Category: புஹாரி

Bukhari

Bukhari-7378

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 அல்லாஹ்தான் உணவளிப்பவன்; வ-மையுள்ளவன்; உறுதியானவன் எனும் (51:58ஆவது) இறைவசனம்.

7378. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.9

Book : 97


«مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدَّعُونَ لَهُ الوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ»


Bukhari-7377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7377. உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்களின் புதல்வியரில் ஒருவரின் (ஸைனப்(ரலி) அவர்களின்) தூதுவர் அங்கு வந்தார். ஸைனப் உடைய புதல்வர் இறக்கும் தறுவாயில் இருப்பதாகச் சொல்லி, ஸைனப் அழைப்பதாகத் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ ஸைனபிடம் சென்று, ‘அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் அவனுக்குரியதே! அவன் கொடுத்ததும் அவனுக்குரியது தான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, (அல்லாஹ்விடம் அதற்கான) நன்மையை எதிர்பார்த்து பொறுமையாக இருக்கச் சொல்’ என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால், அவர்களின் புதல்வியார், (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கண்டிப்பாக வரவேண்டுமெனச் சொல்லி தம் தூதுவரை மீண்டும் அனுப்பிவைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் (தம் புதல்வியின் வீட்டுக்குச் செல்ல) எழுந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து ஸஅத் இப்னு உபாதா(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி) ஆகியோரும் எழுந்தனர். (அங்கு சென்றவுடன்) நபி(ஸல்) அவர்களிடம் அக்குழநதை தரப்பட்டது. அப்போது தோல் பைக்குள் உள்ள காற்றைப் போன்று அது (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட

كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَسُولُ إِحْدَى بَنَاتِهِ، يَدْعُوهُ إِلَى ابْنِهَا فِي المَوْتِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْجِعْ إِلَيْهَا فَأَخْبِرْهَا أَنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَمُرْهَا فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ»، فَأَعَادَتِ الرَّسُولَ أَنَّهَا قَدْ أَقْسَمَتْ لَتَأْتِيَنَّهَا، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَامَ مَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، فَدُفِعَ الصَّبِيُّ إِلَيْهِ وَنَفْسُهُ تَقَعْقَعُ كَأَنَّهَا فِي شَنٍّ، فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ لَهُ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ قَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»


Bukhari-7376

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 (நபியே!) கூறுங்கள்: அவனை அல்லாஹ் என்று நீங்கள் அழையுங்கள்; அல்லது அர் ரஹ்மான் (பேரருளாளன்) என்று அழையுங்கள். எப்படி நீங்கள் அழைத்தாலும் அழகிய திருப்பெயர்கள் அவனுக்கே உரியனவாகும் எனும் (17:110ஆவது) இறைவசனம்.

7376. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.

என ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.7

Book : 97a


«لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ»


Bukhari-7375

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7375. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவொன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்’ என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், ‘ஏனெனில், அந்த பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்’ என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்’ என்று கூறினார்கள்.

Book :97


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا عَلَى سَرِيَّةٍ، وَكَانَ يَقْرَأُ لِأَصْحَابِهِ فِي صَلاَتِهِمْ فَيَخْتِمُ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «سَلُوهُ لِأَيِّ شَيْءٍ يَصْنَعُ ذَلِكَ؟»، فَسَأَلُوهُ، فَقَالَ: لِأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ»


Bukhari-7374

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7374. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

ஒருவர், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ (‘நபியே! கூறுக: அல்லாஹ் ஒருவனே’) எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை ஒருவர் செவிமடுத்தார். விடிந்ததும் அம்மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அம்மனிதர் (பேசி விதம்) அந்த அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப ஓதியதை)க் குறைத்து மதிப்பிட்டதைப் போன்றிருந்தது.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானது’ என்றார்கள்.5

இதே ஹதீஸ் கத்தாதா இப்னு நுஅமான்(ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.6

Book :97


أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ لَهُ ذَلِكَ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ القُرْآنِ» زَادَ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَخْبَرَنِي أَخِي قَتَادَةُ بْنُ النُّعْمَانِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7373. முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும். (அவ்வாறு அவர்கள் செய்தால்) அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமலிருப்பது தான்’ என்று பதிலளித்தார்கள்.4

Book :97


«يَا مُعَاذُ أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى العِبَادِ؟»، قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، أَتَدْرِي مَا حَقُّهُمْ عَلَيْهِ؟»، قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «أَنْ لاَ يُعَذِّبَهُمْ»


Bukhari-7372

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7372. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்’ என்றார்கள்.3

Book :97


لَمَّا بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى نَحْوِ أَهْلِ اليَمَنِ قَالَ لَهُ: «إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الكِتَابِ، فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى، فَإِذَا عَرَفُوا ذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي يَوْمِهِمْ وَلَيْلَتِهِمْ، فَإِذَا صَلَّوْا، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ زَكَاةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ غَنِيِّهِمْ فَتُرَدُّ عَلَى فَقِيرِهِمْ، فَإِذَا أَقَرُّوا بِذَلِكَ فَخُذْ مِنْهُمْ، وَتَوَقَّ كَرَائِمَ أَمْوَالِ النَّاسِ»


