Category: புஹாரி

Bukhari

Bukhari-7347

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான் எனும் (18:54ஆவது) இறை வசனம். அல்லாஹ் கூறுகின்றான்: வேதக்காரர் களிடம் மிக அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். (29:46)75

7347. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், ‘நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்’ என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தம் தொடையில் தட்டிக்கொண்டே ‘மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன்.76

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ وَفَاطِمَةَ – عَلَيْهَا السَّلاَمُ – بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُمْ: «أَلاَ تُصَلُّونَ؟»، فَقَالَ عَلِيٌّ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَالَ لَهُ ذَلِكَ، وَلَمْ يَرْجِعْ إِلَيْهِ شَيْئًا، ثُمَّ سَمِعَهُ وَهُوَ مُدْبِرٌ، يَضْرِبُ فَخِذَهُ وَهُوَ يَقُولُ: {وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا} [الكهف: 54]، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” يُقَالُ: مَا أَتَاكَ لَيْلًا فَهُوَ طَارِقٌ “، وَيُقَالُ {الطَّارِقُ} [الطارق: 2]: «النَّجْمُ»، وَ {الثَّاقِبُ} [الطارق: 3]: «المُضِيءُ»، يُقَالُ: «أَثْقِبْ نَارَكَ لِلْمُوقِدِ»


Bukhari-7346

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

(அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனும் (3:128ஆவது) இறைவசனம்.

7346. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின்போது தம் தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து’ (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘இறைவா! இன்னாரையும் இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

உடனே கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ், ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவனே அவர்களை வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளினான்.74

அத்தியாயம்: 96


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي صَلاَةِ الفَجْرِ وَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: «اللَّهُمَّ رَبَّنَا، وَلَكَ الحَمْدُ فِي الأَخِيرَةِ»، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ العَنْ فُلاَنًا وَفُلاَنًا»، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128]


Bukhari-7345

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7345. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பத்னூல்வாதியிலுள்ள) துல்ஹுலைஃபாவில் (இரவின் கடைசிநேரத்தில்) ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக் கொண்டு) இருந்தபோது அவர்களுக்குக் கனவு காட்டப்பட்டது. அப்போது (கனவில்) ‘சுபிட்சமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கின்றீர்கள்’ என்று நபியவர்களிடம் கூறப்பட்டது. 73

Book :96


أَنَّهُ أُرِيَ وَهُوَ فِي مُعَرَّسِهِ بِذِي الحُلَيْفَةِ، فَقِيلَ لَهُ: إِنَّكَ بِبَطْحَاءَ مُبَارَكَةٍ


Bukhari-7344

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7344. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்கு ‘கர்ன்’ எனுமிடத்தையும், ஷாம் வாசிகளுக்கு ‘ஜுஹ்ஃபா’வையும் மதீனாவாசிகளுக்கு ‘துல்ஹுலைஃபா’வையும் இஹ்ராம் கட்டும் எல்லையாக நிர்ணயித்தார்கள்.

இதை நபி(ஸல்) அவர்கள் கூற நான், செவியேற்றேன். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள், ‘யலம்லம்’ எனுமிடம் யமன்வாசிகளுக்கு (இஹ்ராம் கட்டுவதற்குரிய) இடமாகும்’ என்று கூறினார்கள் என எனக்குத் தகவல் கிடைத்தது. (இந்த ஹதீஸை அறிவிக்கையில் இராக் நாட்டைப் பற்றியும் பேசப்பட்டது. அப்போது இப்னு உமர்(ரலி) அவர்கள், அந்நாளில் இராக் (வாசிகளிடையே முஸ்லிம்கள்) இருக்கவில்லை’ என்று கூறினார்கள்.72

Book :96


وَقَّتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَرْنًا لِأَهْلِ نَجْدٍ، وَالجُحْفَةَ لِأَهْلِ الشَّأْمِ، وَذَا الحُلَيْفَةِ لِأَهْلِ المَدِينَةِ»، قَالَ: سَمِعْتُ هَذَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَلَغَنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَلِأَهْلِ اليَمَنِ يَلَمْلَمُ»، وَذُكِرَ العِرَاقُ فَقَالَ: لَمْ يَكُنْ عِرَاقٌ يَوْمَئِذٍ


Bukhari-7343

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7343. உமர்(ரலி) அறிவித்தார்.

