Category: புஹாரி

Bukhari

Bukhari-3865

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3865. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவியபோது மக்கள் அவர்களின் வீட்டருகே ஒன்று திரண்டு, ‘உமர் மதம் மாறிவிட்டார்’ என்று சொலலலானார்கள். அப்போது நான் சிறுவனாக என் வீட்டுக் கூரை மீது அமர்ந்து கொண்டிருந்தேன் – அப்போது ஒருவர் பட்டு அங்கி ஒன்றை அணிந்து கொண்டு வந்து, ‘உமர் மதம் மாறிவிட்டார். அதனால் என்ன? நான் அவருக்கு அபயம் அளித்திருக்கிறேன் (எனவே, அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது)’ என்று கூறினார். மக்கள் (அவர் சொன்னதைக் கேட்டு) அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டதைப் பார்த்தேன். நான், ‘யார் இவர்?’ என்று கேட்டேன். மக்கள், ‘(இவர்தான்) ஆஸ் இப்னு வாஇல்’ என்று பதிலளித்தார்கள்.
Book :63


لَمَّا أَسْلَمَ عُمَرُ اجْتَمَعَ النَّاسُ عِنْدَ دَارِهِ، وَقَالُوا: صَبَا عُمَرُ وَأَنَا غُلاَمٌ، فَوْقَ ظَهْرِ بَيْتِي، فَجَاءَ رَجُلٌ عَلَيْهِ قَبَاءٌ مِنْ دِيبَاجٍ، فَقَالَ: قَدْ صَبَا عُمَرُ فَمَا ذَاكَ، فَأَنَا لَهُ جَارٌ، قَالَ: فَرَأَيْتُ النَّاسَ تَصَدَّعُوا عَنْهُ فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: العَاصِ بْنُ وَائِلٍ


Bukhari-3864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3864. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை உமர் – ரலி – அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் தம்மைக் குறைஷிகள் கொல்ல வந்தார்கள் என்று) அஞ்சியவர்களாக(த் தம்) இல்லத்தினுள் அவர்கள் இருந்தபோது, ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மீ அபூ அம்ர் (எனும் குறைஷித் தலைவர்) கோடு போட்ட சால்வை ஒன்றைப் போட்டுக் கொண்டு பட்டினால் தைக்கப்பட்ட சட்டையொன்றை அணிந்து கொண்டு வந்து, ‘என்ன விஷயம்!’ என்று கேட்டார் – அவர் அறியாமைக் காலத்தில் எங்கள் நட்புக் குலமாயிருந்த ‘பனூ சஹ்கி’ குலத்தைச் சேர்ந்தவர் – உமர் அவர்கள், ‘உங்கள் குலத்தார் நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக என்னைக் கொல்ல எண்ணுகிறார்கள்’ என்று அவரிடம் சொல்ல அதற்கவர், ‘உன்னிடம் (நெருங்க அவர்களுக்கு) வழியில்லை’ என்று கூறினார். (உமர் – ரலி – கூறுகிறார்கள்:) ‘இவ்வாறு அவர் சொன்ன பிறகு நான் அமைதியடைந்தேன்.’ உடனே, ‘ஆஸ் இப்னு வாயில்’ வெளியே சென்று (மக்கா) பள்ளத்தாக்கே நிரம்பி வழியும்படி திரண்டு நின்ற மக்களைச் சந்தித்து, ‘நீங்கள் எங்கே நாடிப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள், ‘மதம் மாறி (நமக்கு துரோகம் செய்து)விட்ட இந்த கத்தாபின் மகனைத் தான் நாடிச் செல்கிறோம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘அவரிடம் (நெருங்க உங்களுக்கு) வழியில்லை’ என்று

بَيْنَمَا هُوَ فِي الدَّارِ خَائِفًا، إِذْ جَاءَهُ العَاصِ بْنُ وَائِلٍ السَّهْمِيُّ أَبُو عَمْرٍو، عَلَيْهِ حُلَّةُ حِبَرَةٍ وَقَمِيصٌ مَكْفُوفٌ بِحَرِيرٍ، وَهُوَ مِنْ بَنِي سَهْمٍ، وَهُمْ حُلَفَاؤُنَا فِي الجَاهِلِيَّةِ، فَقَالَ لَهُ: مَا بَالُكَ؟ قَالَ: ” زَعَمَ قَوْمُكَ أَنَّهُمْ سَيَقْتُلُونِي إِنْ أَسْلَمْتُ، قَالَ: لاَ سَبِيلَ إِلَيْكَ، بَعْدَ أَنْ قَالَهَا أَمِنْتُ، فَخَرَجَ العَاصِ فَلَقِيَ النَّاسَ قَدْ سَالَ بِهِمُ الوَادِي، فَقَالَ: أَيْنَ تُرِيدُونَ؟ فَقَالُوا: نُرِيدُ هَذَا ابْنَ الخَطَّابِ الَّذِي صَبَا، قَالَ: لاَ سَبِيلَ إِلَيْهِ فَكَرَّ النَّاسُ


