Category: புஹாரி

Bukhari

Bukhari-7459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால் நாம் கூறுவதெல்லாம் ஆகுக’ என்பது தான் . உடனே அது உண்டாகிவிடும் எனும் (16:40ஆவது) இறைவசனம்.

7459. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வின் கட்டளை(யான மறுமை நாள்) வரும் வரை என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர், (உண்மையை எதிர்க்கும்) மக்களின் மீது மேலாண்மை கொண்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்.

என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.99

Book : 97


«لاَ يَزَالُ مِنْ أُمَّتِي قَوْمٌ ظَاهِرِينَ عَلَى النَّاسِ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ»


Bukhari-7458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7458. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார். இவர்களில் இறைவழியில் போரிடுகிறவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்’ என்று பதிலளித்தார்கள்.98

Book :97


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ الرَّجُلُ: يُقَاتِلُ حَمِيَّةً، وَيُقَاتِلُ شَجَاعَةً، وَيُقَاتِلُ رِيَاءً، فَأَيُّ ذَلِكَ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ العُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ»


Bukhari-7457

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7457. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைவழியில் போராடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவனுடைய பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்.

என அபூ ஹுரைர(ரலி) அறிவித்தார்.97

Book :97


«تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ إِلَّا الجِهَادُ فِي سَبِيلِهِ وَتَصْدِيقُ كَلِمَاتِهِ، بِأَنْ يُدْخِلَهُ الجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ، مَعَ مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ»


Bukhari-7456

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7456. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண்மை பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்) கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) ‘இவரிடம் ‘உயிர்’ (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!’ என்றார். இன்னொருவர், ‘இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லிவிடலாம்)’ என்றார்.

பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் ‘ரூஹ்’ பற்றிக் கேட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்துகொண்டேன். பிறகு அவர்கள், ‘(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்; உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது’ எனும் (திருக்குர்ஆன் 17:85 வது)

كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَرْثٍ بِالْمَدِينَةِ وَهُوَ مُتَّكِئٌ عَلَى عَسِيبٍ، فَمَرَّ بِقَوْمٍ مِنَ اليَهُودِ ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: سَلُوهُ عَنِ الرُّوحِ، وَقَالَ بَعْضُهُمْ: لاَ تَسْأَلُوهُ عَنِ الرُّوحِ، فَسَأَلُوهُ، «فَقَامَ مُتَوَكِّئًا عَلَى العَسِيبِ وَأَنَا خَلْفَهُ فَظَنَنْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ، فَقَالَ»: {وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ العِلْمِ إِلَّا قَلِيلًا} [الإسراء: 85]، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: قَدْ قُلْنَا لَكُمْ لاَ تَسْأَلُوهُ


Bukhari-7455

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7455. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்), ‘ஜிப்ரீலே! நீங்கள் இப்போது எம்மைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?’ என்று கேட்டார்கள். அப்போதுதான், (நபியே!) உங்களுடைய இறைவனின் உத்தரவுபடியே தவிர (வானவர்களாகிய) நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னருப்பவையும், பின்னிருப்பவையும் இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்குச் சொந்தமானவையே! (இதில் எதையும்) உங்களுடைய இறைவன் மறப்பவன் அல்லன்’ எனும் (திருக்குர்ஆன் 19:64 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

இதுவே முஹம்மது(ஸல்) அவர்களு(டைய கேள்வி)க்கு பதிலாக அமைந்தது. 95

Book :97


«يَا جِبْرِيلُ، مَا يَمْنَعُكَ أَنْ تَزُورَنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا»، فَنَزَلَتْ: {وَمَا نَتَنَزَّلُ إِلَّا بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا} [مريم: 64] إِلَى آخِرِ الآيَةِ، قَالَ: كَانَ هَذَا الجَوَابَ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7454

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7454. உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரின் கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது ‘பகல்’ அல்லது ‘இரவு’ சேமிக்கப்படுகிறது. பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அது (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அந்த வானவரும் நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன: அவர், (கருவாக இருக்கும்) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும், அவனுடைய வாழ்நாளையும், செயல்பாட்டையும், அவன் (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா என்பதையும் (இறைவனின் கட்டளைப்படி) பதிவு செய்கிறார். பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால்தான், உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்செயல்களைப் புரிந்துகொண்டே செல்வார். இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் (இடைவெளி) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து

أَنَّ خَلْقَ أَحَدِكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا أَوْ أَرْبَعِينَ لَيْلَةً، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَهُ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَهُ، ثُمَّ يُبْعَثُ إِلَيْهِ المَلَكُ فَيُؤْذَنُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، فَيَكْتُبُ: رِزْقَهُ، وَأَجَلَهُ، وَعَمَلَهُ، وَشَقِيٌّ أَمْ سَعِيدٌ، ثُمَّ يَنْفُخُ فِيهِ الرُّوحَ، فَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ حَتَّى لاَ يَكُونُ بَيْنَهَا وَبَيْنَهُ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُ النَّارَ، وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، حَتَّى مَا يَكُونُ بَيْنَهَا وَبَيْنَهُ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الجَنَّةِ فَيَدْخُلُهَا


Bukhari-7453

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 இறைத்தூதர்களான நம் அடியார்களுக்கு (வெற்றி கிடைக்கும் என்ற) நமது கட்டளை முந்திவிட்டதுஎனும் (37:171ஆவது) இறைவசனம்.