Bukhari-7371

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 இறைவனின் நாட்டமும் விருப்பமும்.104 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் நாடினாலன்றி (எந்தவொன்றையும்) நீங்கள் நாடமாட்டீர்கள். (76:30) (நபியே!) கூறுக: அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்துக்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்… (3:26). (நபியே!) எந்த விஷயத்தைப் பற்றியும் அல்லாஹ் நாடினாலன்றி நிச்சயமாக நான் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன் என்று கூறாதீர்கள். (18:23) (நபியே!) நீர் நேசிப்பவர்களை (யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது;ஆனால், அல்லாஹ், தான் நாடியவர்களை நேர் வழியில் செலுத்துகிறான் (28:56). இந்த வசனம் அபூதாலிப் அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது என முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறினார்கள்.105 அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குச் சிரமம் தர விரும்பவில்லை. (2:185)

7371. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தார்கள்.2

Book : 97


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى اليَمَنِ»


Bukhari-7370

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7370. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘என் வீட்டாரை இகழ்ந்து பேசுகிற சிலரைப் பற்றி நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கின்றீர்கள்? ஒருபோதும் என் வீட்டாரிடம் நான் தீமை எதையும் அறிந்தில்லை’ என்றார்கள்.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆயிஷா(ரலி) அவர்களிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! என் தாய்வீட்டிற்குச் செல்ல எனக்கு அனுமதியளிக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அவ்வாறே நப(ஸல்) அவர்கள் ஆயிஷாவுக்கு அனுமதியளித்து அவர்களுடன் பணியாளையும் அனுப்பி வைத்தார்கள். அன்சாரிகளில் ஒருவர், ‘இறைவன் தூயவன். இப்படி (அவதூறு) பேசுவது நமக்குத் தகாது. இறைவன் தூயவன். இது மாபெரும் அபாண்டம்’ என்றார்.

Book :96


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ: مَا تُشِيرُونَ عَلَيَّ فِي قَوْمٍ يَسُبُّونَ أَهْلِي، مَا عَلِمْتُ عَلَيْهِمْ مِنْ سُوءٍ قَطُّ “، وَعَنْ عُرْوَةَ قَالَ: لَمَّا أُخْبِرَتْ عَائِشَةُ بِالأَمْرِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَتَأْذَنُ لِي أَنْ أَنْطَلِقَ إِلَى أَهْلِي؟ فَأَذِنَ لَهَا، وَأَرْسَلَ مَعَهَا الغُلاَمَ، وَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: سُبْحَانَكَ مَا يَكُونُ لَنَا أَنْ نَتَكَلَّمَ بِهَذَا، سُبْحَانَكَ هَذَا بُهْتَانٌ عَظِيمٌ


Bukhari-7369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் தம் விவகாரங்களை தமக்கிடையே கலந்தா லோசித்து (முடிவு) செய்வார்கள். (42:38) அல்லாஹ் கூறுகின்றான்:(நபியே!) (முக்கியமான) பிரச்சினைகளில் அவர் களுடன் கலந்தாலோசிப்பீராக. (3:159) (ஒரு விஷயத்தில்) தெளிவு ஏற்பட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்புதான் கலந்தா லோசனை என்பதெல்லாம். அல்லாஹ் கூறுகின்றான்: ஓர் உறுதி(யான முடிவு)க்கு நீங்கள் வந்துவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்துச் செயல்படு)த்திடுவீராக (3:159). ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதியான ஒரு முடிவுக்கு வந்துவிட்ட பின், அது தொடர்பாக அல்லாஹ்வையும் அவன் தூதரையும் முந்திக் கொண்டு கருத்துச் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை.105 உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், ஊரிலேயே தங்கியிருந்து (எதிரிகளின் படையை எதிர்) கொள்ளலாமா? அல்லது (பகைவர்களின் படையை எதிர்கொள்ள ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாமா? என்று ஆலோசனை கேட்க அவர்கள், (ஊருக்கு) வெளியே புறப்பட்டுப் போகலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை அணிந்து கொண்டு (ஊருக்கு வெளியே செல்ல) உறுதி கொண்டு புறப்பட்ட போது,தோழர்கள் ஊரிலேயே தங்கி விடுங்கள் என்று (மாற்று யோசனை) சொன்னார்கள்.

حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، قَالَتْ: وَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَأُسَامَةَ بْنَ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، حِينَ اسْتَلْبَثَ الوَحْيُ، يَسْأَلُهُمَا وَهُوَ يَسْتَشِيرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ: فَأَشَارَ بِالَّذِي يَعْلَمُ مِنْ بَرَاءَةِ أَهْلِهِ، وَأَمَّا عَلِيٌّ فَقَالَ: لَمْ يُضَيِّقِ اللَّهُ عَلَيْكَ، وَالنِّسَاءُ سِوَاهَا كَثِيرٌ، وَسَلِ الجَارِيَةَ تَصْدُقْكَ. فَقَالَ: «هَلْ رَأَيْتِ مِنْ شَيْءٍ يَرِيبُكِ؟»، قَالَتْ: مَا رَأَيْتُ أَمْرًا أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ، تَنَامُ عَنْ عَجِينِ أَهْلِهَا، فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ، فَقَامَ عَلَى المِنْبَرِ فَقَالَ: «يَا مَعْشَرَ المُسْلِمِينَ، مَنْ يَعْذِرُنِي مِنْ رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِي، وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي إِلَّا خَيْرًا» فَذَكَرَ بَرَاءَةَ عَائِشَةَ وَقَالَ أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ


Next Page » « Previous Page