Bukhari-3863

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 உமர் பின் கத்தாப் -ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது.
3863. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்.
இதை கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
Book : 63


«مَا زِلْنَا أَعِزَّةً مُنْذُ أَسْلَمَ عُمَرُ»


Bukhari-3862

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 சயீத் பின் ஸைத் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது.105
3862. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரலி) அறிவித்தார்.
‘அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் அவர்கள், நான் இஸ்லாத்தை ஏற்றதைக் கண்டித்து அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன். நீங்கள் உஸ்மான்(ரலி) விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நடந்து கொண்டதைக் கண்டு (மனம் தாளாமல்), உஹுது மலை தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்துவிட்டால் அதுவும் சரியானதே’ என்று ஸயீத் இப்னு ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) கூஃபாவின் மஸ்ஜிதில் வைத்துக்கூற கேட்டேன்.
Book : 63


«وَاللَّهِ لَقَدْ رَأَيْتُنِي، وَإِنَّ عُمَرَ لَمُوثِقِي عَلَى الإِسْلاَمِ، قَبْلَ أَنْ يُسْلِمَ عُمَرُ، وَلَوْ أَنَّ أُحُدًا ارْفَضَّ لِلَّذِي صَنَعْتُمْ بِعُثْمَانَ لَكَانَ»


Bukhari-3861

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 அபூதர் கிஃபாரீ -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி.102
3861. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ தர்(ம்ஃபாரீ) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரிடம், ‘இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, ‘வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகிற ஓர் இறைத்தூதர்’ என்று தம்மை வாதிடுகிற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரின் சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா!’ என்று கூறினார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி(ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு, அபூ தர்ரிடம் திரும்பிச் சென்று, ‘அவர் நற்குணங்களைக் கைக் கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை பார்த்தேன். ஒரு வாக்கையும், (செவியுற்றேன்) அது கவிதையாக இல்லை’ என்று கூறினார். அபூ தர், ‘நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்ய வில்லை’ என்று கூறிவிட்டு, பயணஉணவு எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தன்னுடைய தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூ தர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றனர். நபி(ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த

