْ، فَقَالَ أَحَدُهُمْ: أَتَرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ مَا نَقُولُ؟ قَالَ الآخَرُ: يَسْمَعُ إِنْ جَهَرْنَا وَلاَ يَسْمَعُ إِنْ أَخْفَيْنَا، وَقَالَ الآخَرُ: إِنْ كَانَ يَسْمَعُ إِذَا جَهَرْنَا، فَإِنَّهُ يَسْمَعُ إِذَا أَخْفَيْنَا، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ وَلاَ جُلُودُكُمْ} [فصلت: 22] ” الآيَةَ