7453. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது தன்னிடமுள்ள அரியாசனத்தின் (அர்ஷின்) மேலே ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்று தன்னிடம் எழுதி வைத்துக் கொண்டான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.93

Book : 97


لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ عِنْدَهُ فَوْقَ عَرْشِهِ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي


Bukhari-7452

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 (இறைவன்) வானங்கள் மற்றும் பூமி உள்பட எல்லாப் படைப்புகளையும் படைத்தது தொடர்பாக வந்துள்ளவை. படைத்தல் என்பது வளமும் உயர்வும் மிக்க இறைவனின் செயலும் அவனது கட்டளையுமாகும். இறைவன் தன் பண்புகளால், செயலால், கட்டளையால் படைப்போனாகவும் ஆக்குவோனாகவும் இருக்கின்றான்; அவன் யாராலும் படைக்கப் பட்டவன் அல்லன். அவனது செயலால், கட்டளையால்,படைப்பால், ஆக்கத்தால் உருவானவையே எல்லாச் செயல்களும் படைப்புகளும் சிருஷ்டிகளுமாகும்.

7452. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் (என் சிறியது தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்தில், இரவில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறுள்ளது என்பதைப் பார்ப்பதற்காக (ஒரு நாள்) இரவு தங்கினேன். அப்போது மைமூனா அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிவிட்டுத்தூங்கிவிட்டார்கள். ‘இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்தபோது’ அல்லது அதன் ‘ஒரு பகுதி வந்தபோது’ அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு ‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகல் மாறி

بِتُّ فِي بَيْتِ مَيْمُونَةَ لَيْلَةً، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا، لِأَنْظُرَ كَيْفَ صَلاَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ، «فَتَحَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَهْلِهِ سَاعَةً ثُمَّ رَقَدَ، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ، أَوْ بَعْضُهُ، قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ فَقَرَأَ»: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ} إِلَى قَوْلِهِ {لِأُولِي الأَلْبَابِ} [آل عمران: 190]، «ثُمَّ قَامَ فَتَوَضَّأَ وَاسْتَنَّ، ثُمَّ صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً»، ثُمَّ أَذَّنَ بِلاَلٌ بِالصَّلاَةِ، «فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى لِلنَّاسِ الصُّبْحَ»


Bukhari-7451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 அல்லாஹ் (ஈர்ப்பு சக்தியால்) வானங்கள் மற்றும் பூமியை விழாமல் தடுத்து நிறுத்தியிருக்கின்றான்எனும் (35:41ஆவது) இறைவசனம்.

7451. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

யூதப் பாதிரியார் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! மறுமைநாளில் அல்லாஹ் வானத்தை ஒரு விரலிலும் பூமியை ஒரு விரலிலும் மலைகளை ஒரு விரலிலும் மரத்தை ஒரு விரலிலும் நதிகளை ஒரு விரலிலும் இதர படைப்புகள் அனைத்தையும் ஒரு விரலிலும் (நிறுத்தி) வைத்துக்கொண்டு தன்னுடைய கரத்தால் (சைகை செய்தவாறு) ‘நானே அரசன்’ எனக் கூறுவான்’ என்றார்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு, ‘அவர்கள் (யூதர்கள்) அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை’ எனும் (திருக்குர்ஆன் 06:91 வது) வசனத்தைக் கூறினார்கள்.91

Book : 97


جَاءَ حَبْرٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ اللَّهَ يَضَعُ السَّمَاءَ عَلَى إِصْبَعٍ، وَالأَرْضَ عَلَى إِصْبَعٍ، وَالجِبَالَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ وَالأَنْهَارَ عَلَى إِصْبَعٍ، وَسَائِرَ الخَلْقِ عَلَى إِصْبَعٍ، ثُمَّ يَقُولُ بِيَدِهِ: أَنَا المَلِكُ، «فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ»: {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ} [الأنعام: 91]


Bukhari-7450

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7450. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மக்கள் சிலர் தாங்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக நரக நெருப்பினால் தீண்டப்பட்டு, அவர்களின் சருமத்தின் நிறமே மாறிவிடும். பிறகு அல்லாஹ் அவர்களைத் தன் தனிக் கருணையினால் சொர்க்கத்தில் அனுமதிப்பான். அவர்களுக்கு ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலைபெற்றோர்) என்று சொல்லப்படும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.90

Book :97


«لَيُصِيبَنَّ أَقْوَامًا سَفْعٌ مِنَ النَّارِ، بِذُنُوبٍ أَصَابُوهَا عُقُوبَةً، ثُمَّ يُدْخِلُهُمُ اللَّهُ الجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ، يُقَالُ لَهُمُ الجَهَنَّمِيُّونَ»، وَقَالَ هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page