لَمَّا بَلَغَ أَبَا ذَرٍّ مَبْعَثُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِأَخِيهِ: ارْكَبْ إِلَى هَذَا الوَادِي فَاعْلَمْ لِي عِلْمَ هَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، يَأْتِيهِ الخَبَرُ مِنَ السَّمَاءِ، وَاسْمَعْ مِنْ قَوْلِهِ ثُمَّ ائْتِنِي، فَانْطَلَقَ الأَخُ حَتَّى قَدِمَهُ، وَسَمِعَ مِنْ قَوْلِهِ، ثُمَّ رَجَعَ إِلَى أَبِي ذَرٍّ فَقَالَ لَهُ: رَأَيْتُهُ يَأْمُرُ بِمَكَارِمِ الأَخْلاَقِ، وَكَلاَمًا مَا هُوَ بِالشِّعْرِ، فَقَالَ: مَا شَفَيْتَنِي مِمَّا أَرَدْتُ، فَتَزَوَّدَ وَحَمَلَ شَنَّةً لَهُ فِيهَا مَاءٌ، حَتَّى قَدِمَ مَكَّةَ، فَأَتَى المَسْجِدَ فَالْتَمَسَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ يَعْرِفُهُ، وَكَرِهَ أَنْ يَسْأَلَ عَنْهُ حَتَّى أَدْرَكَهُ بَعْضُ اللَّيْلِ، فَاضْطَجَعَ فَرَآهُ عَلِيٌّ فَعَرَفَ أَنَّهُ غَرِيبٌ، فَلَمَّا رَآهُ تَبِعَهُ فَلَمْ يَسْأَلْ وَاحِدٌ مِنْهُمَا صَاحِبَهُ عَنْ شَيْءٍ حَتَّى أَصْبَحَ، ثُمَّ احْتَمَلَ قِرْبَتَهُ وَزَادَهُ إِلَى المَسْجِدِ، وَظَلَّ ذَلِكَ اليَوْمَ وَلاَ يَرَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَمْسَى، فَعَادَ إِلَى مَضْجَعِهِ، فَمَرَّ بِهِ عَلِيٌّ فَقَالَ: أَمَا نَالَ لِلرَّجُلِ أَنْ يَعْلَمَ مَنْزِلَهُ؟ فَأَقَامَهُ فَذَهَبَ بِهِ مَعَهُ، لاَ يَسْأَلُ وَاحِدٌ مِنْهُمَا صَاحِبَهُ عَنْ شَيْءٍ، حَتَّى إِذَا كَانَ يَوْمُ الثَّالِثِ، فَعَادَ عَلِيٌّ عَلَى مِثْلِ ذَلِكَ، فَأَقَامَ مَعَهُ ثُمَّ قَالَ: أَلاَ تُحَدِّثُنِي مَا الَّذِي أَقْدَمَكَ؟ قَالَ: إِنْ أَعْطَيْتَنِي عَهْدًا وَمِيثَاقًا لَتُرْشِدَنِّي فَعَلْتُ، فَفَعَلَ فَأَخْبَرَهُ، قَالَ: فَإِنَّهُ حَقٌّ، وَهُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا أَصْبَحْتَ فَاتْبَعْنِي، فَإِنِّي إِنْ رَأَيْتُ شَيْئًا أَخَافُ عَلَيْكَ قُمْتُ كَأَنِّي أُرِيقُ المَاءَ، فَإِنْ مَضَيْتُ فَاتْبَعْنِي حَتَّى تَدْخُلَ مَدْخَلِي فَفَعَلَ، فَانْطَلَقَ يَقْفُوهُ حَتَّى دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَدَخَلَ مَعَهُ، فَسَمِعَ مِنْ قَوْلِهِ وَأَسْلَمَ مَكَانَهُ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْجِعْ إِلَى قَوْمِكَ فَأَخْبِرْهُمْ حَتَّى يَأْتِيَكَ أَمْرِي» قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَأَصْرُخَنَّ بِهَا بَيْنَ ظَهْرَانَيْهِمْ، فَخَرَجَ حَتَّى أَتَى المَسْجِدَ، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، ثُمَّ قَامَ القَوْمُ فَضَرَبُوهُ حَتَّى أَضْجَعُوهُ، وَأَتَى العَبَّاسُ فَأَكَبَّ عَلَيْهِ، قَالَ: وَيْلَكُمْ أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّهُ مِنْ غِفَارٍ، وَأَنَّ طَرِيقَ تِجَارِكُمْ إِلَى الشَّأْمِ، فَأَنْقَذَهُ مِنْهُمْ، ثُمَّ عَادَ مِنَ الغَدِ لِمِثْلِهَا، فَضَرَبُوهُ وَثَارُوا إِلَيْهِ، فَأَكَبَّ العَبَّاسُ عَلَيْهِ


Bukhari-3860

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3860. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

உளூச் செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி (ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒரு நாள்) அவற்றைச் சுமந்து கொண்டு நான் நபி (ஸல்), அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, ‘யார் அது?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நான் அபூ ஹுரைரா (ரலி) தான் (வருகிறேன்)’ என்று நான் சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘நான் (இயற்கைக் கடன் முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்குச் சில கற்களைத் தேடி (எடுத்து)க் கொண்டு வா. நீ என்னிடம் எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்து விடாதே’ என்று கூறினார்கள். நான் என் ஆடையின் ஓரத்தில் கற்களை வைத்துச் சுமந்து கொண்டு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பி விட்டேன்.

அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, ‘எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம். என்று ஏன் சொன்னீர்கள்?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம் ‘நஸீபீன்’ என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜினகளாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், ‘அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும்

