Category: புஹாரி

Bukhari

Bukhari-3875

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3875. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே, அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீயிடமிருந்து திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகையிலிருக்கும் போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்லவில்லை. நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் சலாம் சொல்லி வந்தீர்களே’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘நிச்சயமாக! தொழுகையில் கவனம் தேவைப்படுகிறது’ என்று பதிலளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் அல் அஃமஷ்(ரஹ்) (தமக்கு முந்திய அறிவிப்பாளரான) இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம், ‘(நீங்கள் தொழும்போது எவரேனும் சலாம் சொல்லிவிட்டால்) நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு இப்ராஹீம்(ரஹ்), ‘என் மனத்திற்குள் நான் பதில் சலாம் சொல்லிவிடுகிறேன்’ என்று கூறினார்.
Book :63


كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فَيَرُدُّ عَلَيْنَا، فَلَمَّا رَجَعْنَا مِنْ عِنْدِ النَّجَاشِيِّ سَلَّمْنَا عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْنَا، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا نُسَلِّمُ عَلَيْكَ فَتَرُدُّ عَلَيْنَا؟ قَالَ: «إِنَّ فِي الصَّلاَةِ شُغْلًا» فَقُلْتُ لِإِبْرَاهِيمَ: كَيْفَ تَصْنَعُ أَنْتَ؟ قَالَ: «أَرُدُّ فِي نَفْسِي»


Bukhari-3874

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3874. உம்மு காலித் பின்த் காலித்(ரலி) அறிவித்தார்.
அபிசீனியா நாட்டிலிருந்து நானும் ஜுவைரிய்யா அவர்களும் வந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டுத் துணி ஒன்றைக் உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கரத்தால் அந்த அடையாளங்களைத் தடவியபடி, ‘அழகாயிருக்கிறதே! அழகாயிருக்கிறதே!’ (என்பதைக் குறிக்க அபிசீனிய மொழியில் ‘சனா, சனா’) என்று கூறலானார்கள்.
Book :63


قَدِمْتُ مِنْ أَرْضِ الحَبَشَةِ، وَأَنَا جُوَيْرِيَةٌ، فَكَسَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمِيصَةً لَهَا أَعْلاَمٌ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ الأَعْلاَمَ بِيَدِهِ وَيَقُولُ: «سَنَاهْ سَنَاهْ» قَالَ الحُمَيْدِيُّ: «يَعْنِي حَسَنٌ، حَسَنٌ»


Bukhari-3873

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3873. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உம்மு ஹபீபா அவர்களும் உம்மு ஸலமா அவர்களும் அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும், அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது அவரின் மண்ணறையின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம், மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்’ என்று கூறினார்கள்.
Book :63


أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا للنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِيكَ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-3872

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37 அபிசீனிய ஹிஜ்ரத்113 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தாயகம் (மக்காவைத்) துறந்து (ஹிஜ்ரத்) செல்லுகின்ற நாடு (கருங்கற்கள் நிறைந்த) இரு மலைகளுக் கிடையே பேரீச்ச மரங்கள் கொண்டதாக எனக்கு (கனவில்) காட்டப்பட்டது.114 (முஸ்லிம்களில்) சிலர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தனர். அப்போது அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் மதீனாவுக்குத் திரும்பினர். இது குறித்து அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்களும் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.115
3872. உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) அறிவித்தார்.
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னு அப்தி யகூஸ்(ரஹ்) அவர்களும் என்னிடம், ‘நீங்கள் உங்களுடைய (குலவழி) மாமா உஸ்மான்(ரலி) அவர்களிடம், அவர்களின் தாய் வழிச் சகோதரர் வலீத் இப்னு உக்பா பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீதின் செயல்பாடுகள் குறித்து அதிகமாகக் குறை கூறுகிறார்களே!’ என்று கேட்டார்கள். எனவே, நான் உஸ்மான்(ரலி) தொழுகைக்காக காத்திருந்தேன். அவர்களிடம் ‘எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது (உங்களுக்கு நான் கூற விரும்பும்) அறிவுரை’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘மனிதரே! உம்மிடமிருந்து

