Category: புஹாரி

Bukhari

Bukhari-7479

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7479. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பின் ஹுனைன் செல்ல (திட்டமிட்டபோது) ‘அல்லாஹ் நாடினால் நாளை நாம் பனூ கினானா பள்ளத்தாக்கின் அருகே தங்குவோம். அந்த இடத்தில் தான் குறைஷியர் ‘நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்’ என்று சூளுரைத்தார்கள்’ என்று முஹஸ்ஸப் பள்ளத்தாக்கைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்.121

Book :97


«نَنْزِلُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ بِخَيْفِ بَنِي كِنَانَةَ، حَيْثُ تَقَاسَمُوا عَلَى الكُفْرِ يُرِيدُ المُحَصَّبَ»


Bukhari-7478

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7478. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘மூஸா(அலை) (அவர்கள் கல்வி கற்பதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களின் அந்தத் தோழர் யார்? அவர் ‘களிர்’ அவர்கள் தாமா?’ என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் ஹுர்ரு இப்னு கைஸ் அல் ஃபஸாரிய்யு என்பாரும் கருத்து வேறுபட்டு தர்க்கித்துக் கொண்டார்கள். அப்போது உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை இப்னு அப்பாஸ்(ருலி) அவர்கள் அழைத்து, ‘நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா(அலை) அவர்கள் எவரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாகத் தர்க்கித்துக் கொண்டோம். அவரின் நிலைக் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?’ என்று வினவினார்கள். உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்.

ஆம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்: இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டத்தாரிடையே மூஸா(அலை) அவர்கள் இருந்தபோது ஒருவர் வந்து ‘உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது

أَنَّهُ تَمَارَى هُوَ وَالحُرُّ بْنُ قَيْسِ بْنِ حِصْنٍ الفَزَارِيُّ فِي صَاحِبِ مُوسَى أَهُوَ خَضِرٌ؟ فَمَرَّ بِهِمَا أُبَيُّ بْنُ كَعْبٍ الأَنْصَارِيُّ، فَدَعَاهُ ابْنُ عَبَّاسٍ، فَقَالَ: إِنِّي تَمَارَيْتُ أَنَا وَصَاحِبِي هَذَا فِي صَاحِبِ مُوسَى الَّذِي سَأَلَ السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ شَأْنَهُ، قَالَ: نَعَمْ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” بَيْنَا مُوسَى فِي مَلَإٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: هَلْ تَعْلَمُ أَحَدًا أَعْلَمَ مِنْكَ؟ فَقَالَ مُوسَى: لاَ، فَأُوحِيَ إِلَى مُوسَى، بَلَى عَبْدُنَا خَضِرٌ، فَسَأَلَ مُوسَى السَّبِيلَ إِلَى لُقِيِّهِ، فَجَعَلَ اللَّهُ لَهُ الحُوتَ آيَةً، وَقِيلَ لَهُ إِذَا فَقَدْتَ الحُوتَ فَارْجِعْ فَإِنَّكَ سَتَلْقَاهُ، فَكَانَ مُوسَى يَتْبَعُ أَثَرَ الحُوتِ فِي البَحْرِ، فَقَالَ فَتَى مُوسَى لِمُوسَى: (أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ)، قَالَ مُوسَى: (ذَلِكَ مَا كُنَّا نَبْغِي فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا)، فَوَجَدَا خَضِرًا، وَكَانَ مِنْ شَأْنِهِمَا مَا قَصَّ اللَّهُ


Bukhari-7477

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7477. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘இறைவா! நீ நாடினால் எனக்கு மன்னிப்பளிப்பாயாக! நீ நாடினால் எனக்குக் கருணை புரிவாயாக! நீ நாடினால் எனக்கு வாழ்வாதாரம் அளிப்பாயாக!’ என்று நீங்கள் பிரார்த்தனை செய்யாதீர்கள். கேட்பதை அவனிடம் வலியுறுத்திக் கேளுங்கள். தான் விரும்பியதையே அவன் செய்வான். அவனை நிர்ப்பந்தப்படுத்துபவர் எவருமில்லை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.119

Book :97


لاَ يَقُلْ أَحَدُكُمْ: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ، ارْحَمْنِي إِنْ شِئْتَ، ارْزُقْنِي إِنْ شِئْتَ، وَليَعْزِمْ مَسْأَلَتَهُ، إِنَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ، لاَ مُكْرِهَ لَهُ


Bukhari-7476

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7476. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் ‘யாசகம் கேட்பவர்’ அல்லது ‘தேவையுடையவர்’ யாரேனும் வந்தால் (தம் தோழர்களை நோக்கி,) ‘(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ் தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்றுகிறான்’ என்று கூறுவார்கள். 118

Book :97


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ السَّائِلُ – وَرُبَّمَا قَالَ جَاءَهُ السَّائِلُ – أَوْ صَاحِبُ الحَاجَةِ، قَالَ: «اشْفَعُوا فَلْتُؤْجَرُوا وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ»


Bukhari-7475

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7475. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை நான் ஒரு கிணற்றின் அருகே கண்டேன். (அதிலிருந்து) நான் இறைக்க வேண்டுமென அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் புதல்வர் (அபூ பக்ர்(ரலி) அவர்கள்) அதை (வாளியை) எடுத்துக் கொண்டு (அதிலிருந்து) ‘ஒரு வாளி நீரை’ அல்லது ‘இரண்டு வாளிகள் நீரை’ இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் (அவரின் சோர்வை) அவருக்கு மன்னிப்பானாக! பிறகு அதை உமர் எடுத்தார். அப்போது அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டிருந்தது. அவரைப் போன்று சீராகவும் உறுதியாகவும் செயல்படுகிற புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி,) உமர் அவர்களைச் சுற்றிலும் ஒட்டகங்கள் ஓய்வெடுக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.)117