أَنَّهُ كَانَ يَحْمِلُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِدَاوَةً لِوَضُوئِهِ وَحَاجَتِهِ، فَبَيْنَمَا هُوَ يَتْبَعُهُ بِهَا، فَقَالَ: «مَنْ هَذَا؟» فَقَالَ: أَنَا أَبُو هُرَيْرَةَ، فَقَالَ: «ابْغِنِي أَحْجَارًا أَسْتَنْفِضْ بِهَا، وَلاَ تَأْتِنِي بِعَظْمٍ وَلاَ بِرَوْثَةٍ». فَأَتَيْتُهُ بِأَحْجَارٍ أَحْمِلُهَا فِي طَرَفِ ثَوْبِي، حَتَّى وَضَعْتُهَا إِلَى جَنْبِهِ، ثُمَّ انْصَرَفْتُ حَتَّى إِذَا فَرَغَ مَشَيْتُ، فَقُلْتُ: مَا بَالُ العَظْمِ وَالرَّوْثَةِ؟ قَالَ: «هُمَا مِنْ طَعَامِ الجِنِّ، وَإِنَّهُ أَتَانِي وَفْدُ جِنِّ نَصِيبِينَ، وَنِعْمَ الجِنُّ، فَسَأَلُونِي الزَّادَ، فَدَعَوْتُ اللَّهَ لَهُمْ أَنْ لاَ يَمُرُّوا بِعَظْمٍ، وَلاَ بِرَوْثَةٍ إِلَّا وَجَدُوا عَلَيْهَا طَعَامًا»


Bukhari-3859

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

ஜின்கள் பற்றிய குறிப்பு.97

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எனக்கு இவ்வாறு வஹீ அனுப்பப்பட்டுள்ளது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர்…(72 : 1-15) 98

3859. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஜின்கள் குர்ஆனை செவிமடுத்த இரவில், நபியவர்களை (இன்னாரென்று) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தவர் யார்?’ என்று நான் மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஜின்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் தாம் என்று) அவர்களை அறிவித்துக் கொடுத்தது ஒரு மரம் தான் என உங்கள் தந்தை – அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) எனக்கு அறிவித்தார்கள்’ என்று கூறினார்கள்.
Book : 63


سَأَلْتُ مَسْرُوقًا: «مَنْ آذَنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا القُرْآنَ؟»، فَقَالَ: حَدَّثَنِي أَبُوكَ يَعْنِي عَبْدَ اللَّهِ أَنَّهُ «آذَنَتْ بِهِمْ شَجَرَةٌ»


Bukhari-3858

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 சஅத் பின் அபீ வக்காஸ் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது.
3858. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), ‘நான் இஸ்லாத்தை ஏற்ற நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர். அந்நாளில்) தவிர, (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தை ஏற்றிடவில்லை. நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக ஏழு நாள்கள் (வரை) இருந்தேன்’ என்று சொல்லக் கேட்டேன்.
Book : 63


«مَا أَسْلَمَ أَحَدٌ إِلَّا فِي اليَوْمِ الَّذِي أَسْلَمْتُ فِيهِ، وَلَقَدْ مَكُثْتُ سَبْعَةَ أَيَّامٍ وَإِنِّي لَثُلُثُ الإِسْلاَمِ»


Bukhari-3857

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 அபூபக்ர் அஸ்ஸித்தீக் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது.94
3857. அம்மார் இப்னு யாசிர்(ரலி) அறிவித்தார்.
(இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்.
Book : 63


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا مَعَهُ إِلَّا خَمْسَةُ أَعْبُدٍ وَامْرَأَتَانِ، وَأَبُو بَكْرٍ»


Bukhari-3856

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3856. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களிடம், ‘இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்’ என்று கேட்டேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் ‘ஹிஜ்ர்’ பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி(ஸல்) அவர்களின் கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூ பக்ர்(ரலி) முன்னால் வந்து அவனுடைய தோளைப் பிடித்து நபி(ஸல்) அவர்களைவிட்டுவிலக்கினார்கள். மேலும், ‘என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்’ (திருக்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள்.
இதே போன்று இன்னும் சில அறிவிப்புகள் ஆரம்பத்தில் சிறு சிறு மாற்றங்களுடன் வந்துள்ளன.
Book :63


أَخْبِرْنِي بِأَشَدِّ شَيْءٍ صَنَعَهُ المُشْرِكُونَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي حِجْرِ الكَعْبَةِ، إِذْ أَقْبَلَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ، فَوَضَعَ ثَوْبَهُ فِي عُنُقِهِ، فَخَنَقَهُ خَنْقًا شَدِيدًا» فَأَقْبَلَ أَبُو بَكْرٍ حَتَّى أَخَذَ بِمَنْكِبِهِ، وَدَفَعَهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: {أَتَقْتُلُونَ رَجُلًا أَنْ يَقُولَ رَبِّيَ اللَّهُ} [غافر: 28] الآيَةَ، تَابَعَهُ ابْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، قُلْتُ: لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَقَالَ: عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قِيلَ لِعَمْرِو بْنِ العَاصِ، وَقَالَ: مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، حَدَّثَنِي عَمْرُو بْنُ العَاصِ


Next Page » « Previous Page