أَنَّ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ، قَالاَ لَهُ: مَا يَمْنَعُكَ أَنْ تُكَلِّمَ خَالَكَ عُثْمَانَ فِي أَخِيهِ الوَلِيدِ بْنِ عُقْبَةَ، وَكَانَ أَكْثَرَ النَّاسُ فِيمَا فَعَلَ بِهِ، قَالَ عُبَيْدُ اللَّهِ: فَانْتَصَبْتُ لِعُثْمَانَ حِينَ خَرَجَ إِلَى الصَّلاَةِ، فَقُلْتُ لَهُ: إِنَّ لِي إِلَيْكَ حَاجَةً، وَهِيَ نَصِيحَةٌ، فَقَالَ: أَيُّهَا المَرْءُ، أَعُوذُ بِاللَّهِ مِنْكَ، فَانْصَرَفْتُ، فَلَمَّا قَضَيْتُ الصَّلاَةَ جَلَسْتُ إِلَى المِسْوَرِ وَإِلَى ابْنِ عَبْدِ يَغُوثَ، فَحَدَّثْتُهُمَا بِالَّذِي قُلْتُ لِعُثْمَانَ، وَقَالَ لِي، فَقَالاَ: قَدْ قَضَيْتَ الَّذِي كَانَ عَلَيْكَ، فَبَيْنَمَا أَنَا جَالِسٌ مَعَهُمَا، إِذْ جَاءَنِي رَسُولُ عُثْمَانَ، فَقَالاَ لِي: قَدِ ابْتَلاَكَ اللَّهُ، فَانْطَلَقْتُ حَتَّى دَخَلْتُ عَلَيْهِ، فَقَالَ : مَا نَصِيحَتُكَ الَّتِي ذَكَرْتَ آنِفًا؟ قَالَ: فَتَشَهَّدْتُ، ثُمَّ قُلْتُ: ” إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْزَلَ عَلَيْهِ الكِتَابَ، وَكُنْتَ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَآمَنْتَ بِهِ، وَهَاجَرْتَ الهِجْرَتَيْنِ الأُولَيَيْنِ، وَصَحِبْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَيْتَ هَدْيَهُ، وَقَدْ أَكْثَرَ النَّاسُ فِي شَأْنِ الوَلِيدِ بْنِ عُقْبَةَ، فَحَقٌّ عَلَيْكَ أَنْ تُقِيمَ عَلَيْهِ الحَدَّ، فَقَالَ لِي: يَا ابْنَ أَخِي، آدْرَكْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: قُلْتُ: لاَ، وَلَكِنْ قَدْ خَلَصَ إِلَيَّ مِنْ عِلْمِهِ مَا خَلَصَ إِلَى العَذْرَاءِ فِي سِتْرِهَا، قَالَ: فَتَشَهَّدَ عُثْمَانُ، فَقَالَ: إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالحَقِّ، وَأَنْزَلَ عَلَيْهِ الكِتَابَ، وَكُنْتُ مِمَّنِ اسْتَجَابَ لِلَّهِ وَرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَآمَنْتُ بِمَا بُعِثَ بِهِ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهَاجَرْتُ الهِجْرَتَيْنِ الأُولَيَيْنِ، كَمَا قُلْتَ: وَصَحِبْتُ رَسُولَ اللَّهِ وَبَايَعْتُهُ، وَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلاَ غَشَشْتُهُ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اسْتَخْلَفَ اللَّهُ أَبَا بَكْرٍ، فَوَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلاَ غَشَشْتُهُ، ثُمَّ اسْتُخْلِفَ عُمَرُ، فَوَاللَّهِ مَا عَصَيْتُهُ وَلاَ غَشَشْتُهُ، ثُمَّ اسْتُخْلِفْتُ، أَفَلَيْسَ لِي عَلَيْكُمْ مِثْلُ الَّذِي كَانَ لَهُمْ عَلَيَّ؟ قَالَ: بَلَى، قَالَ: فَمَا هَذِهِ الأَحَادِيثُ الَّتِي تَبْلُغُنِي عَنْكُمْ؟ فَأَمَّا مَا ذَكَرْتَ مِنْ شَأْنِ الوَلِيدِ بْنِ عُقْبَةَ، فَسَنَأْخُذُ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ بِالحَقِّ، قَالَ: فَجَلَدَ الوَلِيدَ أَرْبَعِينَ جَلْدَةً، وَأَمَرَ عَلِيًّا أَنْ يَجْلِدَهُ، وَكَانَ هُوَ يَجْلِدُهُ ” وَقَالَ يُونُسُ، وَابْنُ أَخِي الزُّهْرِيِّ، عَنِ الزُّهْرِيِّ: «أَفَلَيْسَ لِي عَلَيْكُمْ مِنَ الحَقِّ مِثْلُ الَّذِي كَانَ لَهُمْ» قَالَ: أَبُو عَبْدِ اللَّهِ: {بَلاَءٌ مِنْ رَبِّكُمْ} [البقرة: 49] مَا ابْتُلِيتُمْ بِهِ مِنْ شِدَّةٍ، وَفِي مَوْضِعٍ: البَلاَءُ الِابْتِلاَءُ وَالتَّمْحِيصُ، مَنْ بَلَوْتُهُ وَمَحَّصْتُهُ، أَيِ اسْتَخْرَجْتُ مَا عِنْدَهُ، يَبْلُو: يَخْتَبِرُ. {مُبْتَلِيكُمْ} [البقرة: 249]: مُخْتَبِرُكُمْ. وَأَمَّا قَوْلُهُ: بَلاَءٌ عَظِيمٌ: النِّعَمُ،