‘என் இறைவனிடமிருந்து வரக்கூடிய (வான)வர் இன்றிரவு என்னிடம் வந்து, இந்த சுபிட்சம் மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக (ஹஜ்ஜுல் கிரான் செய்வதாக)ச் சொல்வீராக என்று கூறினார்’ என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் பள்ளத்தாக்கில் இருந்தபோது என்னிடம் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘ஹஜ்ஜில் உம்ராவைச் சேர்ப்பதாக..’ என்று இடம் பெற்றுள்ளது.71

Book :96


أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي، وَهُوَ بِالعَقِيقِ، أَنْ صَلِّ فِي هَذَا الوَادِي المُبَارَكِ، وَقُلْ: عُمْرَةٌ وَحَجَّةٌ ” وَقَالَ هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَلِيٌّ: «عُمْرَةٌ فِي حَجَّةٍ»


Bukhari-7342

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7342. அபூ புர்தா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் மதீனா சென்றிருந்தேன். அங்கு அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் என்னிடம், ‘வீட்டிற்குப் போகலாம் (வாருங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருந்திய ஒரு பாத்திரத்தில் உங்களுக்கு நான் அருந்தக் கொடுப்பேன்; மேலும், நபி(ஸல்) அவர்கள் தொழுத பள்ளிவாசலில் நீங்கள் தொழலாம்’ என்றார்கள். எனவே, நான் அவர்களுடன் சென்றேன். அவர்கள் எனக்கு (அரைத்த) மாவு பானத்தை அருந்தக் கொடுத்தார்கள். பேரீச்சம் பழத்தை உண்ணக் கொடுத்தார்கள். அவர்களின் பள்ளிவாசலில் தொழுதேன்.70

Book :96


قَدِمْتُ المَدِينَةَ فَلَقِيَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ، فَقَالَ لِي: ” انْطَلِقْ إِلَى المَنْزِلِ، فَأَسْقِيَكَ فِي قَدَحٍ شَرِبَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتُصَلِّي فِي مَسْجِدٍ صَلَّى فِيهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقْتُ مَعَهُ، فَسَقَانِي سَوِيقًا، وَأَطْعَمَنِي تَمْرًا، وَصَلَّيْتُ فِي مَسْجِدِهِ


Bukhari-7341

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7341. மேலும், நபி(ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (நிராயுதபாணிகளான நபித்தோழர்களை வஞ்சகம் செய்து கொலை செய்த) பனூ சுலைம் குலத்தாரின் சில குடும்பங்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.69

Book :96


وَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ»


Bukhari-7340

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7340. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கும் குறைஷிகளுக்கும் இடையே மதீனாவில் இருக்கும் என் வீட்டில் வைத்து நட்புறவு முறையை ஏற்படுத்தினார்கள்.68

இதன் தொடர்ச்சி அடுத்த ஹதீஸ் எண்-7341 .

Book :96


«حَالَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الأَنْصَارِ وَقُرَيْشٍ فِي دَارِي الَّتِي بِالْمَدِينَةِ،


Bukhari-7339

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7339. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள் (ஒரு பாத்திரத்தைக் காட்டி), ‘இந்தப் பாத்திரம் நானும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் குளிப்பதற்காக வைக்கப்பட்டு வந்தது. நாங்கள் இருவரும் ஒரு சேர இதில் குளிக்கத் தொடங்குவோம்’ என்று கூறினார்கள்.67

Book :96


قَدْ «كَانَ يُوضَعُ لِي وَلِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا المِرْكَنُ، فَنَشْرَعُ فِيهِ جَمِيعًا»


Bukhari-7338

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7338. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருந்ததை செவியுற்றேன்.

Book :96


«سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ خَطَبَنَا عَلَى مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Next Page » « Previous Page