Category: புஹாரி

Bukhari

Bukhari-4546

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4546. மர்வான் அல்அஸ்ஃபர்(ரஹ்) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் – அவர் இப்னு உமர்(ரலி)தாம் என்று எண்ணுகிறேன் – ‘உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான்.’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:284 வது) இறைவசனத்(தின் சட்டத்)தை இதற்குப் பின்னுள்ள (‘அல்லாஹ், எந்த ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு மீறிய பொறுப்புகளைச் சுமத்துவதில்லை’ எனும் 02:286 வது) இறைவசனம் மாற்றிவிட்டது’ என்று கூறினார்கள்.
Book :65


{إِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ} [البقرة: 284] قَالَ: «نَسَخَتْهَا الآيَةُ الَّتِي بَعْدَهَا»


Bukhari-4545

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54 உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் ஆற்றல் மிக்கவன் ஆவான் (எனும் 2:284ஆவது வசனத் தொடர்).
4545. மர்வான் அல் அஸ்ஃபர்(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் – அவர் இப்னு உமர்(ரலி) தாம் – ‘உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும், அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களை விசாரணை செய்வான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் ஆற்றல்மிக்கவன் ஆவான்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 02:284 வது) இறைவசன(த்தின் சட்ட)ம் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.
Book : 65


أَنَّهَا قَدْ نُسِخَتْ: {وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ} [البقرة: 284] ” الآيَةَ


Bukhari-4544

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 ஒரு நாளைப் பற்றி அஞ்சுங்கள். அந்நாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனவன் செய்தவற்றுக்கு நிறைவாக(ப் பிரதிபலன்) அளிக்கப்படுவான். இன்னும் அவர்கள் (எந்த வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (எனும் 2:281ஆவது இறைவசனம்).
4544. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறுதி வசனம் வட்டியைக் குறித்த (இந்த 02:281 வது) வசனம் ஆகும்.
Book : 65


«آخِرُ آيَةٍ نَزَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آيَةُ الرِّبَا»


Bukhari-4543

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 (உங்களிடம் கடன் வாங்கியவர் நிதி) நெருக்கடி உள்ளவராக இருந்தால், வசதி வருகின்றவரை எதிர்பார்(த்து பொறுத்திரு)த்தல் வேண்டும். நீங்கள் (தர்மத்தின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின்,தர்மமாக வழங்கிவிடுவதே மிகவும் மேலான தாகும் (எனும் 2:280ஆவது இறைவசனம்).
4543. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 – 281) அருளப்பெற்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று அவற்றை எங்களுக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.
Book : 65


«لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ، قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَهُنَّ عَلَيْنَا، ثُمَّ حَرَّمَ التِّجَارَةَ فِي الخَمْرِ»


Bukhari-4542

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 (வட்டியில் எஞ்சியுள்ளவற்றையும் நீங்கள் விட்டுவிடவில்லையாயின்) அல்லாஹ்விட மும் அவனுடைய தூதரிடமும் நீங்கள் போர் செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (எனும்2:279ஆவது வசனத் தொடர்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஃபஃதனூ எனும் சொல்லுக்கு அறிந்து கொள்ளுங்கள்என்று பொருள்.79
4542. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 – 281) அருளப்பெற்றபோது அவற்றை நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடைசெய்தார்கள்.
Book : 65


«لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ، قَرَأَهُنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِمْ فِي المَسْجِدِ، وَحَرَّمَ التِّجَارَةَ فِي الخَمْرِ»


Bukhari-4541

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 அல்லாஹ் வட்டிக்கு அழிவையும் தான தர்மங்களுக்கு வளர்ச்சியையும் அளிக்கின் றான் (எனும்2:276ஆவது வசனத் தொடர்). (அதாவது) வட்டியைப் பயனற்றுப் போகச் செய்து விடுகின்றான்.
4541. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (திருக்குர்ஆன் 02: 275 – 281) அருளப்பெற்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாசலில் (மக்களுக்கு) ஓதிக் காட்டினார்கள். மேலும், மதுவியாபாரத்திற்குத் தடைவிதித்தார்கள்.
Book : 65


«لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ الأَوَاخِرُ مِنْ سُورَةِ البَقَرَةِ، خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَلاَهُنَّ فِي المَسْجِدِ، فَحَرَّمَ التِّجَارَةَ فِي الخَمْرِ»


Bukhari-4540

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 வட்டியை (வாங்கி) விழுங்குகிறவர்கள் ஷைத்தானின் தீண்டலால் பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழமாட்டர். இது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வணிகம் என்பதே வட்டியைப் போன்றதுதானே எனக் கூறியதனாலேயாம். அல்லாஹ் வணிகத்தை அனுமதித்தும் வட்டியை விலக்கியும் இருக்கிறான் (எனும் 2:275ஆவது வசனத் தொடர்). (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்மஸ்ஸு (தீண்டல்) எனும் சொல்லுக்குப் பைத்தியம்என்று பொருள்.
4540. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அல்பகரா அத்தியாயத்தின் இறுதிவசனங்கள் (திருக்குர்ஆன் 02:275 – 281) வட்டி தொடர்பாக இறங்கியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளி வாசலில் வைத்து) ஓதிக் காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.
Book : 65


«لَمَّا نَزَلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ فِي الرِّبَا، قَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ ثُمَّ حَرَّمَ التِّجَارَةَ فِي الخَمْرِ»