Bukhari-3871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3871. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
(நபி – ஸல் அவர்கள் காலத்தில்) சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது.
Book :63


«انْشَقَّ القَمَرُ»


Bukhari-3870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3870. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது.
Book :63


«أَنَّ القَمَرَ انْشَقَّ عَلَى زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3869

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3869. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் (இரண்டு துண்டுகளாகப்) பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (இதைப் பார்த்து நினைவில் இருத்தி) சாட்சியாக இருங்கள்’ என்று கூறினார்கள். (அதன்) இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹிரா) மலையின் திசையில் சென்றது.
அறிவிப்பாளர் மஸ்ரூக்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில் ‘மக்காவில் (சந்திரன்) பிளந்தது’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
Book :63


انْشَقَّ القَمَرُ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِنًى، فَقَالَ: «اشْهَدُوا» وَذَهَبَتْ فِرْقَةٌ نَحْوَ الجَبَلِ وَقَالَ: أَبُو الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، انْشَقَّ بِمَكَّةَ، وَتَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ


Bukhari-3868

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 சந்திரன் பிளவுண்ட நிகழ்ச்சி
3868. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்கள் இறைத்தூதர் தாம் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில்) தங்களுக்கு ஒரு சான்றைக் காட்டும்படி மக்காவாசிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டு துண்டுகளாக (பிளந்திருக்கக்) காட்டினார்கள். எந்த அளவிற்கென்றால், மக்கா வாசிகள் அவ்விரு துண்டுகளுக்கிடையே ‘ஹிரா’ மலையைக் கண்டார்கள்.
Book : 63


«أَنَّ أَهْلَ مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرِيَهُمْ آيَةً، فَأَرَاهُمُ القَمَرَ شِقَّتَيْنِ، حَتَّى رَأَوْا حِرَاءً بَيْنَهُمَا»


Bukhari-3867

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3867. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
‘உமர் அவர்கள், நானும் அவரின் சகோதரியும் இஸ்லாத்தை எற்றதற்காக என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன் – அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை. – உஸ்மான்(ரலி) விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நீங்கள் நடந்து கொண்ட (விதத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) உஹுது மலை தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்துவிட்டால் அதுவும் சரியானதே’ என்று (கூஃபாவின் மஸ்ஜிதில் கூடியிருந்த) மக்களிடம் ஸயீத் இப்னு ஸைத்(ரலி) கூற கேட்டிருக்கிறேன்.
Book :63


لَوْ رَأَيْتُنِي مُوثِقِي عُمَرُ عَلَى الإِسْلاَمِ، أَنَا وَأُخْتُهُ، وَمَا أَسْلَمَ، وَلَوْ أَنَّ أُحُدًا انْقَضَّ لِمَا صَنَعْتُمْ بِعُثْمَانَ، لَكَانَ مَحْقُوقًا أَنْ يَنْقَضَّ»


