Category: புஹாரி

Bukhari

Bukhari-3643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3643. “(மேற்சொன்ன ஹதீஸை நான் உர்வா அவர்களிடம் கேட்கவில்லை.) ஆனால், நபி  (ஸல்) அவர்கள், “குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரையிலும் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது’ என்று கூறியதாக உர்வா அல்பாரிகீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

“அவர்களின் வீட்டில் நான் எழுபது குதிரைகளைப் பார்த்திருக்கிறேன்” என்று ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

மேலும், அறிவிப்பாளர் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், “உர்வா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் சார்பாக) ஓர் ஆட்டை வாங்குவார்கள். அது குர்பானீ ஆடு போலும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம்: 61


وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الخَيْرُ مَعْقُودٌ بِنَوَاصِي الخَيْلِ إِلَى يَوْمِ القِيَامَةِ» قَالَ: وَقَدْ رَأَيْتُ فِي دَارِهِ سَبْعِينَ فَرَسًا قَالَ سُفْيَانُ يَشْتَرِي لَهُ شَاةً كَأَنَّهَا أُضْحِيَّةٌ


Bukhari-3642

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3642. ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் குலத்தார் உர்வா பின் அபில்ஜஅத் அல்பாரிகீ (ரலி) அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். உர்வா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், அவர் ஓர் ஆட்டை வாங்குவதற்காக ஒரு தீனார் (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவர், அவ்விரண்டில் ஒன்றை ஒரு தீனாருக்கு விற்றுவிட்டு ஒரு தீனாரையும், ஓர் ஆட்டையும் கொண்டுவந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது வியாபாரத்தில் அவருக்கு வளம் கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்துவிடுவார் என்ற நிலையில் இருந்தார்.

அறிவிப்பாளர் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஹஸன் பின் உமாரா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை, உர்வா பின் அபுல்ஜஅத் (ரலி) அவர்களிடமிருந்து ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்று சொல்லி எம்மிடம் கொண்டுவந்தார். நான் அதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஷபீப் பின் ஃகர்கதா (ரஹ்) அவர்களிடம் சென்றேன்.

அவர்கள் என்னிடம், “நான் இந்த ஹதீஸை உர்வா அல்பாரிகீ (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுறவில்லை. என் குலத்தார் உர்வா அவர்களிடமிருந்து அறிவிப்பதை மட்டுமே நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَعْطَاهُ دِينَارًا يَشْتَرِي لَهُ بِهِ شَاةً، فَاشْتَرَى لَهُ بِهِ شَاتَيْنِ، فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ، وَجَاءَهُ بِدِينَارٍ وَشَاةٍ، فَدَعَا لَهُ بِالْبَرَكَةِ فِي بَيْعِهِ، وَكَانَ لَوِ اشْتَرَى التُّرَابَ لَرَبِحَ فِيهِ»،

قَالَ سُفْيَانُ: كَانَ الحَسَنُ بْنُ عُمَارَةَ جَاءَنَا بِهَذَا الحَدِيثِ عَنْهُ، قَالَ: سَمِعَهُ شَبِيبٌ مِنْ عُرْوَةَ فَأَتَيْتُهُ، فَقَالَ شَبِيبٌ إِنِّي لَمْ أَسْمَعْهُ مِنْ عُرْوَةَ، قَالَ سَمِعْتُ الحَيَّ يُخْبِرُونَهُ عَنْهُ


Bukhari-3641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3641. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள், அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்.

இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்க, அவர்களிடம் மாலிக் பின் யுகாமிர் (ரஹ்) அவர்கள், “(அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தும்) அவர்கள் ஷாம் தேசத்திலிருப்பார்கள்’ என முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள்.

அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், “இந்த மாலிக் பின் யுகாமிர், “ஷாம் தேசத்தில் அவர்கள் இருப்பார்கள்’ என முஆத் (ரலி) அவர்கள் சொல்ல தாம் கேட்டதாகக் கருதுகிறார்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம்: 61


«لاَ يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ، لاَ يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ، وَلاَ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ»

قَالَ عُمَيْرٌ: فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ: قَالَ مُعَاذٌ: وَهُمْ بِالشَّأْمِ،

فَقَالَ مُعَاوِيَةُ: هَذَا مَالِكٌ يَزْعُمُ أَنَّهُ سَمِعَ مُعَاذًا يَقُولُ: وَهُمْ بِالشَّأْمِ


Bukhari-3640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3640. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள்.
என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
Book :61


«لاَ يَزَالُ نَاسٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ»


Bukhari-3639

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28
3639. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிக் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.
Book : 61


«أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَمَعَهُمَا مِثْلُ المِصْبَاحَيْنِ يُضِيئَانِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ»


Bukhari-3638

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3638. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.
Book :61


«أَنَّ القَمَرَ انْشَقَّ فِي زَمَانِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3637

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3637. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
மக்காவாசிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி(ஸல்) அவர்கள் காட்டினார்கள்.
Book :61


أَنَّ أَهْلَ مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرِيَهُمْ آيَةً «فَأَرَاهُمُ انْشِقَاقَ القَمَرِ»


Bukhari-3636

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (நபிகளார் இறைத்தூதரே என்பதற்கு) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும் படி கோரியதன் பேரில் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் பிளவுபடுவதை அவர்களுக்குக் காட்டியது.
3636. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.
Book : 61


انْشَقَّ القَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شِقَّتَيْنِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْهَدُوا»


Bukhari-3635

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 அல்லாஹ் கூறுகிறான். எவர்களுக்கு நாம் வேதம் அருளியிருக் கின்றோமோ அவர்கள், தங்களுடைய மைந்தர்களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் (கிப்லாவாக்கப்பட்ட) இந்த இடத்தையும் நன்கு அறிவார்கள். எனினும், அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள். (2:146)
3635. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கவர்கள், ‘அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) ‘நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் ‘விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்’

أَنَّ اليَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ». فَقَالُوا: نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: ارْفَعْ يَدَكَ، فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ، فَقَالُوا: صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَا، قَالَ عَبْدُ اللَّهِ: فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى المَرْأَةِ يَقِيهَا الحِجَارَةَ


Bukhari-3634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3634. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்; அப்போது உம்மு ஸலமா (ரலி) அவர்களும் அங்கிருந்தார்கள். (வந்தவர்) பேசத் தொடங்கி, பின்னர் எழுந்து சென்றுவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், “இவர் யார்?” என்று கேட்டார்கள் (அல்லது அது போன்றதொரு வார்த்தையைக் கூறினார்கள்). அதற்கு அவர், “இவர் திஹ்யா” என்று பதிலளித்தார்கள்.


பிறகு உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் (வந்தவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்று அறிவிக்கும் வரை, அவரைத் திஹ்யா என்றே நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.


(அறிவிப்பாளர் கூறுகிறார்:) நான் அபூஉஸ்மானிடம், “இதை யாரிடமிருந்து நீங்கள் கேட்டீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 61


أَنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعِنْدَهُ أُمُّ سَلَمَةَ، فَجَعَلَ يُحَدِّثُ ثُمَّ قَامَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُمِّ سَلَمَةَ: «مَنْ هَذَا؟» أَوْ كَمَا قَالَ، قَالَ: قَالَتْ: هَذَا دِحْيَةُ، قَالَتْ أُمُّ سَلَمَةَ: ايْمُ اللَّهِ مَا حَسِبْتُهُ إِلَّا إِيَّاهُ، حَتَّى سَمِعْتُ خُطْبَةَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْبِرُ جِبْرِيلَ، أَوْ كَمَا قَالَ،

قَالَ: فَقُلْتُ لِأَبِي عُثْمَانَ: مِمَّنْ سَمِعْتَ هَذَا؟ قَالَ: مِنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ


Next Page » « Previous Page