Category: புஹாரி

Bukhari

Bukhari-7358

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7358. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உம்மு ஹுஃபைத் பின்த் அல் ஹாரிஸ் இப்னி ஹஸ்ன்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சிறிது நெய், பாலாடைக் கட்டி, சில உடும்புகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள். (உணவு வேளையில்) உடும்புகளைக் கொண்டு வரும்படி நபி(ஸல்) அவர்கள் கூற, (அவை கொண்டு வரப்பட்டு) நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டன. ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதை அருவருப்பவர்களைப் போன்று அவற்றை உண்ணாமல்விட்டுவிட்டார்கள். (நெய் மற்றும் பாலாடைக் கட்டியை மட்டும் உண்டார்கள்.) உடும்புகள் தடை செய்யப்பட்டவையாய் இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் அவை பரிமாறப்பட்டிருக்கமாட்டா. அவற்றை உண்ணும்படி நபியவர்கள் சொல்லியிருக்கவுமாட்டார்கள்.93

Book :96


أَنَّ أُمَّ حُفَيْدٍ بِنْتَ الحَارِثِ بْنِ حَزْنٍ «أَهْدَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمْنًا وَأَقِطًا وَأَضُبًّا، فَدَعَا بِهِنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُكِلْنَ عَلَى مَائِدَتِهِ، فَتَرَكَهُنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَالْمُتَقَذِّرِ لَهُنَّ»، وَلَوْ كُنَّ حَرَامًا مَا أُكِلْنَ عَلَى مَائِدَتِهِ، وَلاَ أَمَرَ بِأَكْلِهِنَّ


Bukhari-7357

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7357. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, மாதவிடாய் குறித்து ‘அதிலிருந்து (தூய்மையாகிக் கொள்ள) நாங்கள் எவ்வாறு குளிக்கவேண்டும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘கஸ்தூரி (நறுமணப் பொருள்) தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்துத்) தூய்மைப்படுத்திக்கொள்’ என்று பதிலளித்தார்கள்.

அந்தப் பெண்மணி, ‘இறைத்தூதர் அவர்களே! இதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்வேன்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘தூய்மைப்படுத்திக்கொள்’ என்று பதிலளித்தார்கள். அப்பெண்மணி (மீண்டும்,) ‘அதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்வேன், இறைத்தூதர் அவர்களே?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் (மீண்டும்) ‘அதனால் தூய்மைப்படுத்திக்கொள்’ என்று பதிலளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டு அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து (பஞ்சினால்) எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என) அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன்.92

أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الحَيْضِ، كَيْفَ تَغْتَسِلُ مِنْهُ؟ قَالَ: «تَأْخُذِينَ فِرْصَةً مُمَسَّكَةً فَتَوَضَّئِينَ بِهَا»، قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّئِي»، قَالَتْ: كَيْفَ أَتَوَضَّأُ بِهَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَوَضَّئِينَ بِهَا»، قَالَتْ عَائِشَةُ: فَعَرَفْتُ الَّذِي يُرِيدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَذَبْتُهَا إِلَيَّ فَعَلَّمْتُهَا