Bukhari-3866

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3866. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
உமர்(ரலி) (ஒரு விஷயத்தைப் பற்றி) ‘நான் இதைக் குறித்து இப்படிக் கருதுகிறேன்’ என்று சொல்ல நான் கேட்பேனாயின், அந்த விஷயம் அவர்கள் கூறியதைப் போன்றுதான் இருக்கும். ஒரு முறை உமர்(ரலி) (தம் இடத்தில்) அமர்ந்திருந்த பொழுது அழகான ஒருவர் அவர்களைக் கடந்து சென்றார். அப்போது உமர்(ரலி), ‘ஒன்று நான் (இவர் அஞ்ஞானக் கலாசாரத்தில் இருப்பவர் என்று) நினைத்து தவறாயிருக்க வேண்டும்; அல்லது (நான் நினைத்தது சரியாக இருக்குமானால்) இந்த மனிதர் தம் (பழைய) அஞ்ஞானக் காலத்து மார்க்கத்திலேயே இருக்கவேண்டும்; அல்லது (அஞ்ஞானக் கால) அம்மக்களுக்குக் குறிசொல்பவராக (சோதிடராக) இருந்திருக்க வேண்டும். அந்த மனிதரை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர், உமர்(ரலி) அவர்களிடம் அழைத்து வரப்பட்டார். உமர்(ரலி), தாம் (முன்பு சந்தேகத்துடன்) கூறியதையே அந்த மனிதரிடமும் கேட்டார்கள். அந்த மனிதர், (தன்னைப் பற்றி உமர் முன் வைத்த சந்தேகத்தினால் வெறுப்படைந்தவராய்) ‘இன்று ஒரு முஸ்லிமான மனிதருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு போன்று நான் (எப்போதும்) பார்த்ததில்லை’ என்று கூறினார். உமர்(ரலி), ‘நீ எனக்கு (அறியாமைக் காலத்தில் நடந்த) செய்தியைச் சொல்லத் தான் வேண்டும் என்று விரும்புகிறேன்’

مَا سَمِعْتُ عُمَرَ، لِشَيْءٍ قَطُّ يَقُولُ: إِنِّي لَأَظُنُّهُ كَذَا إِلَّا كَانَ كَمَا يَظُنُّ ” بَيْنَمَا عُمَرُ جَالِسٌ، إِذْ مَرَّ بِهِ رَجُلٌ جَمِيلٌ، فَقَالَ: لَقَدْ أَخْطَأَ ظَنِّي، أَوْ إِنَّ هَذَا عَلَى دِينِهِ فِي الجَاهِلِيَّةِ، أَوْ: لَقَدْ كَانَ كَاهِنَهُمْ، عَلَيَّ الرَّجُلَ، فَدُعِيَ لَهُ، فَقَالَ لَهُ ذَلِكَ، فَقَالَ: مَا رَأَيْتُ كَاليَوْمِ اسْتُقْبِلَ بِهِ رَجُلٌ مُسْلِمٌ، قَالَ: فَإِنِّي أَعْزِمُ عَلَيْكَ إِلَّا مَا أَخْبَرْتَنِي، قَالَ: كُنْتُ كَاهِنَهُمْ فِي الجَاهِلِيَّةِ، قَالَ: فَمَا أَعْجَبُ مَا جَاءَتْكَ بِهِ جِنِّيَّتُكَ، قَالَ: بَيْنَمَا أَنَا يَوْمًا فِي السُّوقِ، جَاءَتْنِي أَعْرِفُ فِيهَا الفَزَعَ، فَقَالَتْ: أَلَمْ تَرَ الجِنَّ وَإِبْلاَسَهَا؟ وَيَأْسَهَا مِنْ بَعْدِ إِنْكَاسِهَا، وَلُحُوقَهَا بِالقِلاَصِ، وَأَحْلاَسِهَا، قَالَ: عُمَرُ صَدَقَ بَيْنَمَا أَنَا نَائِمٌ، عِنْدَ آلِهَتِهِمْ إِذْ جَاءَ رَجُلٌ بِعِجْلٍ فَذَبَحَهُ، فَصَرَخَ بِهِ صَارِخٌ، لَمْ أَسْمَعْ صَارِخًا قَطُّ أَشَدَّ صَوْتًا مِنْهُ يَقُولُ: يَا جَلِيحْ، أَمْرٌ نَجِيحْ، رَجُلٌ فَصِيحْ، يَقُولُ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَوَثَبَ القَوْمُ، قُلْتُ: لاَ أَبْرَحُ حَتَّى أَعْلَمَ مَا وَرَاءَ هَذَا، ثُمَّ نَادَى: يَا جَلِيحْ، أَمْرٌ نَجِيحْ، رَجُلٌ فَصِيحْ، يَقُولُ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقُمْتُ، فَمَا نَشِبْنَا أَنْ قِيلَ: هَذَا نَبِيٌّ


Next Page » « Previous Page