Category: புஹாரி

Bukhari

Bukhari-7409

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 அ(ந்த இறை)வனே படைப்பவனும் தோற்றுவிப்பவனும் உருவமளிப்பவனும் ஆவான் எனும் (59:24ஆவது) இறைவசனம்.

7409. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்க கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே, புணர்ச்சி இடை முறிப்பு ‘அஸல்’ செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ‘படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Book : 97


فِي غَزْوَةِ بَنِي المُصْطَلِقِ أَنَّهُمْ أَصَابُوا سَبَايَا، فَأَرَادُوا أَنْ يَسْتَمْتِعُوا بِهِنَّ، وَلاَ يَحْمِلْنَ، فَسَأَلُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ العَزْلِ، فَقَالَ: «مَا عَلَيْكُمْ أَنْ لاَ تَفْعَلُوا، فَإِنَّ اللَّهَ قَدْ كَتَبَ مَنْ هُوَ خَالِقٌ إِلَى يَوْمِ القِيَامَةِ»، وَقَالَ مُجَاهِدٌ، عَنْ قَزَعَةَ، سَمِعْتُ أَبَا سَعِيدٍ فَقَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَتْ نَفْسٌ مَخْلُوقَةٌ إِلَّا اللَّهُ خَالِقُهَا»


Bukhari-7408

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7408. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைவனால் அனுப்பிவைக்கப் பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. (நினைவிற் கொள்க!) அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால் உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனின் இரண்டு கண்களுக்கிடையே ‘காஃ’பிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :97


«مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَ قَوْمَهُ الأَعْوَرَ الكَذَّابَ، إِنَّهُ أَعْوَرُ وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ، مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ»


Bukhari-7407

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 (மூசா!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன் எனும் (20:39ஆவது) இறை வசனம். அது (-நூஹ் உடைய மரக்கலம்) நம் கண் முன்னே (மிதந்து) சென்று கொண்டிருந்தது எனும் (54:14ஆவது) இறைவசனம்.44

7407. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் தஜ்ஜால் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வை நீங்கள் அறியாதவர்கள் அல்லர். நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்’ என்று கூறிவிட்டு, தம் கரத்தால் தம் கண்ணைச் சுட்டிக் காட்டினார்கள். மேலும், ‘மஸீஹுத் தஜ்ஜால் கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்’ என்றும் கூறினார்கள்.

Book : 97


ذُكِرَ الدَّجَّالُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ لاَ يَخْفَى عَلَيْكُمْ، إِنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ – وَأَشَارَ بِيَدِهِ إِلَى عَيْنِهِ – وَإِنَّ المَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ العَيْنِ اليُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ»


Bukhari-7406

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 அவனது (திரு) முகத்தைத் தவிர அனைத்துமே அழியக்கூடியவைதாம் எனும் (28:88ஆவது) இறைவசனம்.

7406. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ, உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதோனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை வேறு சிலர் அனுபவிக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது, ‘உங்களுக்கு மேலிருந்து’ என்பதைக் கேட்டவுடன் ‘(இறைவா!) உன் (திரு) முகத்தால் பாதுகாப்புக் கோருகிறேன்இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லது உங்கள் கால்களுக்குக் கீழிலிருந்து’ என்பதைக் கேட்டவுடனும் ‘(இறைவா!) உன் இரு) முகத்தால் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்றார்கள். ‘உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து…’ என்பதைக் கேட்டவுடன் ‘இது (முந்தைய வேதனைகளை கூட) மிக எளிதானதுஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Book : 97


لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ: {قُلْ هُوَ القَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ} [الأنعام: 65]، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعُوذُ بِوَجْهِكَ»، فَقَالَ: {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} [الأنعام: 65]، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعُوذُ بِوَجْهِكَ»، قَالَ: {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا} [الأنعام: 65]، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا أَيْسَرُ»


Bukhari-7405

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7405. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:

என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :97


أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً


Bukhari-7404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7404. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், ‘என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது’ என்று (கருணையைத்) தனக்கு.த்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான்.

இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :97


«لَمَّا خَلَقَ اللَّهُ الخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ وَهُوَ يَكْتُبُ عَلَى نَفْسِهِ وَهُوَ وَضْعٌ عِنْدَهُ عَلَى العَرْشِ إِنَّ رَحْمَتِي تَغْلِبُ [ص:121] غَضَبِي»


Bukhari-7403

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 அல்லாஹ் தன்னைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றான் எனும் (3:28ஆவது) இறைவசனம். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவா!) என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய்; (ஆனால்,) உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியேன் (என்று ஈசா கூறினார்). (5:116)

7403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வை விட அதிக ரோஷம் உள்ளவர் வேறெவரும் இல்லை. எனவே நான் அவன் ஆபாசங்களுக்குத் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் விரும்புகிறவர் வேறெவருமில்லர்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

Book : 97


«مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ، مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ، وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ المَدْحُ مِنَ اللَّهِ»


Bukhari-7402

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 அல்லாஹ்வின் உள்ளமை, அவனுடைய பண்புகள் மற்றும் பெயர்கள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.37 குபைப் (ரலி) அவர்கள், என்னுடைய இந்த உயிர்த் தியாகம் அல்லாஹ்வின் உள்ளமைக்காகத்தான் என்று கூறி, அல்லாஹ் வின் பெயரால் உள்ளமையைக் குறிப்பிட் டார்கள்.38

7402. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப்பே(ர் கொண்ட உளவுப்படையின)ரை (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் அன்சாரியான குபைப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். (உளவுப்படையினரின் வருகையை அறிந்து ஹுதைல் எனும் கூட்டத்தார் பின்தொடர்ந்து வந்து சிலரைக் கொன்றுவிட்டு, சிலரை சிறைபிடித்தார்கள். குபைப் மக்காவில் பனுல் ஹாரிஸ் எனும் கூட்டத்தாரிடம் விற்கப்பட்டார்.) அவர்கள் குபைப்(ரலி) அவர்களைக் கொலை செய்வதற்காக ஒன்று திரண்டபோது குபைப்(ரலி) அவர்கள் தங்களின் மறைவிடத்து முடிகளை மழித்துக் கொள்வதற்காக ஹாரிஸின் மகளிடம் சவரக்கத்தி ஒன்றை இரவல் வாங்கினார்கள். அவர்கள் அவரைக் கொல்வதற்காக (மக்காவின்) புனித எல்லைக்கு வெளியே சென்றபோது குபைப்(ரலி) அவர்கள், ‘நான் முஸ்லிமாகக் கொல்லப்படும் இந்த வேளையில்

«بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشَرَةً»، مِنْهُمْ خُبَيْبٌ الأَنْصَارِيُّ، فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عِيَاضٍ، أَنَّ ابْنَةَ الحَارِثِ، أَخْبَرَتْهُ، أَنَّهُمْ حِينَ اجْتَمَعُوا اسْتَعَارَ مِنْهَا مُوسَى يَسْتَحِدُّ بِهَا، فَلَمَّا خَرَجُوا مِنَ الحَرَمِ لِيَقْتُلُوهُ، قَالَ خُبَيْبٌ الأَنْصَارِيُّ:
[البحر الطويل]
وَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا … عَلَى أَيِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي،
وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ … يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ،
فَقَتَلَهُ ابْنُ الحَارِثِ، «فَأَخْبَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهُ خَبَرَهُمْ يَوْمَ أُصِيبُوا»


Bukhari-7401

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7401. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் உங்கள் தந்தையர் பெயர் சொல்லி சத்தியம் செய்ய வேண்டாம்; சத்தியம் செய்ய வேண்டாம். சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் பெயர் கூறியே சத்தியம் செய்யட்டும்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.36

Book :97


«لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ، وَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ»


Bukhari-7400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7400. ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் இருந்தேன். அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், ‘தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதற்குப் பகரமாக மற்றொரு பிராணியை அறுக்கட்டும். (தொழுது முடிக்கும்வரை) அறுக்காமலிருப்பர் (தொழுகைக்குப் பின்) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்’ என்றார்கள்.35

Book :97


أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ صَلَّى، ثُمَّ خَطَبَ فَقَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ»


Next Page » « Previous Page