Book :97


«بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي عَلَى قَلِيبٍ، فَنَزَعْتُ مَا شَاءَ اللَّهُ أَنْ أَنْزِعَ، ثُمَّ أَخَذَهَا ابْنُ أَبِي قُحَافَةَ فَنَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ وَفِي نَزْعِهِ ضَعْفٌ، وَاللَّهُ يَغْفِرُ لَهُ، ثُمَّ أَخَذَهَا عُمَرُ فَاسْتَحَالَتْ غَرْبًا، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا مِنَ النَّاسِ يَفْرِي فَرِيَّهُ حَتَّى ضَرَبَ النَّاسُ حَوْلَهُ بِعَطَنٍ»


Bukhari-7474

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7474. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்திக்குக் கொள்ள அங்கீகரிக்கப்பெற்ற) ஒரு பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் என் பிரார்த்தனைய மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரைக்க பத்திரப்படுத்திவைக்க விரும்புகிறேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.116

Book :97


«لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ، فَأُرِيدُ إِنْ شَاءَ اللَّهُ أَنْ أَخْتَبِيَ دَعْوَتِي، شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ القِيَامَةِ»


Bukhari-7473

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7473. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மதீனாவிற்கு தஜ்ஜால் வருவான். வானவர்கள் மதீனாவைக் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்பான். எனவே, தஜ்ஜாலும் கொள்ளைநோயும் அல்லாஹ் நாடினால் மதீனாவை நெருங்க முடியாது.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.115

Book :97


«المَدِينَةُ يَأْتِيهَا الدَّجَّالُ، فَيَجِدُ المَلاَئِكَةَ يَحْرُسُونَهَا فَلاَ يَقْرَبُهَا الدَّجَّالُ، وَلاَ الطَّاعُونُ إِنْ شَاءَ اللَّهُ»


Bukhari-7472

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7472. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம் ‘உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுப் பேசினார். அதற்கு அந்த யூதர், ‘உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று (பதிலுக்கு) கூறினார்.

அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்தவற்றைத் தெரிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி) ‘மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன்.

அப்போது மூஸா(அலை) அவர்கள் (அல்லாஹ்வின்) அரியாசனத்தின் ஓரத்தைப் பிடித்துக்

اسْتَبَّ رَجُلٌ مِنَ المُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ اليَهُودِ، فَقَالَ المُسْلِمُ: وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا عَلَى العَالَمِينَ فِي قَسَمٍ يُقْسِمُ بِهِ، فَقَالَ اليَهُودِيُّ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى العَالَمِينَ، فَرَفَعَ المُسْلِمُ يَدَهُ عِنْدَ ذَلِكَ فَلَطَمَ اليَهُودِيَّ، فَذَهَبَ اليَهُودِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ بِالَّذِي كَانَ مِنْ أَمْرِهِ، وَأَمْرِ المُسْلِمِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا مُوسَى بَاطِشٌ بِجَانِبِ العَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي، أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّهُ»


Bukhari-7471

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7471. அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை நாங்கள் தொழுகையைவிட்டு உறங்கிவிட்டபோது நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ், தான் நாடியபோது உங்கள் உயிர்களைக் கைப்பற்றி, தான் நாடியபோது அவற்றைத் திருப்பி அனுப்புகிறான்’ என்றார்கள். பிறகு மக்கள் தங்கள் இயற்கைக் கடன்களை நிறைவு செய்து அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதற்குள் சூரியன் உதயமாம் வெளுத்துவிட்டிருந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து (தவறிப் போன ஃபஜ்ர் தொழுகையை மக்களுடன்) தொழுதார்கள்.113
Book :97


حِينَ نَامُوا عَنِ الصَّلاَةِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ، وَرَدَّهَا حِينَ شَاءَ»، فَقَضَوْا حَوَائِجَهُمْ، وَتَوَضَّئُوا إِلَى أَنْ طَلَعَتِ الشَّمْسُ وَابْيَضَّتْ، فَقَامَ فَصَلَّى


Bukhari-7470

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7470. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) கிராமவாசி ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். ‘கவலைப்படாதீர்கள்! (உம்முடைய நோய்) அல்லாஹ் நாடினால் (உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்தும்’ என்றார்கள். அந்தக் கிராமவாசி ‘தூய்மைப்படுத்துமா? (இல்லை.) மாறாக, வயதான கிழவனைப் பீடிக்கிற கொதிக்கும் காய்ச்சல் ஆகும். அந்தக் காய்ச்சல் இவனை மண்ணறைகளைச் சந்திக்க வைத்துவிடும்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் சரி (அவ்வாறே ஆகும்)’ என்றார்கள்.112

Book :97


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  دَخَلَ عَلَى أَعْرَابِيٍّ يَعُودُهُ فَقَالَ: «لاَ بَأْسَ عَلَيْكَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ»، قَالَ: قَالَ الأَعْرَابِيُّ: طَهُورٌ بَلْ هِيَ حُمَّى تَفُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ تُزِيرُهُ القُبُورَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَنَعَمْ إِذًا»


Next Page » « Previous Page