Bukhari-4539

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48 (பொருளீட்ட முடியாதவாறு) அல்லாஹ்வின் வழியில் தடுத்துவைக்கப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள்) உரியவையாகும். அவர்கள் (பொருளீட்டுவதற்காக) பூமியில் நடமாட இயலாதவர்கள். அவர்கள் இரவாததால், அறியாதோர் அவர்களைச் செல்வந்தர்கள் என எண்ணுவர். அவர்களின் (எளிமைத்) தோற்றத்தைக் கொண்டு அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள் (எனும் 2:273ஆவது வசனத் தொடர்). (தர்மம்) கேட்டு என்னைத் தொந்தரவு செய்தான்; என்னை நச்சரித்தான் என்று சொல்வதற்கு அல்ஹஃப அலய்ய என்று (அரபுகள்) கூறுவர். இச் சொல்லின் வேர்ச் சொல்லே மேற்காணும் வசனத்தின் மூலத்தில் இல்ஹாஃப் (வற்புறுத்தல்) என இடம் பெற்றுள்ளது.
4539. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரிச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், ‘அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்’ எனும் (இந்த 02:273 வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 65


«لَيْسَ المِسْكِينُ الَّذِي تَرُدُّهُ التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ، وَلاَ اللُّقْمَةُ وَلاَ اللُّقْمَتَانِ، إِنَّمَا المِسْكِينُ الَّذِي يَتَعَفَّفُ، وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ» يَعْنِي قَوْلَهُ: {لاَ يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا} [البقرة: 273]


Bukhari-4538

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 47 நீரருவிகள் எப்போதும் ஓடிக் கொண்டிருக் கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந் தோட்டம் ஒருவருக்கு இருந்து, அதில் எல்லா வகை யான கனிகளும் அவருக்குக் கிடைக்கின்றன. அவரை முதுமை வந்தடைகிறது. வலு வில்லாத குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். (இந்நிலையில்) நெருப்புடன் கூடிய சூறாவளி தாக்கி அது கரிந்து போவதை உங்களில் எவரேனும் விரும்பு வாரா? இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்திக்கும் பொருட்டு (உதாரணங்களின் மூலம்) உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றான் எனும் (2:266 ஆவது) இறைவசனம்.
4538. அப்துல் அஸீஸ் இப்னு அப்தில் மலிக் இப்னி ஜுரைஜ்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்), இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தும், அவர்களின் சகோதரர் அபூ பக்ர் இப்னு அபீ முலைக்கா அவர்கள், உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடமிருந்தும் (கேட்டு) அறிவித்தார்கள்:
உமர்(ரலி) ஒரு நாள் நபித்தோழர்களிடம், ‘நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிற திராட்சை மற்றும் பேரிச்சைத் தோட்டம் ஒருவருக்கு இருந்து…’ (என்று தொடங்கும்) இந்த (திருக்குர்ஆன் 02:266 வது) வசனம் எது தொடர்பாக இறங்கிற்று என நீங்கள் கருதுகிறீர்கள்?’ என்று கேட்க, அவர்கள், ‘அல்லாஹ்வே அறிந்தவன்’ என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி) கோபமடைந்து, ‘எங்களுக்குத்

قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَوْمًا لِأَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِيمَ تَرَوْنَ هَذِهِ الآيَةَ نَزَلَتْ: {أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ} [البقرة: 266]؟ قَالُوا: اللَّهُ أَعْلَمُ، فَغَضِبَ عُمَرُ فَقَالَ: «قُولُوا نَعْلَمُ أَوْ لاَ نَعْلَمُ»، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فِي نَفْسِي مِنْهَا شَيْءٌ يَا أَمِيرَ المُؤْمِنِينَ، قَالَ عُمَرُ: «يَا ابْنَ أَخِي قُلْ وَلاَ تَحْقِرْ نَفْسَكَ»، قَالَ ابْنُ عَبَّاسٍ: ضُرِبَتْ مَثَلًا لِعَمَلٍ، قَالَ عُمَرُ: «أَيُّ عَمَلٍ؟» قَالَ ابْنُ عَبَّاسٍ: لِعَمَلٍ، قَالَ عُمَرُ: «لِرَجُلٍ غَنِيٍّ يَعْمَلُ بِطَاعَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ، ثُمَّ بَعَثَ اللَّهُ لَهُ الشَّيْطَانَ، فَعَمِلَ بِالْمَعَاصِي حَتَّى أَغْرَقَ أَعْمَالَهُ»


Bukhari-4537

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 46 இப்ராஹீம் (இறைவனை நோக்கி,) இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டு! எனக் கூறிய போது, அவன், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்டான். (அதற்கு) ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன் என்று அவர் கூறினார். (அதற்கு இறைவன்) நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை உங்களிடம் வைத்து(ப் பல துண்டுகளாக்கி) பின்னர் அவற்றில் ஒவ்வொரு பாகத்தை, ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டு அவற்றை நீங்கள் அழையுங்கள்! அவை உங்களிடம் விரைந்து வந்து சேரும். திண்ணமாக அல்லாஹ், வல்லோனும் நுண்ணறிவு உள்ளோனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்றான் (எனும்2:260 ஆவது இறைவசனம்). (இவ்வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸுர்ஹுன்ன (அவற்றை உங்களிடம் வைத்து) எனும் சொல்லுக்கு அவற்றைப் பல துண்டுகளாக்கி என்று பொருள்.
4537. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(இறந்தவற்றுக்க அல்லாஹ் எப்படி உயிரூட்டிகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களை விடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) ஏனெனில், ‘என் இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய்

«نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ إِبْرَاهِيمَ»، إِذْ قَالَ: {رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي المَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي} [البقرة: 260]


Next Page » « Previous Page